கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய இணைய இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில் இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gifபேஸ் புக்கில் இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg

இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Sunday, September 20, 2009

Unicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி?

Unicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி?


இதற்காக நாம் முதலில் தமிழ் மொழியை செயற்படுத்த(Active) வேண்டும்...
(tested on windowXp)

அதன் படிமுறைகள் பின்வருமாறு.....

Open the Regional and Language Option wizard through the control panel

Select the language tap, and tick the both check box in supplemental language support click on Apply button. It ask for your Windows Xp bootable disk.

After installation of needed data, click on details button from the Regional and Language Option wizard.


Select the Tamil and click on Add... button


Click OK on Add Input Language wizard


 • Click OK on Regional and Language Option wizard


Add the language bar on taskbar


Click on the EN icon and select Tamil,

பி.கு. இதனை Xp install செய்யுபோதும் நிறுவலாம்.

இனி நீங்கள் விரும்பியவாறு Unicode பாவித்து தமிழில் தட்டுங்கள்...

http://121-kuhan.blogspot.com/2009/08/unicode-type.html

உங்கள் கணிணியில் Cut, Paste, Copy, Delete, Rename தடை செய்ய சிறு மென்பொருள்

நண்பர்களே சிலர் மட்டுமல்ல எல்லோருமே நினைக்கும் விஷயம் நம் கணிணியில் நம் மட்டுமே எதையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.ஏன் என்றால் யாரவாது தெரியாமல் உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளை அழித்து விடலாம். அல்லது பெயர் மாற்றம் செய்யலாம். நமக்கு தெரியாமல் அவர்களுடைய பென் ட்ரைவில் காப்பி செய்து எடுத்து செல்லலாம். இது போன்று நேராதிருக்கு உங்கள் நண்பர் அல்லது குழந்தைகளிடம் கணிணியை வேலை செய்ய கொடுக்கும் பொழுது இந்த மென்பொருளை ஆன் செய்து விடுங்கள் போதும். இதையெல்லாம் அவர்களால செய்யவே முடியாது.

என்ன செய்ய முடியாது கணிணியில்

1. Stops Cut - கட் செய்ய முடியாது
2. Stops Paste - பேஸ்ட் செய்ய முடியாது
3. Stops Copy - காப்பி செய்ய முடியாது
4. Stops Delete - டெலிட் செய்ய முடியாது
5. Stops Copy To - காப்பி டூ என்று வேறொரு ட்ரைவிற்கு மாற்ற முடியாது
6. Stops Move to - வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது
7. Stops Send To - வேறோரு இடத்திற்கு அனுப்ப இயலாது
8. Prevents renaming - பெயர் மாற்றம் செய்ய முடியாது
9. Disables Task Manager’s End Process button - டாஸ்க் மேனஜரில் என்ட் ப்ரோசஸ் பட்டனை உபயோகிக்க முடியாது.மென்பொருளை நிறுவிய பிறகு அதில் உங்களுக்கு என்று ஒரு சார்ட்கட் கீ உருவாக்க முடியும் உதராணத்திற்கு Ctrl + Shift + p என்று கொடுத்தால் போதும் உங்கள் மென்பொருள் உயிர் பெற்று விடும். பின் அதே கீகளை அழுத்தினால் போதும் நின்று விடும்

மென்பொருள் சுட்டி

மைக்ரோசாப்ட் வேர்ட் டெம்ப்ளேட் கோப்புகள் பெற சில இணையத்தளங்கள்

வலைத்தளச் சுட்டி

வலைத்தளச் சுட்டி

உங்கள் தட்டச்சு வேகத்தை இன்னும் அதிகப்படுத்த ஒரு மென்பொருள். இந்த மென்பொருளில் நீங்கள் தட்டச்சு செய்து பழிகினால் உங்கள் தட்டச்சு வேகம் இன்னும் மெருகேறும். இதில் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்து உள்ள டெக்ஸ்ட் கோப்புகளை Import அதை தட்டச்சு செய்து பழகலாம். இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக இயக்கலாம்.


