கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய  இணைய  இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில்  இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gif



பேஸ் புக்கில்  இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg





இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Sunday, August 30, 2009

யூ-டியூப் வீடியோக்களுக்காக பத்து மென்பொருட்கள்

யூ-டியூப் வீடியோக்களுக்காக பத்து மென்பொருட்கள்



எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர்.

இந்த வகையில் நாம் அனைவரும் தேடும் தளம் யு–ட்யூப் தளமாகும். இங்கு தேடும் பொருள் குறித்த மற்றும் சார்ந்த வீடியோ காட்சிகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இவற்றைத் தேடிப் பெறுவதோடு நாம் நின்றுவிடுவதில்லை. இவற்றை டவுண்லோட் செய்து மீண்டும் மீண்டும் பார்க்க எண்ணுகிறோம். கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நம் ஐ–பாட் மற்றும் மொபைல் போன்களில் கூட இவற்றைப் பதிந்து வைத்துக் காண விரும்புகிறோம். அவற்றிற்கு உதவும் சில புரோகிராம்கள் மற்றும் வழிகள் இங்கு தரப்படுகின்றன.

1. வீடியோ பார்மட் மாற்ற

யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும் ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

2. வேகமாக டவுண்லோட் நடைபெற

வீடியோ காட்சிகளை டவுண்லோட் செய்து பார்க்க அந்த தளம் சீரான வேகத்தில் நம் கம்ப்யூட்டரை அடைய வேண்டும். இல்லையேல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். இந்த டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள நமக்குக் கிடைப்பதுதான் SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் ஆகும். இது Download Accelerator போலவே செயல் படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைத் திறந்து வீடியோ காட்சியினைக் கைப்பற்றி வேகமாக அதனை கம்ப்யூட்டருக்கு இறக்குகிறது.

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்

3. பயர்பாக்ஸில் வேகத்தைத் துரிதப்படுத்த

மீடியா பைரேட் (Media Pirate) என்னும் நிறுவனம் வீடியோ டவுண்லோடர் (Downloader) என்னும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. இது பிளாஷ் பிளேயர் போன்றவற்றில் எம்பெட் ஆகியுள்ள வீடியோ காட்சிகளை மிக வேகமாக நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்ள உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

4. யுட்யூப்பினை எடிட் செய்திட

ஆன்லைனில் யு ட்யூப் ரீ மிக்சர் (youtuberemixer) என்று ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் பயன்படுத்துபவர்கள் அதனை அதன் தளத்தில் வைத்தே எடிட் செய்யலாம்; மாற்றி அமைக்கலாம் மற்றும் மெருகூட்டலாம். இது அடோப் பிரிமியர் எக்ஸ்பிரஸ் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை ஒரு பிரேமில் நுழைக்க முடிகிறது. அத்துடன் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ பைல்களையும் இணைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

5. யுட்யூப் வீடியோவை கம்ப்யூட்டரில் இயக்க

ஆன் லைனில் FLV Player என்ற ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் தளத்திலிருந்து டவுண்லோட் செய்த வீடியோக் களைக் காணலாம்.இந்த புரோகிராம் தரும் எளிய கண்ட்ரோல்கள் மூலம் யு–ட்யூப் வீடியோக்களை இயக்கி அவற்றின் முன்னும் பின்னும் செல்லலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

6. பயர்பாக்ஸிற்கான யுட்யூப் பிளேயர்:

யு–பிளேயர் (YouPlayer) என்ற பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஓர் ஆட்–ஆன் தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசரில் யு–ட்யூப் வீடியோ பிளேயரை இணைக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோக்களைக் காணலாம். இதனை ஒரு புக் மார்க்கர் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் யு–ட்யூப் லிங்க்குகளை இழுத்து வந்து இதில் விட்டுவிட்டால் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

7. டெஸ்க்டாப்பில் ஒரு டவுண்லோடர்

ஆர்பிட் டவுன்லோடர் (Orbit Downloader) என்ற பெயரில் இலவச டெஸ்க்டாப் புரோகிராம் ஒன்று இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் பலவகையான தளங்களிலிருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட முடியும். டவுண்லோட் செய்திடும் வழி மிகவும் எளிமையானது. இந்த புரோகிராமினை இயக்கிய பின்னர், குறிப்பிட்ட வீடியோ மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு Get It என்ற ஒரு பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பைலாக இறக்கப்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

8. வீடீயோ பைலை அப்லோட் செய்திட:

மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என நாம் விரும்பும் வீடியோ காட்சிகளை அப்லோட் செய்திட யு–ட்யூப் தளம் வழி தருகிறது. யு–ட்யூப் அப்லோடர் (YouTube Uploader) என ஒரு புரோகிராம் அந்த தளம் செல்லாமலேயே வீடியோக்களை அப்லோட் செய்திட நமக்கு உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

9. யுட்யூப் வீடியோவின் பார்மட் மாற்ற

யு–ட்யூப் தளத்தில் கிடைக்கும் வீடியோக்களை அனைத்து சாதனங்களிலும் பிளே செய்து பார்க்க முடியாது. எந்த சாதனத்தில் இயக்கிப் பார்க்க வேண்டுமோ அதற்கான பார்மட்டிற்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த பார்மட் மாற்றும் வசதியினை கன்வெர்ட் ட்யூப் (Convert Tube) என்னும் புரோகிராம் தருகிறது. ஆன்லைனிலேயே பார்மட்டை மாற்றி,பெர்சனல் கம்ப்யூட்டர், ஐ–பாட், பி.எஸ்.பி., ஐ–போன், மொபைல் போன் இவற்றிற்குக்க் கொண்டு சென்று இயக்கிப் பார்க்கலாம். இந்த புரோகிராமினை இலவசமாகப் பெறவும் முடியும் . இதில் ஒரு ருசியான தகவல் என்னவெனில், இந்த தளத்தை வாங்க உங்களுக்கு விருப்பம் என்றால் 2000 டாலருக்கு மேல் குறிப்பிடும் தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

10. பாட் மற்றும் போனுக்கு மாற்ற

யு–ட்யூப் வீடியோக்களை ஐ–பாட் மற்றும் ஐ–போனில் பார்த்து ரசிக்க அவற்றை அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டும். Free Dvd videosoftware என்ற சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையை மேற்கொள்கிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

மேலே குறிப்பிட்ட தளங்களில் தரப்பட்டுள்ள மென்பொருட்களை தரவிறக்கி , உங்களுக்குப் பிடித்த யு–ட்யூப் வீடியோக்களைப் பார்த்து ரசிக்கவும்.

http://www.honeytamilonline.co.cc/2009/08/blog-post_28.html




Share/Save/Bookmark

பயர்வால் : ஏன் ? எதற்காக ?

http://www.polyu.edu.hk/~ags/itsnews0108/firewall.jpg


பயர்வால் என்பது நம்முடைய கம்ப்யூட்டரை நெட்வொர்க் ( இன்டர்நெட் போன்ற) ஒன்றில் இணைக்கையில், அதனை நாம் அறியாமல் தாக்கவரும் ஒரு புரோகிராமினைத் தடுக்கும் ஒரு ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் புரோகிராமாகும். இங்கு "தாக்குதல்' என்பது கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும்போது, அவற்றின் பலவீனமான கட்டமைப்பினைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியாக உள் நுழைந்து கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கும் அல்லது கைப் படுத்தும் புரோகிராம் செயல்பாட்டினைக் குறிப்பதாகும்.


