கூகிள் பஸ்ஸிற்கான நீட்சி மற்றும் மென்பொருட்கள்
நண்பர்களே நம் கணிணியில் ஒரே மாதிரி கோப்புகள் நிறைய இருக்கும் உதாரணத்திற்கு ஒரு புகைப்படம் அதில் உள்ள பிக்ஸல் மற்றும் அளவு போன்றவை ஒன்றாக ஒன்று சி ட்ரைவிலும் இன்னொன்று மை டாக்குமென்ட்சிலும் இருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது இது போன்று ஏராளமான கோப்புகள் நாம் இரண்டு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் இதனால் வன்தட்டில் இடம்தான் அடைத்துக் கொள்ளுமே தவிர வேறு உபயோகம் இல்லை இது போன்று அனைத்து கோப்புகளையும் கண்டுபிடிக்க இந்த மென்பொருள் உங்களுக்காக சுட்டி இதன் சிறப்பம்சங்கள் இதன் மூலம தேவையில்லாத கோப்பை நீக்கலாம். ஒரு குறிப்பிட்ட டிஸ்க் அல்லது போல்டருக்குள் தேட முடியும்.கூகிள் நிறுவனத்தின் புதிய செயலி கூகிள் பஸ் (buzz) இதனுடைய சிறப்பம்சம் இது ஜிமெயில் உள்ளேயே இணைந்து இருப்பது சிறப்பாக இருக்கிறது. நீங்கள் உங்கள் ட்விட்டரில் ட்விட் செய்தால் இங்கும் தெரியுமாறு அமைக்கலாம். இந்த செயலி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட நிறுத்தி வைக்க முடியும். உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து நேரே கீழே சென்றால் அங்கு Turn off buzz என்று ஒரு லின்க் அதை அழுத்துங்கள் முடிந்தது. வேண்டும் என்றால் அதை மறுபடி அழுத்தினால் போதும்.
இதற்கான பயர்பாக்ஸ் உலாவி நீட்சி வெளிவந்துள்ளது அதை தரவிறக்க இங்கு செல்லுங்கள் சுட்டி
கூகிள் குரோமிற்கான நீட்சி தரவிறக்க சுட்டி
மிக சிறந்த வலை உலாவிகளில் ஒபராவிற்கு என்று ஒரு இடம் உண்டு. அந்த பிரவுசரில் ஒரு ஒன்பது கட்டங்கள் கொண்ட டேப் இருக்கும். அதில் நம் விரும்பும் இணையத்தளங்களின் பெயர்களை இட்டுக் கொள்ளலாம். அது நம் கணிணியில் மட்டுமே செயல்படும் வகையில் இருந்தது. இப்பொழுது அவர்கள் ஒரு தளம் தந்திருக்கிறார்கள் அதன் மூலம் அங்கு நம் ஒரு கணக்கினை திறந்து விட்டால் போதும் எங்கு சென்றால் நேரடியாக நம் தளத்தை அணுகலாம். ஒரு தடவை நீங்கள் கணக்கினை திறந்து விட்டால் அங்கு என்ன யூசர் நேம் கொடுத்திர்களோ அதனுடன் homepagestartup.com என்று சேர்த்தால் போதும். இனி உங்களுக்கு பிடித்த புக்மார்க்குகளை எங்கிருந்தாலும் அணுகலாம். உங்கள் நண்பர்களுடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
http://
இணையத்தள சுட்டி
மைக்ரோசாப்டிற்கு நிகரான திறந்த நிலை இலவச ஒபன் ஆபிஸ் 3.2 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது அதனை தரவிறக்க இங்கு செல்லுங்கள் சுட்டி
http://www.gouthaminfotech.com/2010/02/blog-post_12.html
எங்கே செல்கிறது கூகுள் பஸ்?
கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று.
ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
சரி எதற்காக இந்த கூகுள் பஸ்?
இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!!
இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது?
எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம்.
வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!!
அது மட்டுமல்ல?
இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!!
இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை.
Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்?
கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!!
இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம்.
எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள்.