மென்பொருள் சுட்டி

http://gouthaminfotech.blogspot.com/2009/09/cut-paste-copy-delete-rename.html

YOUTUBEபில் உங்களுக்கு பிடித்த பாடலை எப்படி MP3 பாடலாக மாற்றி டவுன்லோட் செய்வது


நீங்கள் YOUTUBEஇல் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது அதில் உங்களுக்கு ஒரு பாடல் பிடித்து விட்டது அதை MP3 யாக டவுன்லோட் செய்து உங்கள் செல்போனில் சேவ் செய்ய ஆசையாக உள்ளது அந்த பாடலை MP3 யாக டவுன்லோட் செய்ய நீங்கள் வேறு இணையத்தளங்களில் தேடி உங்களுக்கு அந்த பாடல் கிடைக்கவில்லை இப்படி உங்களுக்கு பிடித்த பல படல்களை உங்களால் தவற விடப்படுகிறது உங்களுக்கு பிடித்த படல்களை MP3 யாக டவுன்லோட் செய்ய இங்கு நான் ஒரு இணையத்தள முகவரியை கொடுத்துள்ளேன் அங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்களை MP3 யாக டவுன்லோட் செய்யலாம் இதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன்

இணையத்தள முகவரி : WWW.VIDTOMP3.COM
இப்ப உங்களுக்கு பிடித்த பாடல்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்
 1. முதலில் YOUTUBE.COM தளத்துக்கு சென்று அங்கு உங்களுக்கு பிடித்த பாடலின் URL ஐ கொப்பி செய்க
 2. அடுத்து நான் கொடுத்த VIDTOMP3.COM என்ற இணையத்தளத்துக்கு செல்க அங்கு சென்று நீங்கள் கொப்பி செய்த YOUTUBE ப்பின் URL ஐ பெஸ்ட் செய்க
 3. நீங்கள் பெஸ்ட் செய்து டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துக
 4. அந்த பட்டனை அழுத்தி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கிழே என்று கிடக்கும் DOWNLOAD MP3 அதை அழுத்துக
 5. பிறகு என்ற DOWNLOAD MP3 பட்டனை அழுத்தி சேவ் செய்க
இப்ப எப்படி டவுன்லோட் செய்வது பற்றி படங்களால் முலமான விளக்கம்
http://svttechnologya.blogspot.com/2009/09/youtube-mp3.html

நேரடியாகவே YouTube இலிருந்து காணொளிகளை (Videos) தரவிறக்குவது எப்படி?

YouTube இலிருந்து அதிலுள்ள காணொளிகளை(Videos) தரவிறக்கி(Download) பயன்படுத்த விரும்புபவர்கள் நேரடியாகவே YouTube இலிருந்து தரவிறக்கி கொள்வதற்கான மிகவும் எளிமையான நடைமுறை தான் இது.
நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Address Bar இல் http://www.youtube.com/ என்பதற்கு பதிலாக http://www.kickyoutube.com/ என தட்டச்சு செய்யுங்கள். அதாவது Youtube என்பதற்கு முன்னால் kick என்னும் சொல்லை போட்டால் போதும்.
பின்னர் தோன்றும் திரையில் நீங்கள் தரவிறக்க வேண்டிய காணொளியை தேடல் பெட்டியினுள் (Search Box) தட்டச்சு செய்வதன் மூலம் தேடி அதனை தெரிவுசெய்யுங்கள்.


பின்னர் விரும்பிய வடிவமைப்பினை (format:MP4,FLV,3GP,IPHONE,PSP,MP3) தெரிவு செய்து பச்சை நிறத்திலான GO என்பதினை அழுத்துங்கள்.GO என்பதினை தெரிவு செய்த பின்னர் நீல நிறத்திலுள்ள DOWN என்பதினை அழுத்துங்கள். இப்போது நீங்கள் தரவிறக்கி பார்க்கலாம்.


Facebook தகவல்: தற்பொழுது Facebook இன் பயனாளர்(User name) பெயருக்கு நீங்கள் நேரடியாகவே உங்கள் பயனர் பெயரையே பாவிக்கலாம். மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

http://vannitec.blogspot.com/2009/09/youtube-videos.htmlYahoo இன் புதிய அரட்டை பதிப்பு-10(Yahoo Messenger Beta-10)


நேற்று தான் Yahoo Messenger பதிப்பு-9 வெளியானது போல நாம் உணர்ந்திருக்கும் வேளையில், தற்போது பதிப்பு-10 இன் சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. பதிப்பு 9 வெளியாகி இன்னும் ஓர் ஆண்டு கூட முடியவில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் yahoo பணியாற்றி இதனை வெளியிட்டுள்ளது.
சமூக வலையமைப்பு மற்றும் வீடியோ வழி அழைப்பு இதில் மேம்படுத்தப் பட்டுள்ளது.
வீடியோ வழி அரட்டை அழைக்க இப்போது Icon ஒன்று தரப்பட்டு எமது வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.Instant Messenger வசதி தரும் பல Client Programs, webcam வழியாக ஒலி எழுப்பி அழைக்கும் வசதியைத் தருகின்றன. ஆனால் இந்த நடைமுறை இந்த பதிப்பில் Yahoo மாற்றியுள்ளது. இதன் மூலம் Skype செயல்பாட்டிற்கு, தான் ஒரு போட்டியாளர் என Yahoo காட்டியுள்ளது. ஏனென்றால் Skype தான் Voice Over Internet Protocol(VOIP) வழிகளுக்கு முதலில் வழி வகுத்தது.


