கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய  இணைய  இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில்  இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gifபேஸ் புக்கில்  இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg

இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Sunday, July 26, 2009

சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.

சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.


போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
Share/Save/Bookmark

இன்னும் இந்தியாவில் வராத "மொபைல் நுட்பங்கள்"?இன்னும் இந்தியாவில் வராத "மொபைல் நுட்பங்கள்"?


கவல் தொடர்புத்துறையில் இந்தியா நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருப்பதாக அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்க நேர்கிறது. மே மாதத்தில் 30 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள், மொத்த இணைப்பு 20கோடியை தாண்டிவிட்டது, உலகிலேயே சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளது என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் சேவையை வழங்கிவருகின்றன.

பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இன்னும் இந்தியாவில் முழுமையாக செய்யல்படுத்தவில்லை. இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக்கொண்டிருக்கிறது.

பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE,CAALERTUNES,RINGTONES,WALLPAPERS,
GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் இன்னும் முழுமையாக அறிமுகப்படுத்தவில்லை, காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆப்ரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும் .

* VISUAL RADIO - (விசுவல் ரேடியோ)

இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும், பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும் போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே திரையில் நம்மால் பார்க்க முடியும், ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படம் என்ன?, பாடலை பாடியது யார்?உட்பட ப்பல விபாரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் உட்பட எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரலையாக காண முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது, அது வெற்றி பெறவே உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது. இந்த நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,

இந்த வகை போன்கள் 5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது.குறிப்பாக நோக்கியாவின் N-SERIES போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

* PUSH TO TALK - (புஷ் டூ டாக்)

இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது.

இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும் அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,

அதாவது பொதுவாக CONFERENCE கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆப்ரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.

புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. எப்போது உண்மையிலேயே இந்தியா தகவல் தொழில் நுட்பத்துறையில் முன்னேறும்?

பின்குறிப்பு - 1 : அ(ச)ண்டை நாடான இலங்கையில் 3G சேவை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் அதன் அண்ணன் இந்தியாவில் இன்னும் அதன் அரிச்சுவடையே காணும்.

பின்குறிப்பு - 2: இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மொபைல்களை நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இங்குள்ள மொபைல் ஆப்ரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை.அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த தொழில்நுட்பங்களை பார்க்க முடிவதில்லை.http://www.sakthipages.com/2009/07/blog-post_20.html

Share/Save/Bookmark

யு–ட்யூப் வீடியோகளை ஐ பாட் சாதனத்திற்கு மாற்ற...!

யு–ட்யூப் வீடியோ காட்சிகளை என் ஐ பாட் சாதனத்திற்கு டவுண்லோட் செய்து காண விரும்புகிறேன். ஆனால் பார்மட் பிரச்சினை ஏற்படுகிறது. எம்பி 4 பார்மட்டில் வேண்டும். இதற்குத் தீர்வு தரும் புரோகிராம்களைக் கூறவும்.


http://www.zwtm.com/wp-content/uploads/2007/12/apple_ipod_nano.jpgஏதேனும் யு–ட்யூப் வீடியோவினை வீடியோவாகவோ அல்லது ஆடியோ பைலாகவோ ஐ பாட் சாதனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஐ பாடுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

இதில் என்ன முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் ஐ–பாட் என்ன பார்மட்டை இயக்க முடியும் என்பதனை அறிந்து அந்த பார்மட்டில் சம்பந்தப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ பைலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் சைட்டுகளில் கிடைக்கும் பல ஆன்லைன் யு–ட்யூப் டவுண்லோடர் புரோகிராம்கள் flv பார்மட்டில் மட்டுமே இவற்றை டவுண் லோட் செய்திடும் வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்த வெப்சைட்டுகளைத் தவிர்க்கவும்.உங்களுக்குத் தேவையான பார்மட்டில் இவற்றை டவுண்லோட் செய்திடும் வசதியினை ஒரு சில தளங்கள் தருகின்றன. அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றாக நான் கருதுவது http://vixy.net ஆகும்.இங்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோவிற்கான யு.ஆர்.எல். முகவரியினை இதில் தர வேண்டும். கீழ்க்காணும் பார்மட் ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.