கூகிள் செய்த தவறு பஷ்(BUZZ)
கூகிள் என்ற மாபெரும் இணைய சக்தி அண்மையில் கூகிள் பஷ் என்ற சேவையை பேஷ்புக், டிவிட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியது. நல்லதொரு சேவைதான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதன் பயன்பாட்டில் மிகப்பெரிய 'loop hole'லாக தகவல் திருட்டுக்கு துணைபுரிகிறது. கூகிள் சமூக வலைப்பின்னலையும், வணிகப்பின்னலையும், போட்டுக் குழப்பி பெரிய தவறைப் புரிந்துவிட்டது. தவறாக கருதக்காரணம் அந்த பஷ் சேவையை உயிரூட்டியப்பின் நமது இ-மெயில் தொடர்புகள் அனைத்தும் நமது அனுமதியின்றி வெளியுலகிற்கு போதுவுடைமையாக்குகிறது, இதன் மூலம் நமது இமெயில் தொடர்புகள் அனைத்தும் நமது பாளோயர்களாக மாற்றுவதனால் எளிதாக வேறுமனிதர்கள் நமது தொடர்புகளை அறியமுடிகிறது. இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால் வணிகரீதியாகவோ, தனிப்பட்ட நட்பாகவோ நாம் வைத்திருக்கும் இமெயில் தொடர்புகள் போதுவுடைமையாக்கப்படுவது தகவல் திருட்டுக்கு துணைபோகுமென்பதில் ஐயமில்லை. அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே சில சம்பவங்கள் நம்மையும் சற்று சிந்திக்கவைக்கிறது. உ.தா.) ஒருவர் இரண்டு வேறுப்பட்ட கம்பெனியுடன் ரகசியத் தொடர்புவைத்திருந்தால் பஷ்ஷின் மூலம் தொடர்புகள் வெளியுலகிற்கு வெளிவரும், இங்கே தகவல் உரிமைமீறப்படுகிறது (Serious Privacy Flaws)
எந்தவொரு மென்பொருளும் தகுந்த சோதனைக்குட்பட்டு தான் வெளிவரும் அப்படி வந்தாலும் ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆனால் கூகுளில் மாற்று ஏற்பாட்டிலும் ஓட்டையுள்ளது. பஷ்ஷை turn off செய்தாலோ அல்லது settings->label->hide செய்தலோ பஷ்ஷை விட்டு வெளிவந்துவிட்டதாக எண்ணமுடியாது காரணம் இவை வெறும் பஷ்ஷை மறைக்கத்தான் செய்கிறது. உண்மையில் வெளி உலகில் உங்கள் தகவல் அனாமத்தாகத்தான்யுள்ளது எவரும் எவருடையத்தொடர்பையும் கண்டுவிடலாம். சமூக தளத்தில் உள்ளவர்களைவிட வியாபாரரீதியாக ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது பேரிடர்.
இதற்கான பணிகளை கூகிள் தொடங்கிவிட்டாலும் முழுவதுமாக விலகக்கூடிய வசதியை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. எனவே புதிதாக பஷ் பயன்படுத்த எண்ணுபவர்கள் சற்று யோசித்து தொடங்கவும்.
நல்ல அறிமுகம்தான் ஆனால் தகுந்த வழிமுறை செய்யாவிடில் பஷ் புஷ்ஷா? என்ற கேள்வி வரும்.
ஏற்கனவே ஆரம்பித்தவர்கள் தவிர்க்க எண்ணினால் சில யோசனைகள் (இவை ஓரளவு பயன்தரும்)
1- மேற்குறிய படி turn off அல்லது settings->label->buzz->hide செய்யலாம்
2-உங்கள் profile பக்கத்தை முழுவதுமாக நீக்கிவிடுங்கள் உதா. http://www.google.com/profiles/*********
3-உங்களை பின்தொடரும் நபர்களை block செய்யுங்கள் நீங்கள் பின்தொடருபவரை unfollow செய்யுங்கள்.
ஒரு விஷயம்
நமது யாஹூ தொடர்புகளோ அல்லது வெற்றுத் தொடர்புகளோ வெளியே தெரிவதில்லை
ஆனால் வலையுலகிற்கு இவை பெரிய வரப்பிரசாதம்தான் (*conditions applied
http://ethirneechal.blogspot.com/2010/02/buzz.html
http://youthsmp3.blogspot.com/
பதிவுகளை மின்னஞ்சலில்
பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
Get more followers