இதில் பலவீனம் என்பது என்ன என்று இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சில நேரங்களில் ஆடியோ அல்லது வீடியோ பைல் ஒன்றை இயக்க முயற்சிக்கையில் கம்ப்யூட்டரில் உள்ள மல்ட்டி மீடியா பிளேயர், இந்த பைல் புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் இருக்கிறது; இருந்தாலும் இயக்கிப் பார்க்கவா என்று கேட்கும். நாமும் நம் ஆர்வத்தில் சரி என்று கட்டளையிடுகையில், மல்ட்டி மீடியா பிளேயர் கிராஷ் ஆகி முடங்கிப் போகும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரத்தில் அந்த ஆடியோ அல்லது வீடியோ பைலில் எழுதப்பட்ட கெடுதல் விளைவிக்கும் வரிகள் உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வகை புரோகிராம்கள் செயல்பட வழி ஒன்றைத் தானாக அமைத்துக் கொள்ளும்.


இரண்டா வதாக, இன்டர் நெட்டில் கம்ப்யூட்டர் இணைப்பில் இருக்கை யில், இது போன்ற கெடுதல் விளை விக்கும் கம்ப்யூட்டரி லிருந்து தொடர்ந்து உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வழி கேட்டு ஆணை கள் வரலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்கத் தொடங்கலாம்; ஊர்ந்து போய் நின்று விடலாம்; அல்லது கிராஷ் ஆகி முடங்கிப்போகலாம்.


பயர்வால்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள, தெரிந்த மற்றும் தெரிய வரும், இந்த பலவீனமான இடங்களை அடைத்திடும். இதனை இரண்டு வழிகளில் இவை மேற்கொள்கின்றன. சிஸ்டத்தின் உள்ளாக பயர்வால் ஒன்று அமைக்கப்பட்டு அவை நெட்வொர்க் ஒன்றிலிருந்து வரும் டேட்டாவினை முழுமையாகச் சோதனை இட்டு சரியான டேட்டாவினை மட்டும் அனுமதிக்கிறது.

இன்னொரு வகை பயர்வால் சிஸ்டத்தின் வெளியாக அமைக்கப்படுகிறது. இது உங்கள் கம்ப்யூட்டரின் ஒரு பகுதி இது போன்ற புரோகிராம்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மோசமான டேட்டாவினை நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களுக்கு அனுப்புவதனைத் தடுக்கிறது. மிகச் சிறப்பான பயர்வால்கள் இந்த இருவகை தடுப்பு சுவர்களையும் அமைத்துச் செயல்படுகின்றன. பயர்வால் ஒன்று இருப்பதனாலேயே, உங்கள் கம்ப்யூட்டர், கெடுக்கும் புரோகிராம் களிடமிருந்து முழுமையான பாதுகாப்பில் உள்ளது என்று கூறிவிட முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களை அது பெரும்பாலும் தடுத்துவிடும்.

‘Firewall’’என்ற சொல் Fire மற்றும் Wall என்ற சொற்களை இணைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வீடு, அலுவலகம் மற்றும் அது போன்ற கட்டடங்களில், ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குத் தீ பரவுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சுவரினை இது குறிக்கிறது. அதே போல கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவுவதனை இது தடுக்கிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் பயர்வால் ஒன்று தரப்படுகிறது. இன்டர்நெட்டில் இருக்கையில் நம் கம்ப்யூட்டரை இது பாதுகாக்காதா?

ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த பயர்வால், நீங்கள் சர்வீஸ்பேக் 2 இயக்கி இருந்தால், தானாக டிபால்ட் பயர்வால் ஆக அமைக்கப்படும். இருப்பினும் இதற்கும் மேலாக, அல்லது இதற்குப் பதிலாக, இன்னொரு பயர்வால் அமைப்பதே நல்லது. விண்டோஸ் பயர்வால் வெளியிருந்து உள்ளே வரும் கெடுதல் புரோகிராம்களை மட்டும் தடுக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினால் பாதிக்கப் பட்டால், பாதிக்கப்பட்ட உங்கள் கம்ப்யூட்டரி லிருந்து அதே கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் செல்வதை அது தடுக்காது.


விண்டோஸ் எக்ஸ்பியின் பயர்வால் நவீன சில வசதிகளைக் கொண்டிருக்காது. சில பயர்வால் தொகுப்புகள் ஒரு ஐ.பி. முகவரி யிலிருந்து தொடர்ந்து கெடுதல் விளைவிக்கும் டேட்டா வந்தால், பின் அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் தடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளன. இது போன்ற கெடுதல் வேலையைச் சில தளங்கள் மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டால், சில பயர்வால்கள் மொத்தமாக அந்த தளங்கள் நெட்வொர்க்கில் இணைவதனையே நிறுத்திவிடுகின்றன.


சில சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் தங்களின் தாய்வீட்டுத் தளத்தினைத் தொடர்ந்து காண்டாக்ட் செய்து கொண்டே இருக்கும். அந்த அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் எதுவும் வெளியாகி உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக. பல வேளைகளில் இது போன்ற நடவடிக்கைகள் அந்த சாப்ட்வேர் தயாரித்தவர் தன் புரோகிராம்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்று அறிவதற்காக இருக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்ட்ரோல் செய்திட வெவ்வேறு பயர்வால் களை செட் செய்து அமைக்கலாம்.


இலவச பயர்வால் தொகுப்புகளை எந்த எந்த தளத்திலிருந்து பெறலாம்?


பயர்வால் கட்டாயம் நமக்குத் தேவை என உணர்ந்த பின்னர் அனைவரும் கேட்கும் கேள்வி இது. இணைய தளத்திலிருந்து கிடைக்கக் கூடிய சில திறமையான பயர்வால்களை இங்கு காணலாம்.


ஸோன் அலார்ம் (ZoneAlarm) என்னும் பயர்வால் தொகுப்பினை Zone Labs என்னும் நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்குகிறது. இது தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசம். இந்த தளத்தில் சரியாகச் சென்று இலவச பதிப்பினைக் கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். Zone Alarm Security Suite மற்றும் Zone Alarm Pro என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கும் பயர்வால்களும் இங்கு கிடைக்கும்.