இந்த பதிப்பில் வீடியோ அரட்டை , பேசும் ஒலிக் கூர்மை, படத் தெளிவு ஆகியவை சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பு அமுலில் இருக்கையில் ஆவணம்(file) பகிர்ந்து கொள்வது சில நேரம் குறைவான வேகத்தில் நடைபெறுகிறது. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் கணனி மற்றும் இணைய வேகமாகக் கூட இருக்கலாம். எனவே மிகச் சிறப்பாக இந்த பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கீழ்க்குறித்த அளவிலாவது நம்மிடம் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள்(சாப்ட்வேர்) இருக்க வேண்டும். Windows XP அல்லது அடுத்து வந்த Operating system, 1GHz Processor, 512MB RAM MEMORY, குறைந்தது 300Kbs வேகத்தில் இணைய இணைப்பு வேகம், அதேபோல குறைந்தது 128Kbs வேகத்தில் தரவேற்றும் (Uploading) வசதி, webcam, Microsoft Directx பதிவு ஆகியவை அமைப்பில்(system) இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகத் தேவைகளை Yahoo தளத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு : http://messenger.yahoo.com/winbeta

http://vannitec.blogspot.com/2009/09/yahoo-messenger-9-10.html

புகைப்படத்தை உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்ற இணையவழி மென்பொருள்

உங்கள் புகைப்படங்களை உயிரோட்டமுள்ள (Sort-of-living) புகைப்படமாக முப்பரிமாண தோற்றத்தில் (Sort-of-3D) பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான இணைய வழி மென்பொருள்.

Japanese app என்னும் மென்பொருளில் உங்கள் புகைப்படத்தை தரவேற்றி உங்கள் புகைப்படத்தை உயிரோட்டமுள்ள ஒரு புகைப்படமாக மாற்றி அமையுங்கள்.

http://labs.mppark.jp/hige/ என்ற இணையதளத்திற்கு சென்று CHANGE என்பதை அழுத்தி புகைப்படத்தை தரவேற்றி கொள்ளுங்கள்.
அதில் ஏற்கனவே உள்ள புகைப்படம் மாற்றம் பெற்று உங்கள் புகைப்படம் உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்றம் பெறுவதை நீங்கள் காணலாம்.
அத்துடன் நீங்கள் உங்கள் புகைப்படத்துக்கு அசைவியக்கங்களையும் (Animations) சேர்த்துக்கொள்ள முடியும். சுட்டியின் (mouse) அசைவுகளுக்கு ஏற்ப புகைப்படத்தின் அசைவில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.


http://vannitec.blogspot.com/2009/09/blog-post_20.html

அசையும் படங்களை (GIF)வலைப்பதிவில் பொதிய...


funn

இணைய தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. வலைப்பதிவு நுட்பங்களும் வலைப்பதிவுகளை இணையதளத்துக்கு இணையானதாக ஆக்க முயற்சித்து வருகின்றன. வலைப்பதிவு நுட்பங்கள் கூறும் பதிவுகள் பல இருப்பினும் நான் நீண்ட காலம் தேடியும் கிடைக்கதா தொழில்நுட்பத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பிளாக்கர் டிரிக் உள்ளிட்ட பல இணையதளங்கள் தொழில்நுட்பத் தகவல்களை ஆங்கிலத்தில் அளிப்பதால் தமிழில் தேடும் போது பல நுட்பங்கள் அறிந்து கொள்ள இயலாது போகிறது.

வலைப்பதிவுகளில் அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்வது எப்படி?

வலைப்பதிவுகளில் (jpeg) படங்களைப் பதிவேற்றம் செய்வது போல (gif) அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. மாறாக அசையும் படங்களை சாதாரணமாகப் பதிவுற்றம் செய்தால், அவை அசைவில்லாப் படங்களாகவே காட்சியளிக்கும்.

படிநிலை -1.

