கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!
நான் இங்க இருக்கேன்....!
Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே! "நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!" | ||||||||||
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here |
ஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய
இமெயில் குழுவில் இணைய...Visit this group
இமெயில் குழுவில் இணைய...
Subscribe to beyouths |
Visit this group |
Followers
என் வலைப் பூக்கள்....!
-
♥ காதல் தீ..! ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...14 years ago
-
♥ சீனாவிலும், தொடங்கியது புலியாண்டு! ♥ - [image: http://www.buc.edu.in/sde/images/indian_flag.gif] [image: http://newsimg.bbc.co.uk/media/images/44059000/jpg/_44059461_india_bose.jpg] ...14 years ago
-
♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே !எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...14 years ago
-
கூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி.....! - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...14 years ago
-
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்? - [image: http://2.bp.blogspot.com/_VABrPZnj4j0/SwtvSziJvqI/AAAAAAAACDE/OO8_QsNvIbw/s1600/HappyBirthdayFlowers.jpg] பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம...15 years ago
About Me
- ♥ மனிதன்@சென்னை ♥
- e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
Tuesday, August 4, 2009
செல்போனில் இ- மெயில் தகவல்களை பெறவது எப்படி?
தண்ணீரில் மொபைல் விழுந்தால்...
அண்மையில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் முடிவுற்றபோது கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது பயிற்சி மருத்துவர் ஒருவர் தலையில் கை வைத்தவாறு சோகமாக கட்டிட வராண்டாவில் அமர்ந்திருந்தார். போராட்டம் தான் நல்ல படியாக முடிந்துவிட்டதே; ஏன் கவலை? என்று கேட்டபோது மேலாக அணியும் டாக்டர்களுக்கான கோட் ஒன்றைத் தன் தோழியிடம் பெற்று அணிந்ததாகவும் அது பழகாத கோட் என்பதால் அதில் பாக்கெட்டில் இருந்த மொபைல் தண்ணீர் உள்ள இடத்தைத் தாவுகையில் கீழே இருந்த நீருக்குள் மூழ்கிவிட்டதாகவும் கூறினார். உடனே மொபைல் போனை எடுத்துவிட்டாலும் திரை வெளிறிப்போய் எதுவும் ஒர்க் ஆகலை என்று வருத்தத்துடன் இருந்தார். இது போன்ற சூழ்நிலை யாருக்கும் ஏற்படும். குறிப்பாக புதிய சூழ்நிலை, ஆடை மாற்றல் இருப்பின் அதற்குப் பழக நேரம் ஆகும் என்பதால் மொபைல் போன்கள் விழ வாய்ப்புண்டு. நீரில் விழுந்தால் சேதம் அதிகம் என்பதால் நீர் அருகே, தரையில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம், பாத்ரூம், வாஷ் பேசின் போன்ற இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். சரி, தண்ணீரில் விழுந்துவிட்டால் சென்ன செய்வது என்று பார்ப்போமா!
1. போனை உடனே வெளியே எடுக்கவும்: இதனை நீங்கள் தாமாகவே செய்துவிடுவீர்கள் என்றாலும் சில வேளைகளில் விழுந்த நீரின் தன்மை காரணமாக நீங்கள் தயங்கலாம். எது எப்படி இருந்தாலும் போன் உடனே எடுக்கப்பட வேண்டும். உடனடியாக அதனை உலர்ந்த ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லவும். உங்கள் ஆடைகள் ஈரமானதாக இருந்தால் வேறு துணிகள் மீது அல்லது தாள்கள் மீது வைக்கவும்.
2. பேட்டரி நீக்குக: உடனடியாக போனைத் திறந்து பேட்டரியை நீக்கவும். போனை ஆப் செய்திட வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டாம். பேட்டரியை எடுத்துவிட்டால் அது ஷார்ட் சர்க்யூட் ஆவது தடுக்கப்படும்.