Sunbelt Keiro என்னும் தனி நபர் பயன்பாட்டிற்கான பயர்வால் தொகுப்பினை Sunbelt Software என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதனை 30 நாட்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்தலாம். இதற்கான பதிவுக் கட்டணத்தை 30 நாட்களுக்குப் பின் செலுத்தாவிட்டால் இந்த புரோகிராமின் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து விடும். என் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் தொடர்ந்து அப்டேட் செய்து வந்தாலும் பயர்வால் ஒன்று நிறுவ வேண்டுமா?


நீங்கள் எச்சரிக்கையாக அனைத்து சாப்ட்வேர் தொகுப்பினையும் அப்டேட் செய்தாலும் உங்கள் சிஸ்டத்திற்குக் கட்டாயம் பயர்வால் ஒன்று தேவை. இதற்கு முதல் காரணம் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப் படும் பலவீனமான இடங்களைச் சரியாகக் கண்டறிந்து அவற்றிற்கான பேட்ச் பைல்களை எழுத சில நாட்கள், ஏன் சில மாதங்கள், வருடங்கள், கூட ஆகலாம். இது போன்ற பலவீனமான இடங்கள் இருக்கும் செய்தி மிக வேகமாகப் பரவுகிறது. ஆனால் தீர்வு கிடைக்க மிக மிக தாமதமாக ஆகும். மேலும் பயர்வால் தயாரிப்பவர்கள் வேகமாகச் செயல் படுவார்கள். பேட்ச் பைல் எழுது பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலும் பயர்வால் தொகுப்புகள் ஏற்கனவே பல வகையான கெடுதல் முயற்சிகளை முறியடிப்பதால் புதிய முயற்சிகளும் எளிதாக முறியடிக்கப்படும். பேட்ச் பைல்களால் இது காலதாமதமாகலாம்.


ஒரு சிலர் விண்டோஸ் பயன்படுத்தாமல் மேக் / லினக்ஸ்/சோலாரிஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவதால் வைரஸ்கள் தாக்காது என்று எண்ணிக் கொண்டு பயர்வால்களைப் பயன்படுத்து வதில்லை. இது தவறு. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதில் இயங்கும் புரோகிராம்கள் மட்டுமே பலவீனமாக இருக்கிறதென்று ஹேக்கர்கள் இதற்கான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை எழுதுவதில்லை. அதிகமான எண்ணிக் கையில் இவை பயன்படுத்தப் படுகின்றன என்ற எண்ணத்தில் தான் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் இயக்க அப்ளிகேஷன்களைத் தாக்க முயல்கின்றனர்.


மேலும் சோலாரிஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கும் அவ்வப்போது பேட்ச் பைல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி என்றால் அவற்றிலும் ஹேக்கர்கள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் இருக்கின்றன என்றுதானே பொருளாகிறது. Secunia என்ற தளத்திற்குச் (http://secunia.com/product/96) சென்றால் மேக் சிஸ்டத்தில் உள்ள அனைத்து பலவீனமான இடங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதனைக் காணலாம்.

எனவே வேறுபட்ட ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனாலேயே நீங்கள் இன்றைய மற்றும் எதிர்கால தாக்குதல் களிலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுவது தவறு. இந்த தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் ஒரு பயர்வால் உங்களைக் காப்பாற்றுவது அரிது என்றாலும் அவை அவற்றிற்கான சந்தர்ப்பங்களை தவிர்க்கும் அல்லவா!



















http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=791&dt=12-30-


கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில வழிகள்









என்னதான் நம் வாழ்க்கையுடன் கம்ப்யூட்டர் இணைந்து விட்டாலும், பாதுகாப்புடன் அதனைப் பயன்படுத்த நூறு சதவிகித உத்தரவாதம் தர முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். சாலையில் விபத்து நேர்கிறது என்பதற்காக நாம் சாலையில் நடக்காமலோ, பயணம் செல்லாமலா இருக்கிறோம். கவனமாகச் செல்வதில்லையா! அது போல கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலும் சில எச்சரிக்கை வழிகளைக் கையாண்டால், பாதுகாப்பாகப் பணி புரியும் சூழ்நிலையை உருவாக்கலாம். கீழே இதற்கான சில சின்ன சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன. இவை பலமுறை இங்கு கூறப்பட்டாலும் அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு அமல்படுத்துவது நல்லதல்லவா!


1. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை பேட்ச் பைல் என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து வைக்க வேண்டும்.


2. இன்டர்நெட் உலகில் பல வைரஸ் புரோகிராம்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு வழிகள் கிடைக்காமல் போகலாம்.


3. ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.


4. நம் கம்ப்யூட்டருக்குள் வரும் ஸ்பை வேர் புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் பயர் வால் தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. ஸோன் அலார்ம் போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.


5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் பயன்படுத்து வதே நல்லது.


6. நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.


8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.


9. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.


10. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை கட்டாயம் NAT மற்றும் SPI ஆகியவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும்.

11. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

12. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

13. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.


14. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே அதன் தளத்தைத் தொடர்பு கொள்ளவும்


15. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும். ஒரு வேளை அவரும் ஏமாந்திருப்பார் என்று எண்ணினால் அவருக்கு இது குறித்து இமெயில் ஒன்று அனுப்பிக் கேட்கவும்.


16. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.


17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.


18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.


19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள்.


20.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.


21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

22. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.


26. பொதுவான பப்ளிக் கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.


27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.


29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.


30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.




கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள் !






கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அடிக்கடி நாம் கேட்கும் சில கலைச் சொற்களும் அவற்றிற் கான சுருக்கமான விளக்கமும் கீழே தரப்பட் டுள்ளன.


டபுள் லேயர் ( Double Layer):

டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.


ஹார்ட் டிஸ்க் (Hard Disk):


உயர்ந்த திறன் மற்றும் அமைப்பு கொண்ட டிஸ்க். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைத்து தரப்படும். இதில் தான் ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களும் நீங்கள் உருவாக்கும் பைல்களும் பதியப்படும்.


ஸ்ட்ரீமிங் (Streaming) :


எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றி லிருந்து அனுப்பப்படும் தொழில் நுட்பத்திற்கு இந்த பெயர் தரப்பட்டுள்ளது.


ஐ.பி. அட்ரஸ் (IP Address):

கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.


மதர்போர்ட் (Motherboard):


பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.


அட்டாச்மென்ட் (Attachment):


இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்பு கையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண் லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.


கிளையண்ட் (Client): கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

டெஸ்க்டாப் (Desktop): மானிட்டர் திரையில் பைல்களையும் ஐகான்களையும் படங்களாகக் காட்டும் இடம். இதனைக் கொண்டுதான் மேஜையில் வைத்து இயக்கப்படும் கம்ப்யூட்டரை Desktop Computer என அழைக்கின்றனர்.

டயலாக் பாக்ஸ் (Dialogue Box): கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல் களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

டாக் (Doc): இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

டொமைன் நேம் (Domain Name): இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

டவுண்லோட் (Download):

கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரி லிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படு வதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.