இத்தளத்தில் ஒரு இலவசமான பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின் அங்கு பதிவேற்றப் பகுதிக்குச் சென்று நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்பினை பதிவேற்றினால். அவர்கள் ஒரு நிரல்த்துண்டு (ஜாவா ஸ்கிரிப்ட்) தருவார்கள். அதனைக் காப்பி செய்து...

படிநிலை-2.

நம் வலைப்பதிவுக்குச் சென்று நாம் இடுகைப் பகுதியில் படம் எங்கு வரவேண்டுமோ அங்கு நிரலை ஒட்ட வேண்டும்.இப்போது இடுகையை வெளியிட்டுப் பாருங்கள்...
உங்கள் படம் அசையும் படமாகக் காட்சியளிக்கும்

http://gunathamizh.blogspot.com/2009/09/gif.html


இணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகளும் காரணங்களும்


இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும். இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம்.

முதலில் வந்த அந்த பிழைச் செய்தி நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்படும். ஆனால் நாம் முதலில் காட்டப்பட்டது மாற்றப்படாமல் இருப்பதாக எண்ணிக்கொண்டு என்டர் தட்டி வெப்சைட் லோட் ஆகிறதா என்று பார்ப்போம். இத்தகைய பிழைச் செய்திகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்டு அதன்பின் தொடர்ந்து முயற்சி செய்வது குறித்து யோசித்து தொடர்வதே நல்லது.

400 Bad Request

நீங்கள் தேடவிரும்பிய தளத்தின் முகவரியைத் தவறாக டைப் செய்திருக்கலாம். நீங்கள் டைப் செய்த முகவரியிலிருந்து உங்கள் தேடல் குறித்து எந்தவிதமான செய்தியும் உங்கள் இணைய சர்வரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

பெரும்பாலும்
வெப்சைட்டின் முகவரியைத் தவறாக டைப் செய்திடும்போதுதான் இத்தகைய செய்தி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் டைப் செய்த முகவரியில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கலந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலேயே புள்ளிக்குப் பதிலாக கமா அடித்திருக்கலாம். எனவே இந்த செய்தி கிடைக்கையில் ஏற்கனவே டைப் செய்த முகவரியில் ஏதேனும் பிழை இருக்கிறதா என ஒருமுறைக்கு இரு முறை சோதனை செய்தபின் மீண்டும் முயற்சிக்கவும்.

401 Unauthorized Request

நீங்கள், உங்களுக்கு அனுமதியில்லாத வகையில் உங்கள் சர்வர் வழியாக ஒன்றைப் பெற முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்டர்நெட் தளம் ஒன்றில் அல்லது தளத்தில் அத்து மீறி நுழைய முயற்சித்திருக்கிறீர்கள். அதனால் முயற்சியைக் கைவிடுதே நல்லது.

403 Forbidden


இது போன்ற பிழைச் செய்தி கிடைத்தால் அந்த தளத்தினுள் நீங்கள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். ஏதேனும் பாஸ்வேர்ட் தர வேண்டிய கட்டாயம் இருக்கலாம். எனவே உங்களுக்கு ஏற்கனவே இந்த தளம் குறித்து தெரிந்து நீங்கள் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே இதனுள் செல்ல முயற்சிக்கவும்.

404 Not Found

நீங்கள் தேடும் வெப்சைட் அந்த தளத்தில் இல்லை. இது போல அடிக்கடி பல தளங்களுக்கான தேடல்களில் இந்த செய்தி கிடைக்கும். நீங்கள் தேடும் இணைய தளம் குறிப்பிட்ட சர்வரிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது அந்த வெப்சைட்டிற்கு வேறு பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம்.

500 Internal error


இது நீங்கள் மேற்கொண்ட செயலினால் ஏற்படும் பிழைச் செய்தி. இணைய தளத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கலாம். ஆனால் வெப்சைட்டால் அந்த தகவல்கள் சரியான முறையில் கையாள இயலவில்லை. இதனை தொழில் நுட்ப ரீதியில் CGI error என அழைப்பார்கள்.