3. சிம் நீக்குக: பத்திரமான இடத்திற்கு வந்துவிட்டீர்களா! சிம் கார்டினையும் நீக்கவும். ஏன் பத்திரமான இடம் என்றால், உங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தில் சிம் கார்டினை எங்காவது மறந்து வைக்கலாம் அல்லது தொலைத்து விடலாம். சிம் கார்டினை ஏன் எடுக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். உங்கள் மொபைல் போனின் சர்க்யூட்டில் சிம் கார்டும் இணைந்த ஒன்றாகும். எனவே பிரச்சினையில் அதிலும் ஷார்ட் சர்க்யூட் தவறு ஏற்படக் கூடாது அல்லவா? மேலும் சிம்மை எடுத்து அதில் உள்ள ஈரத்தினை உலர்த்திப் போக்கிவிட்டால் இன்னொரு போனில் இணைத்துப் பயன் படுத்தத் தொடங்கலாமே.
4. போனை உலர்த்துங்கள்: ஈரமான ரோஜாவாக மாறிவிட்ட உங்கள் மொபைல் போனுக்கு சரியான வைத்தியம் இதுதான். அதில் உள்ள ஈரம் அனைத்தையும் உலரச் செய்திட வேண்டும். அனைத்து ஈரமும் உலர்ந்து விட்டால் எதுவுமே நடக்காதது போல மொபைல் போனை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு மிகவும் எளிமையான வழி போனின் மேல், கீழ் மூடிகளைக் கழற்றி வெறுமையான இடத்தில் அப்படியே உலர வைப்பதுதான்.
பலர் உடனே தாங்கள் பயன்படுத்தும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்துவார்கள். இது மிகவும் தவறு. அதிலிருந்து வரும் வெப்பம் போனை சேதப்படுத்தலாம். சிலர் டேபிள் விளக்கை எரிய வைத்து அந்த சூட்டில் வைத்துவிடுவார்கள். நாம் என்ன கோழி முட்டையப் பொரித்து குஞ்சாகவா மாற்றப் போகிறோம். இதுவும் தவறுதான். உங்களிடம் வேக்குவம் கிளீனர் இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இது மொபைல் போனில் உள்ள ஈரப்பதத்தை இழுத்துவிடும். ஹேர் ட்ரையர் எதிர் திசையில் செயல்படும் என்பதால் தவிர்க் கவும். வேக்குவம் கிளீனரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். பின் போனை நல்ல சுத்தமான துணியில் வைத்துவிடவும். இந்த துணி மொபைல் போனிலிருந்து வரும் ஈரத்தினை உறிஞ்சிக் கொள்ளும்.
5. இன்னும் ஈரமா?: ஆம், போன் முழுவதும் இன்னும் ஈரம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். இதனை எப்படித்தான் இழுப்பது. இதற்கு வேண்டியது போனைச் சேதப்படுத்தாமல் ஈரத்தை உறிஞ்சும் ஏதாவது ஒரு பொருளில் போனை வைப்பதுதான். இதற்காக நாம் ஹார்ட்வேர் அல்லது கெமிக்கல் கடைகளுக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் சமைக்காத அரிசி இருக்கிற தல்லவா! அரிசி உள்ள பாத்திரத்தில் உங்கள் போனை அப்படியே வைத்திடுங்கள். இதில் 2 அல்லது 3 மணி நேரம் இருக்க விடுங்கள்.