ஐ.எஸ்.பி.(ISP Internet Service Provider): இன்டர்நெட் இணைப்பு தந்து இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட வசதி தரும் ஒரு நிறுவனம். இந்த இணைப்பு நேரடியாக கம்பி இணைப்பாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது வயர்லெஸ் மோடம் வழியாகவோ இருக்கலாம்.

ஜேபெக் (JPEG): படங்களுக்கான பைல் வடிவம். இந்த பைல் பார்மட்டில் படங்கள் சுருக்கப்பட்டு பின் பார்க்கையில் விரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வகை பைல்களின் அளவு மற்ற பட பைல்களின் அளவினைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இதன் மூலம் பட பைல்களைப் பரிமாறிக் கொள்வது எளிது.

நெட்வொர்க் (Network):


தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங் களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.


நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area): கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கம்ப்யூட்டர் திரையில் டாஸ்க் பாரில் காட்டப்படும் இடம்.

பி.ஓ.பி.3 (POP 3): இமெயில் செய்திகளை தொலைவில் இருந்து பெறும் வழிகளில் இதுவும் ஒன்று.

ப்ராசசர் (Processor): கம்ப்யூட்டர் ஒன்று இயங்குவதற்கு மையமாக, உயிர்நாடியாக இருக்கும் சிப். இதனை கம்ப்யூட்டரின் மூளை எனலாம். ஒரு சில்லு போல இருக்கும் இதில் பல்லாயிரக் கணக்கான ட்ரான்சிஸ்டர்கள் சர்க்யூட் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும். சிப் ஒன்றில் வைக்கப்படும் இந்த ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் திறன் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=798&dt=12-30-௯௯





கூப்பேஸ் வைரஸ் - ஜாக்கிரதை

http://www.computerrepairmaintenance.com/images/computer-viruses.jpg

பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் எச் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும். இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும். இந்தியாவில் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக ஏறத்தாழ 30 லட்சம் பேர் உள்ளனர். எனவே தான் இது குறித்து இந்திய அரசின் India Computer Emergency Response Team அமைப்பு இந்த எச்சரிக்கை யினை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும். இந்த அறிவுரையையும் அந்த அரசு அமைப்பு தந்துள்ளது.


( B -) வியூ சோனிக் பெர்சனல் கம்ப்யூட்டர்


கம்ப்யூட்டர் மானிட்டர்களுக்குப் பெயர் பெற்ற வியூசோனிக் நிறுவனம் அண்மையில் விபிசி 100 என்ற பெயரில் ஆல்–இன் –ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் தடிமன் 35மிமீ மட்டுமே. 19 அங்குல அகல வண்ண எல்சிடி டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. 1,366x768 என்ற அளவில் ரெசல்யூசனைக் கொண்டுள்ளது. இன்டெல் 1.6 கிகா ஹெர்ட்ஸ் ஆட்டம் ப்ராசசர், 1ஜிபி மெமரி, பில்ட் இன் டிவிடி–ஆர்.டபிள்யூ பர்னர்,2x3 வாட் ஸ்பீக்கர், நான்கு ஹை ஸ்பீட் யு.எஸ்.பி. 2 போர்ட், 4in1 கார்ட் ரீடர்,1.3 மெகா பிக்ஸெல் வெப் கேமரா மற்றும் மைக் என நவீன பெர்சனல் கம்ப்யூட்டருக்கான அனைத்து வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கும் வசதியுடன் இது வடிவமைக்கப் பட்டு ள்ளது. லேன் நெட்வொர்க்கில் இணைத்துச் செயல் படுத்தலாம். வியூ சோனிக் நிறுவனத்தின் அதிகார பூர்வ விற்பனையாளர்களிடம் இதனை ரூ.31,999 விலையில் பெற்றுக் கொள்ளலாம்.


* விண்டோஸ் 7 ரோட் �ஷா தொடங்கியது

வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ரோட் �ஷாவினை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற வாரம் தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், அகமதாபாத், கொச்சி, சண்டிகார், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர்,லக்னோ, பூனா, ராஞ்சி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் புது டில்லி ஆகிய நகரங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் டீலர்களின் உதவியுடன் இதனை நடத்தி வருகிறது. முதல் நிலையில் தகவல் தொழில் நுட்ப நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இது நடத்தப்படுகிறது. தொடர்ந்து பொது மக்களுக்கும் இது நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையையும் மீறி விண்டோஸ் 7, தகவல் தொழில் நுட்ப பிரிவில் பெரிய அளவில் தன் பங்கினை அளிக்கும் என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது. இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக அதன் பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், நீண்டகால வர்த்தக வாய்ப்புகளும் இதனைச் சார்ந்தவர்களுக்குக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீலர்களுக்கு "என்னோடு நீயும் இணைந்து' என்ற போட்டி ஒன்றை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் ரூ. 20,000 வரை பரிசினைப் பெறுவார்கள். இந்த ரோட் �ஷா வாடிக்கையாளர்கள் விரும்புவதனைச் சந்தைக்குக் கொண்டு வருவதில் டீலர்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசாப்ட் உருவாக்கி யுள்ளதாகவும், வர இருக்கும் விண்டோஸ் 7 தொகுப்பை எதிர்கொள்ள வாடிக்கையாளர்களைத் தயார் செய்திட இது உதவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இந்த ரோட் �ஷா குறித்த நாள், இட அறிவிப்புகளை மைக்ரோசாப்ட் கிளை அலுவலகங்கள் அல்லது டீலர்களிடம் பெற்று, விருப்பமுள்ளவர்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்வையிடலாம்.



பைட்ஸ், பைட்ஸ், பைட்ஸ்....



கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் சாதனங்களின் கொள்ளளவு மற்றும் டேட்டாக்களின் அளவினை பைட்களில் கூறுகிறோம். அடிப்படையில் 8 பிட் ஒரு பைட். இதுவே அடுத்தடுத்து உயரும்போது கிலோ கணக்கில் கூறப்படுகிறது. கிலோ என்பது இங்கு 1000 அல்ல; 1024. ஏனென்றால் டிஜிட்டல் உலகில் base 2 system என்பது கையாளப்படுகிறது. எனவே ஒரு கிலோ பைட் என்பது 2^10 ஆகும். 2^2 என்பது 4; 2^3என்பது 8. இப்படியே போனால் 2^10என்பது 1024 ஆகும். எனவே ஒரு கிலோ பைட் (Kilobyte)என்பது 1,024 பைட்ஸ்;

ஒரு மெகா பைட் (Megabyte) என்பது 1,024 கிலோ பைட்ஸ்;

ஒரு கிகா பைட் (Gigabyte)என்பது 1,024 மெகா பைட்ஸ்;

ஒரு டெரா பைட் (Terabyte) என்பது 1,024 கிகா பைட்ஸ்;

ஒரு பெடா பைட் (Petabyte)என்பது 1,024 டெரா பைட்ஸ்;

ஒரு எக்ஸாபைட் (Exabyteஎன்பது 1,024 பெடா பைட்ஸ். . . .


http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=800&dt=12-30-99
Share/Save/Bookmark

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன?

www.twitter.com

டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.

