கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய  இணைய  இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில்  இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gifபேஸ் புக்கில்  இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg

இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Thursday, August 20, 2009

இமெயிலில் ஏமாறலாம் வாங்க...!

http://www.straightupsearch.com/archives/images/computer_crime.jpgsplarticles imagehttp://minisites.com/images/computeridentityfraud.jpg
பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்
இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.
1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.


2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.


3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.


4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.
5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள். திட்டமிட்டு ஏமாற்றும் இது போன்ற மெயில்களை நம்ப வேண்டாம்.
6. இத்தகைய மோசடிகளில் மிகப் பழைய வகை மோசடி இன்றும் தொடர்கிறது. வெளிநாட்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில், ஒரு பெரும் பணக்காரர் கோடிக் கணக்கான டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியில் விட்டு விட்டு இறந்துவிட்டதாகவும், அதனை மாற்றி எடுக்க நீங்கள் உதவ வேண்டும் எனவும் முதலில் மெயில் வரும். பதில் அளிக்க வேண்டிய இமெயில், போன் எண் எல்லாம் இருக்கும். நீங்கள் தொடர்பு கொண்டால் மிகவும் இரக்கத்துடனும் ஆசையைத் தூண்டும் விதமாகவும் பேசுவார்கள். பணத்தை உங்கள் அக்கவுண்ட்டில் செலுத்த அக்கவுண்ட் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அல்லது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜாக கட்டச் சொல்லி தொலைபேசி மற்றும் மெயில் வழியாகத் தொடர்ந்து பேசுவார்கள். குறைந்த பட்ச பணமாவது கட்டச் சொல்வார்கள். கட்டியவுடன் வந்தது தான் லாபம் என்று அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இதே போல லண்டனில் தனியாக வாரிசு இன்றி, சொந்தம் இன்றி வசிக்கும் பெண்மணி ஒருவர் எழுதுவதாக மெயில் வரும். தான் சாகப் போவதாகவும், தன் அளவிட முடியாத சொத்தினை இந்தியாவில் ஒருவருக்குக் கொடுத்து தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்றும், உங்களை தத்து எடுத்த பின்னரே சொத்துக்களைத் தர முடியும் என்றும் தேன் தடவாத குறையாக மெயில் வரும். ஏமாந்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் போய்விடும்.
7. வெளிநாட்டில் வேலை தருகிறேன் என்று சி.வி. வாங்கி பதிவதற்குப் பணம் கட்டு, உங்களுடைய, திறமை அபாரம், ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறீர்கள், விசாவிற்கான பணம் மட்டும் கட்டுங்கள், இமெயில் வழியே டாகுமெண்ட் தயார் செய்து கொடுங்கள், அதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் 500 டாலர் கட்டிப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வரும் மெயில்களை நம்பாதீர்கள்.
8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும். இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் ஏமாற்று வேலைகள் உருவாகுமோ தெரிய வில்லை. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் "இருப்பது போதும் ஈசனே' என்று இருப்பது பாதுகாப்பல்லவா!

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=783&dt=08-20-09

http://thumbs.dreamstime.com/thumb_362/1233886577Y1CJV7.jpg


http://thumbs.dreamstime.com/thumb_347/1230266812R59bW6.jpg

கேள்வி: நான் கேப்ஸ் லாக் கீயினை அழுத்துகையில் பீப் என்ற ஒலி கேட்கும் படி அமைத்திருந்தேன். என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் தனக்கு அது இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓசை வராமல் செட் செய்து விட்டார். மீண்டும் இதனை எப்படி அமைப்பது?

பதில்:
இதனை டாகிள் கீ ஒலி என்று கூறுவார்கள். டாகிள் கீ என்பது ஒரே கீ எதிர்மறையான இரு செயல்பாடுகளுக்கு மாறி மாறி அழுத்தும்போது செயல்பட வைக்கும். எடுத்துக் காட்டாக கேப்ஸ் லாக் கீயை அழுத்தினால் அனைத்தும் கேபிடல் எழுத்துக்களாகக் கிடைக்கும். மீண்டும் அதே கீயை அழுத்தினால் அந்த செயல்பாடு நின்றுவிடும். கம்ப்யூட்டர் கீ போர்டில் இதே போல நம்லாக் கீ, ஸ்குரோல் லாக் கீ ஆகி யவைகள் உள்ளன. இவற்றை அழுத்து கையில் பீப் ஒலி நம்மை எச்சரிப்பதற்காக ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஒலி வேண்டாம் எனில் இதனைத் தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தியவாறு இருந்தால் போதும். இந்த செயல்பாடு தடைபடும். பீப் ஒலி கேட்காது. இனி உங்கள் கேள்விக்கு வரும். மீண்டும் இந்த ஒலியை அமைக்க மீண்டும் ஏதேனும் ஒரு கீயினை தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தவும். திரையில் ஓர் ஆப்ஷன் பாக்ஸ் கிடைக்கும். இப்படி அழுத்தினால் மூன்று வகை செயல்பாட்டிற்கான கட்டம் இது. எந்த செயல்பாடு வேண்டுமோ அதற்கேற்ப அழுத்தவும் என்று செய்தி காட்டப்படும். முதல் ஆப்ஷனை அழுத்தி ஓகே கிளிக் செய்தால் மீண்டும் ஒலி கிடைக்கும்.
Share/Save/Bookmark

வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க....!

splarticles image
splarticles imagesplarticles image
splarticles image
splarticles imageதேவைகளை நிறைவேற்றும் - தகுதிகளைப்பணமாக்கும்


வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் உங்கள் திறமை எதுவானாலும் அதனைப் பணமாக்கும் வழியைத் தரும் இணைய தளம் ஒன்று www.8KMiles.com என்ற பெயரில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் மூலம் உங்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப வசதிகளையும், திட்டங்களையும் குறைந்த செலவில் இந்த தளத்தில் பெற முடியும். இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென கம்ப்யூட்டர், சர்வர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கெனச் செலவழிக்கும் முதலீடு மிச்சமாகிறது. இவற்றை இந்த தளம் மூலம் பயன்படுத்துவதற்குத் தகுந்தாற் போல கட்டணம் செலுத்தினால் போதும். மற்றபடி தளத்தில் நம்மைப் பதிந்து கொள்வது, நம் தகுதிகளைப் பட்டியலிடுவது, நம்மைத் தேடிவரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களுடன் கான்பரசிங் செய்து முடிவெடுப்பது, அவர்களின் காண்ட்ராக்ட்களை மேற்கொள்வது, பணம் பெறுவது போன்றவற்றிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பது இந்த தளத்தின் சிறப்பு.
அதே போல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப வேலைகளை, சாப்ட்வேர் அப்ளிகேஷன் தயார் செய்து கொடுக்கும் பணியினை யார் நிறைவேற்றித் தருவார்கள் என்று பொதுவாக இதன் மூலம் தேடலாம்; அல்லது அறிவிப்பு கொடுக்கலாம். இதனை அறிந்து வேலைகளை மேற்கொள்ள முடியும் என நினைப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்பவர்களின் தகுதி மற்றும் திறமையினை ஆய்வு செய்து, வேலைக்கான கட்டணம் எவ்வளவு என முடிவு செய்து, காலக்கெடு நிர்ணயம் செய்து பெறலாம்.
அதே நேரத்தில் தங்கள் அலுவலகத் தேவைக்கான கம்ப்யூட்டர் சர்வர் மற்றும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தேவை உள்ளவர்கள் இந்தத் தளத்திற்குத் தங்கள் தேவைகளைக் கேட்டால் உங்களுக்குத் தேவையான வசதி, அது எதுவாக இருந்தாலும் அமைக்கப்பட்டு ஆன்லைனிலேயே தரப்படும். அதனைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். உங்கள் விருப்பப்படி மேற்கொள்ளப்படும் வேலை, பாதுகாப்பாக நீங்கள் மட்டுமே பார்க்கும்படி வைக்கப்படும். ஆன்லைனில் இது போல தேவை உள்ளவர்களையும் அந்த தேவைகளை நிறைவேற்றும் தகுதி உள்ளவர்களையும் இணைக்கும் ஓர் இனிய, எளிய டிஜிட்டல் பாலமாக www.8KMiles.com அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவிய அனைவருமே பொறியியல் படித்த தமிழர்கள். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் உலக வர்த்தகத்தில், முன்னணி இடத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அலுவலகப் பணிகளுக்கான பலவகைப்பட்ட தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நாளில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், திறமை பெற்ற இளைஞர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து திறமையைப் பயன்படுத்தும் விதமாக இந்த தளம் இயங்குகிறது. இதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். தங்கள் திறமையின் அடிப்படையில் சேவை வழங்கத் திட்டமிடுபவர்களை "Service Provider" என இத்தளம் அழைக்கிறது. இவர்கள் தனிநபராகவோ அல்லது தங்களுக்குள் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது நிறுவனத்தின் சார்பாகவோ இந்த தளத்தில் பதிந்து கொள்ளலாம். தளத்தில் நுழைந்தவுடன் "Service Provider" என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். நிறுவனத்தின் சார்பில் என்றால் "I represent a company" என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன்பின் உங்களுடைய கல்வித் தகுதிகள், வேலை அனுபவம், வேலைக்குக் கிடைத்த சான்றிதழ்கள், உங்களைப் பரிந்துரை செய்யக் கூடிய நபர்கள் அல்லது நிறுவனங்களின் முகவரிகள் ஆகிய பல தகவல்களைத் தரலாம். பின் இறுதியாக அரசாங்கம் உங்களுக்கு வழங்கிய புகைப்படம் கொண்ட அடையாள அட்டை ஒன்றை (டிரைவிங் லைசன்ஸ், வருமானவரி பான் கார்ட், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஸ்கேன் செய்து அதனை அப்லோட் செய்திட வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும், போட்டோ அடையாள அட்டை உட்பட, இந்த தளத்தை இயக்குபவர்கள் சரி பார்த்து "Verified" எனச் சான்றழித்து தளத்தில் ஏற்றுவார்கள். இதன் மூலம் உங்களின் சேவையைப் பெற விரும்புவோருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இவ்வாறு பதிவு செய்திடும்போதே உங்களுக்கென உங்களின் இமெயில் முகவரியை யூசர் பெயராகவும் அதற்கான பாஸ்வேர்டையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களைப் பற்றிய தகவல்கள் அப்லோட் செய்யப்பட்டவுடன் நீங்கள் இந்த தளத்தில் நுழைந்து அதில் பதியப்பட்டுள்ள வேலைகளை பைல் மெனுவில் "Find Work" என்பதில் கிளிக் செய்து பார்வையிடலாம். பின் உங்களால் நிறைவேற்ற முடியும் என்று எண்ணுகின்ற சாப்ட்வேர் திட்டங்கள் மற்றும் பிற வேலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பதிந்தவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள், திட்டம் நிறைவேறத் தேவையான காலம், அதற்கான கட்டணம் ஆகியவை குறித்து தகவல்களை நேரடியாக அனுப்பலாம். நீங்கள் தகவல்கள், கால அவகாசம், அதற்கான பணம் செலுத்தும் முறை ஆகியவற்றை அவர்களுக்கு நிறைவைத் தரும் வகையில் எந்த சந்தேகமும் இன்றி அனுப்ப வேண்டும். இதன்பின் அந்த வேலைத் திட்டத்தினைப் பதிவு செய்தவர் உங்களுடன் இமெயில் அல்லது வீடியோ கான்பரசிங் வழி தொடர்பு கொண்டு தங்கள் தேவைகள் குறித்து விளக்கி நீங்கள் தந்துள்ள காண்ட்ராக்ட் குறித்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வார். இந்த நேரத்தில் அவர்கள் அளிக்கும் கூடுதல் தகவல்களின் அடிப்படையில், நீங்கள் உங்கள் காண்ட்ராக்ட் கண்டிஷன்களை மாற்றிக்கொள்ளலாம்.
இருவருக்கும் ஒத்துப் போன நிலையில் வேலைக்கான கம்ப்யூட்டர் சூழ்நிலையை நீங்கள் வரையறை செய்திடலாம். வேலை திட்டத்தினை உங்களுக்கு அளிப்பவர் தாங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தான் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதனை 8KMiles வழங்கும். இதனை பணி மேற்கொள்பவர் ஆன்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இருவருக்குமே பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது. முதலாவதாக வேலை நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. இதனால் மேற்கொண்ட அளவிற்கு ஏற்கனவே ஒத்துக் கொண்ட பணம் கிடைக்கும். பணி முன்னேற்றத்தில் வேலை தந்தவருக்கு திருப்தி இல்லை என்றால், நிறைவேறியவரைக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, இந்த நிலையில் அடுத்தவருக்கு அந்த வேலைத் திட்டத்தினைக் கொடுக்கலாம். அனைத்திற்கும் 8KMiles பாதுகாப்பளிக்கிறது. வேலை செய்பவர் ஒத்துக் கொண்டபடி, ஒவ்வொரு நிலையிலும் பணி நிறைவேற்றப்படும்போது, அதற்கான இன்வாய்ஸை அனுப்பலாம். வேலை தந்தவர் அதற்கான பணத்தினை 8KMiles அக்கவுண்ட்டில் செலுத்துவார். பின் அந்தப் பணம் வேலை முடித்தவருக்கு வழங்கப்படும். இவ்வளவு வசதிகளுக்கும் வேலை முடிந்த பின்னரே தனக்கான 7.5% கமிஷனை, இந்த தளம் எடுத்துக் கொள்கிறது. இதனையும் நம்பாமல், வேலை தருபவர் முதலிலேயே ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலுத்த வேண்டும் என எண்ணினால், அந்த பணியையும் இந்த தளம் மேற்கொள்கிறது. திட்டத்தின் கட்டணத்திற்கான குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை இந்த தள அக்கவுண்ட்டில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும். இது டெபாசிட் போல வைத்துக் கொள்ளப்படும். சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி வேறு நிலைகளிலும் ஒருவர் வேலைத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். பல திறமை பெற்றவர்களைக் கொண்டு இயங்குபவர் ப்ராஜக்ட் மேனேஜராக ("Project Manager") இயங்கலாம். இவர் வேலைத் திட்டத்தை வாங்கிக் கொண்டு தன்னுடன் இணைந்துள்ளவருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து பணி முடித்து பணம் பெறலாம். சர்வீஸ் புரோக்கராகவும் ("Service Broker") ஒருவர் செயல்படலாம். பல நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் பலரிடம் சிறப்பான தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு, இந்த ஆன்லைன் குஞுணூதிடிஞிஞு ஆணூணிடுஞுணூ நிலை சரியாக இருக்கும். இவர் 8KMiles தளத்தினைத் தன் ஆன்லைன் அலுவலகமாக இயக்கித் தேவை பட்டவர்களுக்குச் சரியான வல்லுநர்கள் மூலம் வேலையை நிறைவு செய்து தரலாம். இதன் மூலம் நீங்கள் நிறுவனங்களையும் உங்கள் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, வேலை தொடர செலவில்லா ஆன்லைன் அலுவலகச் சூழ்நிலை கிடைக்கிறது. இனி தனக்கு சேவை வேண்டுபவர் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்? இவர் 8KMiles தளத்தில் "Buyer" ” என்பதில் கிளிக் செய்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பெறலாம். தன்னைப் பற்றியோ அல்லது தன் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். இவற்றைத் தந்தவுடன் ஒரு அக்கவுண்ட் ஒன்றையும் நீங்கள் திறக்க வேண்டும். இதற்கு உங்கள் கிரெடிட் கார்ட் (பன்னாட்டளவிலான கார்ட்) அல்லது பேங்க் அக்கவுண்ட் (தற்போதைக்கு அமெரிக்க பேங்க் அக்கவுண்ட் மட்டும்; விரைவில் ஆன் லைன் பேமென்ட் தரும் பே பால் அக்கவுண்ட் சேர்க்கப்பட உள்ளது) விபரம் தரப்பட வேண்டும். இதற்கு 8KMiles தளத்தில் "Setup Payment" என்ற மெனுவில் கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் "Authorize" என்பதில் கிளிக் செய்து பின் "Action" என்பதன் கீழாக உங்கள் கிரெடிட் கார்ட் அல்லது பேங்க் அக்கவுண்ட் தகவல்கள் தரப்பட வேண்டும். உடனே உங்கள் அக்கவுண்ட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் இரு பணப் பரிமாற்றத்தினை 8KMiles தளத்திற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பணம் கட்டணம் அல்ல; உங்கள் கிரெடிட் கார்டினை அல்லது பேங்க் அக்கவுண்ட்டினை உறுதிப்படுத்தும் வேலையே ஆகும். உறுதி செய்து கொண்ட அடுத்த நிமிடம் இந்த பணம் மீண்டும் உங்கள் அக்கவுண்ட் டில் திரும்பச் செலுத்தப்படும்.