l AVI for Windows (DivX + MP3)


l MOV for Mac (MPEG4 + MP3)


l MP4 for iPod/PSP (MPEG4 + AAC)


l 3GP for Mobile (MPEG4 + AAC)


l MP3 (audio only)


உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் உடனே வீடியோ அல்லது ஆடியோ பைல் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் உருவாக்கப்படும். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது.


http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=732&dt=07-13-09


http://pallavi09.com/09/images/img_1356_dance.jpg
Share/Save/Bookmark

BLOGS - தயாரிக்க உதவி வேண்டுமா!

BLOGS - தயாரிக்க உதவி வேண்டுமா!


http://4.bp.blogspot.com/_csA9Dr2z_jE/ScgmjUvUOuI/AAAAAAAAAO4/6SPDYwifOxU/s400/blogger+help.jpg

இணைய உலகில் அவரவர்களுக்கென்று தனி வலைமனைகளை அமைத்துத் தங்கள் கருத்துக்களை வெளியிடுவது இன்றைய வாழ்க்கையின் ஒரு பரிமாணமாக அமைந்துவிட்டது. ஆடூணிஞ்ண் என அழைக்கப்படும் இந்த வலை மனைகள் அமைப்பதும், பராமரிப்பதும் அவற்றில் கருத்துக்களை எழுதுவதும், நண்பர்களுக்கு அவை குறித்த தகவல்களை அனுப்புவதும் மிகவும் எளிதான செயல்களாக இன்று மாறிவிட்டன.

பிளாக்குகளை உருவாக்குவதில் நண்பர்களிடையே நலமான போட்டியும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பிளாக் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என அதற்குப் பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவுவதற்கென்றே பல தளங்கள் அதற்கான புரோகிராம்களை வழங்குகின்றன. அவற்றில் மிகச் சிறந்ததாக அண்மையில் நான் பார்த்தது http://www.allblogtools.com/ என்ற முகவரியில் உள்ள தளமாகும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியும் ஆழ்த்துவது இதன் பலவகையான டூல்ஸ்கள் தான். டூல்ஸ், டிரிக்ஸ் மற்றும் தகவல்கள் என பலவகைகளில் ஒரு பிளாக் அமைக்கத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.

இரண்டு வகைகளில் இவற்றைத் தேடிப் பெறலாம். பக்க வாட்டில் ஒரு மெனு தரப்பட்டுள்ளது. அத்துடன் புளு நேவிகேஷன் மெனு ஒன்றும் தரப்பட்டுள்ளது.

புளு நேவிகேஷன் மெனுவில் கிடைக்கும் வகைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.


1. Blogger Templates: இங்கு தான் நம் பிளாக்குகளை அமைக்க அடிப்படை கட்டமைப்பு கிடைக்கிறது. எந்த வகை, என்ன அமைப்பு மற்றும் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கீழே இருக்கும் எண்கள் பக்கங்களைக் குறிக்கின்றன. இவற்றின் மூலம் பல பக்கங்களில் உள்ள டெம்ப்ளேட்டுகளைக் காணலாம்.ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் அதனைக் கிளிக் செய்தால் அதனை முழுமையாகப் பெற லிங்க் ஒன்று கிடைக்கும்.(கூகுள் விளம்பர பாப் அப்களும் கிடைக்கும்; அவற்றைத் தள்ளிவிடுங்கள்). இந்த லிங்க்கிள் கிளிக் செய்தால் மிக அழகான வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த எந்தவிதமான தடையும் இல்லை.


2. Blogger Tricks: இந்த பிரிவில் உங்கள் வலை மனையை வெற்றிகரமான ஒன்றாக அமைக்கத் தேவையான ட்ரிக்குகள் கிடைக்கின்றன. பலவகைகளில் இவை வகைப்படுத்தப்பட்டு கிடைப்பது நம் வேலையை எளிதாக்குகின்றன.