140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், 'இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.

டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.

அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.

டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.

இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.

டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.

இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.

நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.

போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.

மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?

இப்படிதான் டிவிட்டர் துவங்கியது.


http://cybersimman.wordpress.com/2009/08/26/twitter-26/


Share/Save/Bookmark

தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க

தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க


பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.

கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

http://www.freewarefiles.com/downloads_counter.php?programid=44343

http://www.premkg.com/2009/08/blog-post_27.html
Share/Save/Bookmark

Sunday, August 23, 2009

எழுத்துக்கள் விட்டு விட்டு துள்ளுவதை எப்படி உருவாக்கி பிளாக்கரில் போடுவது எப்படி

கைத்தொலைபேசிகளின் இரகசிய குறியீட்டு இலக்கங்கள்


கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு குறியீட்டு எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் கைத்தொலைபேசியின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில குறியீட்டு எண்களை வகுத்து தந்துள்ளன. இது கைத்தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

LG வகை கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்

கைத்தொலைபேசியின் Test Mode க்கு செல்ல –– 2945#*#
எல்ஜி கைத்தொலைபேசியின் ரகசிய Menu ஐக் கொண்டு வர – 2945*#01*#
கைத்தொலைபேசியில் உள்ள மென்பொருள் தொகுப்பின் பதிப்பு எண் அறிய – *8375#
கைத்தொலைபேசியின் IMEI எண்ணை அறிய –*#06# இது எந்த கைத்தொலைபேசிக்கும் பொருந்தும்.
கைத்தொலைபேசியின் (LG 7010 மற்றும் 7020) Sim Card lock சரி பார்க்க-2945#*70001#
LG-B 1200 கைத்தொலைபேசியின் Sim Lock சரி செய்திட 1945#*5101#
LG-B 5200 மற்றும் 510W கைத்தொலைபேசிகளின் Sim Lock Menu சரி செய்திட 2945#*5101#
LG 500 மற்றும் 600 கைத்தொலைபேசிகளின் Sim Lock சரி செய்திட 2947#*

NOKIA தொலைபேசிகளுக்கான இரகசிய குறியீட்டு இலக்கங்கள்

இவற்றின் மூலம் உங்கள் NOKIA கைத்தொலைபேசிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிழைகள் இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிழைகளின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –Restore Factory setting க்கு
*#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – Sim கடிகாரத்தை நிறுத்த
*#67705646# -Operator Logo ஐ நிறுத்த
*#73# – Reset Timer
*#0000# –மென்பொருள் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – தொலைபேசியின் உத்தரவாதம் குறித்த தகவல்களுக்கு (தொடர் இலக்கம் , எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, திருத்தம் செய்த திகதி)


SAMSUNG கைத்தொலைபேசிகளின் குறியீட்டு இலக்கங்கள்


SAMSUNG தந்த பழைய கைத்தொலைபேசிகளுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# –தொலைபேசியின் மென்பொருள் பதிப்பை பற்றி அறிய
#*3849# – Reboot செய்வதற்கு
#*2558# – Time ON/OFF
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான கைத்தொலைபேசிகளை Unlock செய்திட
#*4760# – GSM. வசதிகளை ON/OFF செய்திட
*#9998*246# – Memory & Battery
*#7465625# – மொபைலின் Lock எந்த நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – தொடர் இலக்கத்தை அறிய
*2767*637# –Unlock செய்திட
*#8999*636# –Storage திறனைக் காட்ட
*2562# – Reboot செய்திட



http://vannitec.blogspot.com/2009/08/blog-post_16.html


பங்கு சந்தை பற்றிய தகவல் வலைமனைகள்....!


பங்கு சந்தை பற்றிய செய்திகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள உதவும் வலைமனைகள் பற்றிய ஒரு பயனுள்ள தொகுப்பு.......

இந்த தொகுப்பை பகிர்ந்த எனது நண்பனுக்கு நன்றிகள்.....!

தமிழ் இணையதளங்கள் :

http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

http://bashkaran.blogspot.com/2009/08/blog-post.html

எழுத்துக்கள் விட்டு விட்டு துள்ளுவதை எப்படி உருவாக்கி பிளாக்கரில் போடுவது எப்படி

இது உருவாக்குவது மிகவும் சுலபம் நான் கொடுக்கும் முறை பின்பற்றவும்


<blink> Your Text Here </blink>
மேலே உள்ள CODEஐ கொப்பி செய்து உங்களுக்கு விருப்பமான இடத்தில் போட்டு உங்கள் பிளாக்கை அழகுபடுத்துங்கள்
YOU TEXT HERE என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான சொல்லை இடுதல் உதாரணத்திற்கு என்னுடுய எழுத்தை பார்க்கவும்

சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்



http://svttechnologya.blogspot.com/2008/08/blog-post.html



பிளாக்கரில் படங்களை சுருளவிடுவது எப்படி

முதலில் பார்த்த பதிவு பிளாக்கர் நேமை சுருளவிடுவது இப்ப பார்க்க போகிற பதிவு படங்களை சுருளவிடுவது முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்லுங்கள் அப்புறம் என்ன செய்கிறது என்று கிழே கொடுக்கும் படிமுறையை பின்பற்றுக

  • 1.Login to your dashboard--> layout- ->Page Elements
  • 2.Click on 'Add a Gadget' on the sidebar.
  • 3.Select 'HTML/Javascript' and add the code given below and click save.


<marquee direction="up">

<img src="YOUR-IMAGE1-LINK"/>
<img src="YOUR-IMAGE2-LINK"/>
<img src="YOUR-IMAGE3-LINK"/>

</marquee>

YOUR-IMAGE1-LINK என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த படங்களின் முகவரியை இடவேண்டும்
இவ்ளவுதான் நீங்கள் செய்யவேண்டியது இதோ நான் ஒன்றை உருவாக்கியுள்ளேன் இதை கிழே பார்த்து நீங்கள் செய்து கொள்ளுங்கள்










டவுசர் பாண்டி அவர்கள் இது சம்பந்தமாக ஒரு ஐடியா தந்துள்ளார் இவர் தந்த CODEஇல் mouse - வெச்சா நிக்கும் , எடுத்தா படம் ஓடும்
அவர் தந்த கிழே உள்ளது உதாரணத்திற்கு கிழே கொடுக்கப்பட படத்தை பார்க்கவும்



<marquee direction="up" onmouseover="this.stop()" onmouseout="this.start()";gt;<img src="YOUR-IMAGE1-LINK"/<>/marquee>












Share/Save/Bookmark

பிளாக்கில் காப்பி பண்ணாமல் இருக்க - சின்ன வழி,

பிளாக்கில் காப்பி பண்ணாமல் இருக்க - சின்ன வழி,




வணக்கம், தலீவா !! கொஞ்சம் அசந்தா மேரி இத்தினி நாளு,
எதுவும் எழ்தாம இருந்துட்டேன் ,

அதனால ஒன்னியும் , நாட்டுல நல்லது நடந்துடுது இன்னு , யாரும்
நெனைக்க வாணாம் !!

