செல்பேசிகளில் தமிழ்த்தளங்களை வாசித்தல்.
அனேகமான செல்லிடப்பேசிகளில் தமிழ் எழுத்துருக்களை வாசிப்பதற்குப் பிரச்சினை இருந்து வருகிறது.நான் கூடப் பலநாட்களாக முயன்று அதன்பின்னதாக அறிந்து கொண்ட சில வழிமுறைகளைப்பற்றி உங்களுக்கும் அறியத்தரலாம் என்று எண்ணுகின்றேன்.
இதற்காக இரண்டுவகையான உலாவிகளைச் செல்லிடப்பேசிகளிலே பயன்படுத்தமுடியும்.
1.Skyfire-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே www.skyfire.com என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால், நேரடியாகவே தமிழ்த்தளங்களைத் தங்குதடையின்றிப் பார்வையிட முடியும்.
2.Operamini-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே http://www.operamini.com/ என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால் தமிழ்த்தளங்களை நேரடியாகப் பார்வையிடமுடியாது.இதற்காக பின்வரும் வழிமுறைமூலம் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்கும் வசதியை உயிர்ப்பிக்க முடியும்.

வழிமுறை:
1.செல்லிடப்பேசியில் நிறுவப்பட்ட ஒபேராமினியை திறக்கவும்.
2.முகவரிச்சட்டத்தில்(Address bar) opera:config எனப் பொறிக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இப்போது உங்கள் உலாவி தமிழ் மொழிக்காகத் திறக்கப்பட்டுவிட்டது
http://vannitec.blogspot.com/2009/08/blog-post_14.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com