
ஏதேனும் யு–ட்யூப் வீடியோவினை வீடியோவாகவோ அல்லது ஆடியோ பைலாகவோ ஐ பாட் சாதனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஐ பாடுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இதில் என்ன முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் ஐ–பாட் என்ன பார்மட்டை இயக்க முடியும் என்பதனை அறிந்து அந்த பார்மட்டில் சம்பந்தப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ பைலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் சைட்டுகளில் கிடைக்கும் பல ஆன்லைன் யு–ட்யூப் டவுண்லோடர் புரோகிராம்கள் flv பார்மட்டில் மட்டுமே இவற்றை டவுண் லோட் செய்திடும் வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்த வெப்சைட்டுகளைத் தவிர்க்கவும்.
உங்களுக்குத் தேவையான பார்மட்டில் இவற்றை டவுண்லோட் செய்திடும் வசதியினை ஒரு சில தளங்கள் தருகின்றன. அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றாக நான் கருதுவது http://vixy.net ஆகும்.
இங்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோவிற்கான யு.ஆர்.எல். முகவரியினை இதில் தர வேண்டும். கீழ்க்காணும் பார்மட் ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
l AVI for Windows (DivX + MP3)
l MOV for Mac (MPEG4 + MP3)
l MP4 for iPod/PSP (MPEG4 + AAC)
l 3GP for Mobile (MPEG4 + AAC)
l MP3 (audio only)
உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் உடனே வீடியோ அல்லது ஆடியோ பைல் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் உருவாக்கப்படும். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது.
http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=732&dt=07-13-09


No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com