செரி, இப்போ !! ரவ சின்ன மேட்டருக்கு வர்றேன் , நம்ப அல்லாரும் , ( ? )
ரொம்ப மிக்கியமான மேட்டரு அல்லாம் , இந்த மேரி பிளாக்குல
எழ்தறோம் " ? " ( நா இல்லப்பா )

அதுல கீற , மேட்டர யாராவது , copy - பண்ணி வேற எதுக்குனா , யுசு
பன்னுவங்கோ !! அதுக்கு , ஒரு சின்ன வழி தான் இது ,

இதுனால , மொத்தமா copy - பன்றதுல இருந்து , ஒரு சின்ன பாதுகாப்பு ,
அவ்ளோ தான் , மத்த படி , வேற ரூட்டுல காப்பி பண்ணா , அதுக்கு இந்த
டவுசரு ஒன்னியும் பண்ண முடியாது ,

( அதுக்கு ஒரு சாப்ட்டு வேரு கீது, கொஞ்சம் துட்டு தாஸ்தி)

இந்த பொட்டில கீர, மேட்டர எட்து,
  
<SCRIPT language=JavaScript>
<!--
//Disable right mouse click Script
var message="Copyright!";
///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}
if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}
document.oncontextmenu=new Function("alert(message);return false")
// -->
</SCRIPT>



வயக்கம் போல ,

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,

யாராவது , நம்ப பிளாக்குல, போய் right click - பண்ணி copy - பன்றதுக்கு ,
ரோசன பண்ணா , இது மேரி ஒன்னு வரும் ,

இந்த மேரி ஒரு அவாஜ் குத்தாக்கா , செரி இண்ட்டு மறு படி
பண்ணுவாங்கோ !! ஒரு ரெண்டு வாட்டி Ok , OK , குடுப்பாங்கோ ,
அப்பால இதுல ஒரு கட்டம் வரும் அத கண்டிப்பா
டிக்கு, பண்ணுவாங்கோ !! அதுக்கு அப்பால ,


மறு படி பண்ணாக்கா ,
right click - வேல செய்யாது ,
அது மட்டு இல்ல , இந்த மேரி அவாஜ் குட்த பின்னால மறு படியும் ,
copy பண்ணா அதுக்கு , இன்னாவோ ஒரு சட்டம் கீதாமே !!

அதும் படி அது தப்பு இன்னு கூவலாம் , வேற ஒன்னியும் செய்ய முடியாது !!

நம்ப ஊட்டுல நாம எங்கினா ஊருக்கு போம்போது , பூட்டு
போட்டுட்டு தான் போறோம் , அது ஒரு பாதுகாப்புன்னு ,
நாம நெஞ்சிக்கீனு போயிட்டு வந்தா ?
அந்த பூட்ட ஒட்சி திருடுற , அளவுக்கு கீறாங்கோ !!

அதுக்கோசரம் ஊட்ட , அப்பிடியே போட்டுட்டு போவ முடியுதா ??
அது மேரி தான் இதுவும் .

இந்த மேரி , இந்த java script - பொட்டில போட்டு வெளி இடுறதுக்கு
ஐடியா குட்து, உதவி , செய்த அன்பு நண்பர் , திரு யூர்கன் க்ருகியர்,
அவுங்குளுக்கு ரொம்பவே நன்றி .

Share/Save/Bookmark

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீஸ்

மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி - கூகிள் ஃபில்டர் ஒரு எளிய விளக்கம்


"மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி " - மொக்கை ராசாக்கள் தப்பா நினைக்காதீங்க, மின்னஞ்சலில் மொக்கைகள் போடுவதற்கும் ஒரு தனி திறன் வேண்டும்.... இது உங்களை குறை சொல்லும் பதிவு அல்ல....... மேலும் கணிப்பொறியிலும், மின்னஞ்சல் உலகிலும் அசர வைக்கும் அறிவை பெற்றிருக்கும் வல்லுனர்களும் இந்த பதிவை தவிர்க்க.. அப்புறம் உங்க டைம நான் வேஸ்ட் பண்ணிட்டேண்ணு சொல்லப்பிடாது ஆமா..

இணைய தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், மின்னஞ்சல் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.மின்னஞ்சல் சேவையை பல பன்னாட்டு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. கூகிள், யாஹூ,ரீடிஃப் போன்றவை மின்னஞ்சல் சேவை வழங்கி வரும் சில முக்கியமான நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவங்களுக்குள் ஏற்படும் போட்டியை சமாளிக்க புது புது மின்னஞ்சல் வசதிகளை உபயோகிப்பவருக்கு கொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது "குருப்ஸ்(Groups)" எனப்படும் "குழுக்கள்" சேவை.

இன்றைய தேதியில் மட்டும் தமிழில் சுமார் 1300 குழுமங்கள் உள்ளன. நான் உட்பட நம்மில் பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழுமங்களில் உறுப்பினர்களாக இருக்கிறோம். குழுமங்கள் நமது எழுத்து திறமையை அதிகரிப்பதற்கும், கலந்துரையாடவும் ஒரு சிறந்த களமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எண்ணற்ற குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் நண்பர்கள் தனக்கு தனி பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களை தவற விடுவதும் இதில் வாடிக்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கூகுல் வடிகட்டி (Google Filters) ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

கூகுல் வடி கட்டியை பயன்படுத்தும் முறை

1. நமது மின்னஞ்சலை திறந்து கொள்ளவும் (எ.கா. எனது மின்னஞ்சலின் முகப்பு இது. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல்களை வடி கட்ட வேண்டும்)


2. நாம் வடிகட்ட வேண்டிய குழுமத்தின் எதாவது ஒரு மின்னஞ்சலை திறந்து கொள்ளவும்.Reply(பதிலளி)என இருக்கும் பொத்தானுக்கு அடுத்து இருக்கும் பொத்தானை அழுத்தவும்.அதில் மூன்றாவதாக வரும் Filter Message like this (இது போன்ற வடி கட்டிய செய்திகள்)-ஐ சொடுக்கவும்(click).


3. இப்போது எப்படி நீங்கள் வடிகட்ட விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்யவும் (எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமததிற்கு வரும் எல்லா மின்னஞ்சலையும் வடிகட்ட வேண்டும்). நீங்கள் தேர்வு செய்த பின் Next Step (அடுத்தபடி) என்ற பொத்தானை சொடுக்கவும்.


4. இந்த பகுதியில் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சலை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.(எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் யாவும் இன்பாக்ஸ் செல்லாமல் புதிய லேபில் உள்ளே செல்ல வேண்டும்.)