3. Blogger Tools: இதில் நான்கு வகையான டூல்ஸ் தரப்பட்டுள்ளன. அவை glitter generator, a signature generator, a static image generator, மற்றும் a HTML color code generator ஆகும். இவை அனைத்தையும் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் பிளாக்குகளை வண்ணமயமாக்க உதவும் HTML color code generator மிகவும் பயனுள்ள ஒரு சாதனம். பெரிய அளவில் இதனை நாம் பயன்படுத்தலாம்.


4. Blogger Falling Objects : உங்கள் பிளாக்கில் நட்சத்திரங்கள், காதல் அடையாளச் சின்னங்கள் பின்னணியில் விழுவது போல் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா! உங்கள் எண்ணத்திற்குத் தீனி போடும் வகையில் இந்த பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டாயம் உங்கள் பிளாக்குகளில் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இவற்றை எப்படி உருவாக்கலாம் என்பதை இந்த பிரிவில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.


5.Glitters: இந்த பிரிவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னும் இமேஜஸ் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்து பிளாக்கில் இணைத்துக் கொள்ளலாம்.


6. Animations: அனிமேஷன் எனப்படும் சிறிய அசையும் உருவங்கள் உங்கள் வலைமனையில் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த பிரிவு உங்களுக்கு நிறைய அனிமேஷன் பைல்களைத் (.GIF) தருகிறது.


மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் பிரிவுகளைச் சார்ந்தே தரப்பட்டுள்ளன. இந்த தளத்திற்குச் சென்றால் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.

இங்கு சென்று வந்த பின் இதுவரை வலைமனை அமைக்காதவர்கள் இதன் எளிதான சாதனங்களைப் பெற்று அமைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்கனவே அமைத்தவர்கள் தங்கள் பிளாக்குகளுக்கு மெருகூட்டுவார்கள் என்பது உறுதி.

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=731&dt=07-13-09
Share/Save/Bookmark

உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?..

ரீஸ்டார்ட் ஆகும் கம்ப்யூட்டர்
http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4535317/computermonitor-main_Full.jpg


கம்பம் என்ற ஊரிலிருந்து ஒரு வாசகர் தன் கம்ப்யூட்டர் அடிக்கடி தானாக ரீஸ்டார்ட் ஆவதாகக் குறிப்பிட்டு எழுதி அவரே பல நிலைகளில் கம்ப்யூட்டரைச் சோதனையிட்டுப் பார்த்தும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி இருந்தார். வழக்கமாக நாம் எண்ணும் காரணங்களுடன் அவர் எழுதிய காரணங்களும் சரியாகவும் புதுமையாகவும் இருந்தன. இது போன்ற பிரச்சினை குறித்த கடிதங்கள் அதிகம் வருவதால் அந்த காரணங்கள் அனைத்தையும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு பட்டியலிடப்படுகின்றன.


1. உங்கள் கம்ப்யூட்டர், இயக்கத்தில் சூடு அடைகிறது. ஏர் கண்டிஷனர் குளிரில் இருந்தாலும் உள்ளே சூடு உருவாகிக் கொண்டு தான் இருக்கும். அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடுகையில் கம்ப்யூட்டரின் சிபியு தானாக ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். எதனால் சூடு ஏற்படுகிறது? கம்ப்யூட்டரில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் அப்படிப்பட்டவையே. அவை இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.

மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ ஆடியோ புரோகிராம்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும். அடுத்ததாக அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.

சூடு அதிகமாவதெல்லாம் என் கம்ப்யூட்டரில் இல்லை; இருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள டேட்டாவினைப் பெற முயன்று தோற்றால் கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும். இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம்.


இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிஸ்டம் எர்ரர் ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள Start, Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart," என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும். இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கம்ப்யூட் டர் எர்ரர் ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.