6. கடைசி உலர்த்தல்: இவ்வளவும் ஆன பின்னர் உங்கள் போனை அப்படியே ஒரு துணியில் சுற்றி ஒரு நாள் வைத்திடுங்கள். பின் அதனை எடுத்து பேட்டரி மற்றும் சிம் கார்டினை பொருத்தி இயக்கிப் பாருங்கள். அநேகமாக நிச்சயமாய் இயங்க ஆரம்பிக்கும். இதன் பின்னரும் திரையில் கோடு கோடாய்த் தெரிகிறதா? சில பட்டன்கள் செயல்படவில் லையா? போன் இயக்கம் தொடங்கவே மறுக்கிறதா? உங்கள் போனுக்கென உள்ள அதிகாரம் பெற்ற சர்வீஸ் இஞ்சினியரிடம் சென்று போனைக் கொடுத்து சரி செய்திடச் சொல்லுங்கள்.
http://www.dinamalar.com/weeklys/mmalarnewsdetail.asp?news_id=296&dt=08-04-09
மொபைல் போனில் தவிர்க்க வேண்டியவை
அவ்வப்போது அறிமுகமாகி வரும் தொழில்நுட்பங்கள் நம் வாழ்வை இனியவையாக்குகின்றன என்பது உண்மை தான்; ஆனால் நாம் மனிதப் பண்பாடுகளின் சில நல்ல அம்சங்களையும் இதனால், நம்மை அறியாமலேயே இழக்கி றோம். மொபைல் போன் பயன்படுத்துவதில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை நாம் தவிர்க்கலாமே. பொது இடத்திலிருந்து கடைசியாக நீங்கள் எப்போது மற்றவருக்கு இடையூறு ஏற்படும் வகையில் சத்தம் போட்டு பேசினீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படி சத்தம் போட்டு பேசியிருக்க வேண்டாமே என்று தோன்றுகிறது, இல்லையா. இனிமேல் திருத்திக் கொள்ளலாமே. அண்மையில் இன்டெல் எடுத்த கணக்கெடுப்பின்படி 90% பேர் தங்கள் அருகாமையில் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்தும் விதத்தினை ரசிக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதில் அதிக அளவில் வெறுக்கத்தக்க ஒரு செயல், வாகனம் ஒன்றை டிரைவ் செய்கையில் எஸ்.எம்.எஸ். அல்லது டெக்ஸ்ட், எண்ணை மொபைல் போனில் அமைப்பது. அனைவரும் இதனை மோசமான ஆபத்தான செய்கை என உறுதியாக எண்ணுகின்றனர்.
நடக்கும் போது டெக்ஸ்ட் டைப் செய்திட வேண்டாம். நீங்கள் எந்த திசையில் நடக்கிறீர்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. எங்காவது அல்லது யார் மீதாவது மோதிவிடுவீர்கள். யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறீர்களா! அப்போது உங்கள் போன் டோன் கொடுக்கிறதா? அல்லது அதிர்வைத் தருகிறதா? பேசுவதைத் தள்ளி வைத்து போனை எடுத்தால் அது அநாகரிகம். நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நபர் உங்களுக்கு முக்கியம் இல்லை என்ற எண்ணத்தை அல்லவா அது அவருக்குத் தோற்றுவிக்கும். நீங்கள் போனை எடுக்கவில்லை என்றால் உங்களை அழைப்பவர் நீங்கள் வேறு முக்கிய செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ளட்டுமே. அது தவறில்லையே. இதே போல போனில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் இன்னொரு அழைப்புக்கு மாறுவது. இதுவும் மறுமுனையில் நம்முடன் பேசிக் கொண்டிருப்பவர் நம்மைப் பற்றித் தவறான எண்ணத்தைக் கொள்வார்.
நீங்கள் பேசுவது மற்றவருக்குக் கேட்கும்படி பேச வேண்டாம். உங்களுக்கு கால்சுளுக்கு வந்து அவதிப்பட்டது ஏன் மற்றவருக்குத் தெரிய வேண்டும். எனவே எப்போதும் தெளிவாக, அதிகச் சத்தம் இன்றி சீராக, மெதுவான வேகத்தில் பேசவும். இந்தக் கட்டடத்தில் செல் போன் பயன்படுத்தக் கூடாது என்றிருக்கும் அறிவிப்புகளை அவசியம் மதிக்கவும். உங்கள் வீடு மற்றும் அலுவலகத் தனி அறை தவிர்த்துப் பிற இடங்களில் வைப்ரேஷன் மூலம் அழைப்புகளை அறியலாமே. உங்கள் போனில் உள்ள ரிங் டோன் எத்தனை பேருக்கு சந்தோஷத்தை தரும் என்று எண்ணுகிறீர்கள்.
