இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்
நாம்
இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே
செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut
தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.
இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts
கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில்
செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்
Ctrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.
Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.
Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.
Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.
F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.
Ctrl + F5 : வன்மையான
Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache
எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத்
தரும்.
Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.
Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.
Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.
Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.
Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.
Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.
Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.
Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில்
இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும்
போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.
பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும்
Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ
அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்
Ctrl + Enter : http://www.
, .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type
செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.
Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு
Ctrl + Shift + Enter : http://www. , .org
http://tamilhackx.blogspot.com/2009/08/20.html