இந்த செட்டிங்கை விண்டோ விஸ்டாவில் எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். Start>Control Panel சென்று "System" என்பதில் கிளிக் செய்திடவும். (இதனைப் பெற நீங்கள் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்) இந்த விண்டோவில் "Advanced System Settings" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் "Startup and Recovery" என்பதன் கீழ் பார்க்கவும். இங்கு "Settings" பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart" என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

அநேகமாக மேலே சொன்னவற்றில் இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும் நன்மையும் தீமையும் பிறர் தர வரா என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அண்மையில் என்ன செய்தீர்கள் என்று பார்க்கவும். ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம். அல்லது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை இணைத்திருக்கலாம். அப்படியானால், அதனை நீக்கிப் பார்க்கவும். பிரச்சினை தொடர்கிறதா என்று கவனிக்கவும். மீண்டும் பிரச்சினை இருந்தால் இணைத்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான புதிய டிரைவர் தொகுப்பினை அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் தளத்திலிருந்து இறக்கிப் பதியவும்.


இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை ஏதேனும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினாலும் ஏற்பட 100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே நீங்களாகக் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஸ்பைவேர் கண்டறியும் தொகுப்பினையும் இயக்கிப் பார்க்கவும். அடுத்ததாக கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம் பிரிவிற்கான ஐகானில் கிளிக் செய்து உங்களுக்குத் தற்சமயம் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கவும். தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதும் ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு மருந்தே.

உங்களுக்குப் பிடித்தமான வீடியோவினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், நண்பருடன் சேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பிரியமான கடிதத்தினைத் தயார் செய்து கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம் என்ன கொடுமைடா என்று எண்ணத் தோன்றும். எனவே மேலே குறிப்பிட்ட வழிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப் பார்த்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவே புத்திசாலித்தனம்.

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=747&dt=07-27-09

http://news.cnet.com/i/bto/20080612/lg_monitor_340x316.jpg
Share/Save/Bookmark

உங்களுக்கு பிடித்த MP3 பாடல்களை கேட்க முடியவில்லையா?

இலவச சிடி ரிப்பர்


http://www.pothimalanews.com/index_files/image466.gif

கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கும் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகிப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் நமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில் லை. ஏனென்றால் அவை எம்பி3 பார்மட்டில் இல்லை என்பதே காரணமாகும். சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்கு கின்றன. ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக் கின்றன. என்ன செய்யலாம்? எப்படி சிடியில் உள்ள பாடல் களை எம்பி3 பார்மட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்களில் பட்டது. அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும் புரோகிராம் ஆகும். இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மட் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம். முதலில் http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.

பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள். அதன்பின் முதலில் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். இதற்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இருக்கும் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது உருவாக்கி அதனை உங்கள் தேர்வாக செலக்ட் செய்திடுங்கள். இதனை ஒரு முறை செய்தால் போதும். அதுவும் சிடி ரிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும். இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினைச் செருகவும். சிடியினைச் செருகியவுடன், மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் சிடி ரிப்பர் விண்டோவின் கீழாக உள்ள “டி” என்பதில் கிளிக் செய்திடவும். இதனால் பாடல்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக அனைத்து தகவல்களும் பதியப்படும். அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அனைத்து பாடல்களும் எம்பி3 பார்மட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும். பின் இந்த எம்பி3 பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிட மெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=749&dt=07-27-09
Share/Save/Bookmark

தேடுதல் வசதி இல்லாதத் தளங்களில் தேடுவது எப்படி?

தகவல் அதிகமாக இருக்கும் சில தளங்களில் கூட தேடுதல் வசதி இருப்பதில்லை. அப்படிப்பட்ட தளங்களில், கூகிள் உபயோகித்துத் தேடுவது எப்படி என்று பார்ப்போம்.
கூகிளில் தேடு சொல் மட்டும் கொடுத்தால்,  எல்லா இணையத் தளத்திலும் தேடி பதில் தரும்.  குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து மட்டும்  முடிவு வேண்டும் என்றால்,  கூகிளில் உள்ளிடும் போது, தேடு சொல்லைத் தொடர்ந்து, +site:http://www.sitename.com என கொடுக்கவும்.
கூகிளில் கொடுக்க வேண்டிய Format:  

keyword - தேடு சொல்.
http://www.sitename.com என்பது எந்த தளத்தில் தேட வேண்டுமோ, அந்த தள முகவரி.

(ஜிமெயில் என்று இந்த தளத்தில் தேடிட, இவ்வாறு கொடுக்க வேண்டும்!)


http://tamiltech.indioss.com/search/label/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D

Share/Save/Bookmark

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.  குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே! 
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. 