503 Service Unavailableநீங்கள் தேடும் வெப்சைட்டை தாங்கி இயங்கும் சர்வரை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்க முயற்சிக்கையில் அல்லது அந்த வெப்சைட் வேறு பிரச்னையால் முடங்கிப் போயிருந்தால் அல்லது அந்த சர்வரின் கட்டமைப்பு அப்போதைய ஹிட்களைத் தாங்க முடியாமல் இருந்தால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும்.


http://www.honeytamilonline.co.cc/2009/09/blog-post_19.html

உங்கள் மெயில்களில் உள்ள செய்திகளை எப்படி யாஹூ மெயிலுக்கு மாற்றுவது

சில பேர் ஹோட்மைல் அல்லது ஜிமெயில் உபயோகப்படுதியிருப்பிர்கள் தற்பொழுது யாஹூ மெயில் பாவித்து கொண்டுயிருப்பிர்கள் ஆனால் நீங்கள் முந்தி பாவித்த மெயில்களை முக்கியமான படங்கள் அல்லது பயில்கள் இருந்தால் உங்களால் எடுக்க முடியாமல் இருந்திருக்கும் அல்லது பழைய மெயிலில் இருந்து புதிய மெயிலுக்கு போவேர்ட் செய்திருப்பிர்கள் அப்படி முடியாதவர்களுக்கு இந்த பதிவை எழுதிகிறேன் நான் உங்கள் மெயிலில் உள்ள செய்திகளை மாற்ற இந்த இனைய லிங்கை தருகிறேன் இங்கு சென்று உங்கள் மெயிலில் உள்ள செய்திகளை மட்டுமல்லாது நீங்கள் சேவ் செய்த மற்றவர்கள் உடைய மெயில் முகவரியை கூட மாற்றலாம்

இனைய முகவரி : WWW.TRANSFERMAIL.COM

http://svttechnologya.blogspot.com/2009/09/blog-post_8125.html
Share/Save/Bookmark

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை

Favicon–யை எப்படி Blogspot–ல் இணைப்பது?

Favicon என்பது ( 'Favicon is a small icon(image)) சின்னதொரு படத்தை, Blogspot Adressbar-ல் இணைப்பது. BlogSpot Address bar முன்னால் இப்படம் இருக்கும், காண்க படம்…

1 falcon

இதன் மூலம் உங்கள் Blogspot – யை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். மேலும், பார்வையாளர்களின் கவணத்தை ஈர்க்க உதவும்.

முதலில் 32 x 32 pixel சைஸ்க்கு ஒரு படத்தை ".ico" Format-க்கு உருவாக்குங்கள். மேலும், .gif, .png Format- யையும் உபயோகித்து கொள்ளலாம்.

".ico" Format படத்தை உருவாக்க…

நீங்கள் விரும்பிய படத்தை, இங்கே சென்று Upload செய்யவும்… http://www.genfavicon.com/

falcon 23

இப்போது உங்களுக்கு தேவையான icon படம் கையிலுள்ளது.

இப்போது இங்கே செல்லவும்… Google Page Creator 

உங்கள் கணக்கில் ஒரு Google Page-யை உருவாக்கவும், அதன் பின்னர் icon file-யை இதில் Upload செய்யவும்.

image

Upload செய்த பிறகு அந்த File-யை, Open செய்யவும்.

falcon 4

அதன் பின், உங்கள் Blogspot-ல் dashboard>layout>Edit html செல்லவும்…

image

image

Expand Widget Templates கிளிக் செய்து விட்டு… கீழேயுள்ள Code-யை தேடவும்.

<title><data:blog.pagetitle/></title>

பின்னர், கீழேயுள்ள Code-யை, மேலே காட்டியுள்ள Code-ற்க்கு பின் இணைக்கவும் (அ) ஒட்டவும்.

<link href='icon file url ' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/>

இப்போது, முன்னர் Upload செய்த icon file-ன்,  url-யை மேலை உள்ள Code-ல் இணைக்கவும். அந்த URL (like http.......ico)

குறிப்பு:

Icon URL Code-ல் attredirects எங்க இருக்குனு பாருங்க… அதுக்கு முன்னால, உள்ள soniclari.gif? இல்ல .ico Formato அதுவரைக்கும் நீங்க இணைச்சா போதும்…

இன்னும் ஒரு குறிப்பு:

இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குனு நினைச்சிக்கனா….

<link href='http://7274460886692455361-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/pulimagan/pulimagan/soniclari.gif? ' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/>

இந்த Code-யை அப்படியே Use பண்ணிகுங்க….

http://www.pulimagan.com/2009/09/favicon-blogspot.html

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதைகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

[272645834_106f2d0d82.jpg]


நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய

அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.


[larry-page-sergey-brin.jpg]


""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும்
எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

[800px-googleplex_welcome_sign.jpg]

[google.jpg]

[google2.jpg]

[google_NY_5.jpg]


கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!


http://central.axleration.com/viewtopic.php?f=10&t=787&start=0

Share/Save/Bookmark

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு   மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics
HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video
Blog Widget by LinkWithin