5. நீங்கள் வடி கட்ட விரும்பிய குழுமத்திற்கு இடும் புதிய லெபில்-ஐ இங்கே கொடுக்கவும். (எ.கா. நான் எனது புதிய லேபிழுக்கு 'sx' என பெயர் வைத்துள்ளேன்)


6. இப்போது நீங்கள் Create Filter(வடிப்பானை உருவாக்கு) என இருக்கும் பொத்தானை சொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு புதிய லேபில் உருவாவதுடன், நீங்கள் குறிப்பிடும் குழுமத்திற்கு வரும் மின்னஞ்சல் யாவும் அந்த லேபிழுக்குள் தானாகவே போய் விடும்.( எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் எல்லா மின்னஞ்சல்களும் இப்போது இன்பாக்ஸ் போகாமல், sx என்ற லேபிழுக்குள் போய் விடும். create filter என்ற போத்தானுக்கு வலப்புறமாக இருக்கும் வெளியை டிக் செய்யும் பட்சத்தில் ஏற்கனவே அந்த குழுமத்தில் இருந்து வந்த எல்லா மின்னஞ்சல்களும் sx என்ற லேபலுக்குள் போய் விடும்.)


7. நிறைய குழுமங்களும், நிறைய லேபல்களும் இருக்கும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் முகப்பின் இடது ஓரம் இது போல் காட்சி தரும்.


Google Filters குறித்த உங்கள் சந்தேகங்களை stalinfelix2000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் செய்யலாம்.. மேலும் விமர்சனங்களே ஒரு எழுத்தாளனை உருவாக்கும்... உங்கள் விமர்சனங்களை இங்கே பதிவு செய்யவும்

http://stalinfelix.blogspot.com/2009/08/blog-post_17.html


உங்கள் வலைப்பூவை காணவில்லையா?

உங்கள் வலைப்பூவை காணவில்லையா?
உங்கள் வலைப்பூ காணாமல் போகவோ அல்லது திருட்டு போகவோ வாய்ப்பில்லை. அது பத்திரமாகத்தான் இருக்கும். உங்களுக்கு அப்படி காணாமல் போயிருந்தால் இதன்படி மீட்டிடலாம். நீங்கள் முதலில் கடவு சொல்லை மறக்கும் வசதியை பயன்படுத்தி பார்க்கலாம். அதற்கு கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.

http://www.blogger.com/forgot.g



மேலே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் பெட்டியில் உங்கள் மின் அஞ்சலையிட்டு LOOKUP ஐ சொடுக்கவும். அதன்பின்னர் ஒரு பத்து நிமிடங்களுக்குள் உங்களின் மின் அஞ்சலுக்கு, அஞ்சல் வந்திருக்கும். Inbox, Spam, Folders, Archive என எல்லாவற்றிலுமே தேடிப்பாருங்கள். அப்படி மின் அஞ்சல் வந்ததும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

இரண்டாம் வழிமுறை:

கீழே கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கவும்.

http://www.blogger.com/forgot.g



மேலே What is your blog's URL? என கேட்டிருப்பதில் உங்களின் வலைப்பூவின் முகவரியை இடவும். ஆனால் blogspot.com என்பதை இடக்கூடாது. உதாரணமாக http://www.tamilcatholican.blogspot.com என்பதற்கு பதில் tamilcatholican என்றுதான் இடவேண்டும். இனி LOOKUP ஐ சொடுக்கவும். அதன்பின்னர் ஒரு பத்து நிமிடங்களுக்குள் உங்களின் மின் அஞ்சலுக்கு அஞ்சல் வந்திருக்கும். Inbox, Spam, Folders, Archive எல்லாவற்றிலுமே தேடிப்பாருங்கள். அப்படி மின் அஞ்சல் வந்ததும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

மூன்றாம் வழிமுறை:

உங்களுக்கு நிறைய வலைப்பூக்கள் இருந்து சிலவற்றை காணவில்லையெனில், நீங்கள் Hide ஐ பயன்படுத்தியிருக்கலாம். அதற்கு Dashboard இல் சென்று கடைசி வலைப்பூவை பார்க்கவும். அதற்கு கீழே Show All என கொடுத்திருக்கும். அதை சொடுக்கினால் உங்களின் எல்லா வலைப்பூவுமே தெரியும். இப்படி காணாமல் போன வலைப்பூக்களை மீட்கலாம்.

மேலே சொன்ன வழிகளை பின்பற்றியும் உங்கள் வலைப்பூவை காணவில்லை என்றால் அது Spam என தவறுதலாக நீக்கபட்டிருக்கலாம். அதற்கு இந்தhttp://www.google.com/support/forum/p/blogger/thread?tid=115e065a9a2292ee&hl=en இணைப்பை பயன்படுத்துங்கள்.

இதோடில்லாமல் நம் வலைப்பூவில் Malwares இருந்தாலும் அவை கூகிளால் நீக்கப்படலாம். அப்படி Malware-ஆல் நீக்கபட்டிருந்தால் இந்த இணைப்பில் உங்கள் வலைப்பூவை சமர்ப்பியுங்கள்.

https://spreadsheets.google.com/a/google.com/viewform?key=0Armgcja8_3shcFpISFpkZVlLZUhnWGxtdGRNSVJmYnc

http://www.tamilcatholican.com/2009/08/blog-post_17.html

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீஸ்

Picture நம்மில் பெரும்பான்மையோர் பயன்படுத்துவது கூகுள் மெயில் அக்கவுண்ட் தான். இதில் உள்ள கீ போர்டு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இதன் பயன்பாட்டை வேகப்படுத்தும். இது நம் வேலையைக் குறைப்பதுடன் இன்டர்நெட் பயன்படுத்துவதனையும் குறைத்து அதன் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் அல்லவா?

இதோ சில ஷார்ட் கட் கீகள்:

Shift+I:இமெயில் மெசேஜைப் படித்ததாக குறியீடு செய்வதற்கு

Shift+u:இமெயில் மெசேஜைப் படிக்காததாகக் குறியிட

Z: முந்தைய செயல்பாட்டை கேன்சல் செய்திட

?:கீ போர்டு ஷார்ட்கட் கீகள் குறித்த உதவிக் குறிப்புகளைக் காட்ட

c: புதிய இமெயில் மெசேஜ் ஒன்றை எழுதிட

/ : சர்ச் பாக்ஸில் உங்கள் கர்சரை நகர்த்த

u: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை ரெப்ரெஷ் செய்து லேட்டஸ்ட்டாக வந்த இமெயில் மெசேஜைக் காண

!: இமெயில் மெசேஜ் ஒன்றை ஸ்பாம் மெயிலாகக் குறியிட

p:தற்போதைய மெயிலுக்கு முன் உள்ள மெயிலுக்குச் செல்ல

. : வெறும் புள்ளி அடித்தால் கூடுதலான ஆப்ஷன்ஸ் காட்டப்படும்

r:மெயிலை அனுப்பியவருக்கு பதில் அனுப்ப

a:அனைத்து மெயில் பெற்றவருக்கும் பதில் அனுப்ப

Ctrl+c:அப்போதைய இமெயிலை ட்ராப்டாக சேவ் செய்திட

Esc:கர்சரை தற்போதைய பீல்டிலிருந்து நகர்த்தும்.