செய்முறை விளக்கம்:

1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2).  இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.  Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, "Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க.  (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)

3).  இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும்.  அதன் மீது சுட்டியை வைத்து,  வலது பொத்தானை சொடுக்கி, "Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.  
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.


நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும். 

செஞ்சு பாருங்க, சந்தேகம் என்றால் கேளுங்க.

http://tamiltech.indioss.com/search/label/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

Share/Save/Bookmark

♥ விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் (email) முகவரியைக் காத்திடுங்கள்! ♥

இணைய உபயோகிப்பாளர்கள்/ பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைப்பூவில்(blog), இணைய கருத்தரங்குகளில்   (Forum) தருகின்றனர்.  ஆனால், இதில் என்ன பிரச்சனை என்றால், விசமிகளால் இயக்கப்படும் "Robot" எனப்படும் தானியங்கி ஸ்கிரிப்ட்கள் உங்கள் வலைத்தளத்தை / வலைப்பூவைப் படித்து,அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை மட்டும், பிரித்து எடுத்து சேமித்து வைத்திடும்.  பின் தேவையில்லா குப்பை மின்னஞ்சல்கள் (Spam message) அனுப்பப் பயன்படுத்துகின்றனர்.  இதை spamming என்பார்கள். இதை தடுத்திட எளிய வழிகள் உள்ளன.

வலைப்பூவிலோ, வலைத்தளத்திலோ மின்னஞ்சல் முகவரியை, படமாக மாற்றி வெளியடலாம்.  இதை Robot-களால் படிக்க இயலாது.
உங்கள் முகவரியை எளிதாக படமாக மாற்றிட, இந்த தளத்திற்குச் செல்லவும். http://services.nexodyne.com/email/
 படங்களாக உள்ளீடு செய்ய முடியாத இடங்களில்,  உங்கள் முகவரியை  example (at) gmail (dot) com போன்று பிரித்தும் கொடுக்கலாம்.

இப்படி கொடுப்பதால்,  விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியையும்,  உங்களையும் காத்திடலாம். 

ஜிமெயிலில் ஸ்பேமில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழியுள்ளது. ஜிமெயில் பயனர்கள் அதை பற்றிப் படிக்க இங்கே செல்லவும்.http://tamiltech.indioss.com/2009/02/email.html


Share/Save/Bookmark

♥ எந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற....! ♥

நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம்.

சுட்டி http://www.convertfiles.com/
இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.
மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.
இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை தரவேற்றி நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம்.

ARCHIVE

RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
TGZ to TAR, RAR, ZIP
TAR.GZ to TAR, RAR, ZIP
ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ

DOCUMENT

DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP

PRESENTATION

ODP to PPT, PDF, SWF
PPT to ODP, PDF, SWF

IMAGE

BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
GIF to BMP, JPG, PNG, TIF, PDF
JPG to GIF, BMP, PNG, TIF, PDF
PNG to GIF, JPG, BMP, TIF, PDF
TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF

AUDIO

AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA

VIDEO

3GP to AVI, MOV, WMV, M4V
ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V
AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V
MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V
M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV
MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V
WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V

OTHER

EPS to GIF, JPG, PNG
PSD to GIF, JPG, PNG
Share/Save/Bookmark

♥ஜி மெயில் பேக்அப் ♥

கூகுள் டாக்குமெண்ட் பேக்அப்http://userlogos.org/files/logos/sjdvda/gmail.png

கூகுள் மெயிலை பேக்அப்பாக நமது கணினியில் பதிந்துவைத்துக்கொள்வதற்கு மென்பொருள் இருப்பது போல http://www.gmail-backup.com/


கூகுள் டாக்குமெண்ட்டுகளையும் பேக்அப் செய்துவைத்துக்கொள்ளமுடியும். இம்மென்பொருளை இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளவும். http://gs.fhtino.it/gdocbackup


http://nathikarai.blogspot.com/2009/07/blog-post_21.htmlShare/Save/Bookmark

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics

Blog Archive

HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video
Blog Widget by LinkWithin