http://www.dinamalar.com/weeklys/mmalarnewsdetail.asp?news_id=295&dt=08-04-09
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். இதனால் சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும். பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும். உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும். பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே. அதே போல விமான நிலையங்கள் மற்றும் விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை. மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.
தண்ணீரில் மொபைல் விழுந்தால்...
♥ இமெயில் வந்தால் sms ஓடி வந்து சொல்ல வேண்டுமா? ♥
உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,
உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில்
யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)
மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தில் பதிவு செய்யவும் முதலில் .
http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp
அதில் பெயர், மின்னஞ்சல் , உங்கள் மொபைல் எண் போன்றவற்றை தந்தால்
உங்கள் கைபேசிக்கு ஒரு குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே எண் அனுப்பப்படும்.
way2sms கணக்கில் 4 இலக்க சங்கேதே எண் கொடுத்து உள்ளே சென்றால் புதிய
password கேட்கும். அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab - ஐத்தேர்வு செய்தால்
ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு உருவாக்க பயனர் சொல் கேட்கும் .
உதாரணம் : example@way2sms.com
நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms கணக்கு உருவாக்கப்படும்.
GMail
Gmail பயனராய் இருந்தால் உங்கள் gmail அமைப்புகள் செல்லவும் . அதில்
Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில்
தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே
keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து சேமித்தால் போதும்.
Yahoo.co.in
உங்கள் yahoo கணக்கில் சென்று options-> Mail options செல்லவும்.
அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு
செய்யவும்.
Forward பகுதியில் உங்கள் way2sms முகவரியைத்தரவும். சேமிக்கவும்.
பின்னர் Way2sms கணக்கில் நுழைந்து Settings பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்யவும்.
Mobile preference பகுதியில் Alert me whenever கொடுங்கள்.
Time settings - ல் All 7 days & Round the clock கொடுங்கள். சேமியுங்கள்.
இனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்
உங்கள் கைபேசியில் அறிவிப்பாய் வந்து சேரும்.
குறிப்பு:
1.இது yahoo.co.in மற்றும் gmail க்கு மட்டுமே பொருந்தும்.
2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும். மறுபடியும் நீங்கள் உங்கள்
way2sms கணக்கில் நுழைந்து புதுபிக்கவேண்டும்.(Renew)
3.இதில் நீங்கள் இலவசமாக குறுந்தவகலும் (sms) அனுப்பலாம் இந்தியாவிற்குள்.
4.இங்கிருந்தே நீங்கள் உரையாடவும் முடியும் (Chatting)
♥ இமெயில் வந்தால் sms ஓடி வந்து சொல்ல வேண்டுமா? ♥
Pages
எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )
சற்று முன்....!
Search This Blog
Labels
- 2008 மென்பொருள் (1)
- BLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)
- e mail (2)
- fire fox (1)
- Mail Alerts (2)
- mobile (1)
- mobile epaper (1)
- MP3 (1)
- neswshunt daily thanthii (1)
- newshunt (1)
- newshunt.dinamani (1)
- NHMWriter (1)
- photo shop (1)
- sms (2)
- எந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)
- கூகுள் (1)
- கூகுள் தமிழ் தட்டச்சு (1)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- புக்மார்க் ஐகான் (1)
- போட்டோ ஷாப் (1)
- மென்பொருள் (1)
- மொபைல் (1)
- மொபைல் போனில் தமிழ் (1)
- மொபைல் போனில் பேப்பர் (1)
- யு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)
- வீடியோ (2)