ஜஸ்ட் எப் கீயை மட்டும் அழுத்தினால் இமெயில் செய்தியை அடுத்ததற்கு பார்வேர்ட் செய்திட முடியும்.

http://puthumai.weebly.com/page205.html


கணனியில் ஆவணங்கள்(Documents), படங்களை(Pictures) ,கோப்புறைகளை(Folders) எவ்வாறு விரைவாக திறப்பது?

ஒரு ஆவணத்தை அதன் நிரலி (Program) மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் Internet Explorer மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் ஆவணங்களை இந்த வகையில் திறக்கலாம்.

Internet Explorer அனைத்து வகை ஆவணங்களையும் திறக்கும். Internet Explorer ஆனது கணனியில் உடனடியாக திறபடக்கூடியதாக இருக்கும். ஆனால் படங்களைத் திறக்கும் Picture Manager, Adope photoshop போன்ற Applications programs திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
தற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த ஆவணத்தை அப்படியே Mouse துணை கொண்டு இழுத்து வந்து Internet explorer window இல் போட்டுவிட வேண்டியதுதான். பட ஆவணங்கள் மட்டுமின்றி எழுத்து ஆவணங்களையும் இது திறக்கும். Outlook Emails, ஏன் MS Office ஆவணங்களையும் இது திறக்கும். ஆனால் இதற்கு மட்டும் அந்த கணனியில் MS Office பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு கோப்புறை(Folder) முழுவதையும் அப்படியே இழுத்து வந்து Internet Explorer சாளரத்தில்(Window) போட்டால் என்னவாகும்? அனைத்து ஆவணங்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும்.
(கணனியில் தமிழின் பாவனையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு உதவிடும் வகையில் இங்கு சில இடங்களில் கணனியின் தமிழ்க்கலைச்சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன்.)







http://vannitec.blogspot.com/2009/08/documents-pictures-folders.html



முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற


உங்களின் முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற கீழே கொடுத்துள்ள code யை copy செய்து Layout --->Add a gadget---> ல் HTML/java script ஒன்றை உருவாக்கி அதில் paste செய்யவும்.
இதில் Destination page URL என்பதில் உங்களுடைய முக்கிய பதிவுகளின் URL இடவும். 1.your text goes here என்பதில் உங்களின் முக்கிய பதிவுகளின் தலைப்பை இடவும். சோதிக்க என்வலைப்பூவில் உள்ள என்னுடைய படைப்புக்கள் என்பதை பார்க்கவும்.
 

<center><FORM><SELECT name="URL"
onChange="if(options[selectedIndex].value)
window.location.href=
(options[selectedIndex].value)">
<OPTION value="">My other stuff</OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>1. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>2. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>3. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>4. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
</SELECT><NOSCRIPT><INPUT type=submit value="Go">
</NOSCRIPT></INPUT></FONT></FORM></center>

http://tamilbazaar.blogspot.com/2009/08/drop-down-menu_6454.html

பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..


எந்த ஒரு பைல் அல்லது போலடர் மீதும் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Copy To Folder மற்றும் Move To Folder எனும் கட்டளைகளை தோன்றச் செய்யலாம். அதன் மூலம் பைல், போல்டர்களை விரும்பிய இடத்திற்குப் இலகுவாகப் பிரதி செய்து கொள்ளவோ அல்லது நகர்த்த்வோ முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

முதலில் ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து (+) குறியீட்டில் க்ளிக் செய்து HKEY_CLASSES_ROOT என்பதை விரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு (+) குறியீட்டில் க்ளிக் செய்து AllFilesystemObjects → shellex → ContextMenuHandlers வரை விரித்துக் கொள்ளுங்கள். அடுத்து ContextMenuHandlers மேல் ரைட் க்ளிக் செய்து New → Key தெரிவு செய்யுங்கள்.

அப்போது போல்டர் அமைப்பில் ஒரு புதிய கீ தோன்றக் காணலாம். அதற்கு Copy To Folder என பெயரிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனைத் தெரிவு செய்து விண்டோவின் வலப் புறம் உள்ள default எனும் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து Modify தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் பெட்டியில் Value Data எனும் பகுதியில் {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} எனும் பெறுமானத்தை டைப் செய்து ஓகெ சொல்லி ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடி விடுங்கள்.

அவ்வளவு தான். இப்போது ஒரு பைல் அல்லது போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்ய Copy To Folder எனும் கட்டளையும் தோன்றக் காணலாம். இதே வழியிலேயே Move To Folder எனும் கட்டளையை உருவாக்கலாம். அதற்கு Move To Folder எனும் புதிய கீயை உருவாக்கி அதன் டிபோல்ட் பெறுமானமாக {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} என வழங்குங்கள்


http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_1444.html


பதிவர்களின் பின்னூட்டத்தை வித்தியாசமாக காண்பிக்க!

பதிவர்களின் பின்னூட்டத்தை வித்தியாசமாக காண்பிக்க!
வலைப்பூக்களில் பின்னூட்டத்தை பொறுத்தவரைக்கும் பதிவரின் பின்னூட்டமெது வாசகரின் பின்னூட்டமெது என்பதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியம் ஆனால் இதை நிறுவுவதன் மூலம் இந்த குறையை நிவர்த்தி செய்யலாம்.

click Layout இனி click Edit HTML click Download Full template இனி Expand Widget Templates

இதற்கு பின்னர் கீழே கொடுத்திருக்கும் code ஐ கண்டுபிடிக்கவும்.



இதை கண்டுபிடிக்க Ctrl + F ஐ பயன்படுத்தி அதனுள் இந்த code ஐ<b:loop values='data:post.comments' var='comment'> இட்டு தேடவும். அப்போது மேலே கொடுத்திருக்கும் code முழுவதையும் காண்பிக்கும்.

இனி மேலே கொடுத்துள்ள code ஐ கண்டுபிடித்ததும் அதை நீக்கி விட்டு கீழே கொடுத்திருக்கும் code ஐ நிறுவவும்.





இனி இந்த code </b:skin>
ஐ கண்டுபிடித்து அதற்கு மேல் கீழ் கொடுத்திருக்கும் code ஐ நிறுவுங்கள்.




.author-comments {
background: #cccccc;
border: 1px solid #333333;
padding: 5px;
}
இனி சேமித்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் தளத்தில் இது நிறுவப்பட்டிருக்கும்.

http://www.tamilcatholican.com/2009/08/blog-post_14.html

Share/Save/Bookmark

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics

Blog Archive

HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video

Blog Widget by LinkWithin