இந்த பணம் செலுத்தும் முறை சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் நீங்கள் Projects மெனு சென்று உங்கள் தேவைகளை பதியலாம். அந்த மெனுவில் உங்கள் வேலை குறித்த தகவல்களைத் தெளிவாகத் தர பல ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இவை தரப்பட்டவுடன் அவை ப்ராஜக்ட் குறித்து தேடுகையில் பட்டியலிடப்படும். நீங்கள் விரும்பினால் இதனை "Invite Only", என்ற அடிப் படையிலும் வைக்கலாம். அப்போது நீங்கள் விரும்புபவர்கள் மட்டுமே இதனைக் காண முடியும். உங்கள் திட்டம் பதியப்பட்டவுடன் பல சர்வீஸ் புரவைடர்கள் அதற்கான பட்ஜெட் மற்றும் தங்கள் தகுதிகள், அனுபவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பார் கள். உடன் நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து பேசி முடிவிற்கு வரலாம். எப்போது எந்த அளவில் இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என உறுதி செய்திடலாம். அதே போல பணம் வழங்கும் நிலைகளையும் அமைத்திடலாம். உங்களிடம் காண்ட்ராக்ட் பெறுபவர் உங்களுக்காக மேற்கொள்ளும் வேலையை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கேற்ற கம்ப்யூட்டர் வசதிகள் அமைந்த சூழ்நிலையை 8KMiles தளம் சிறிய கட்டணத்தில் வழங்கும். இதில் மட்டுமே உங்கள் சர்வீஸ் புரவைடர் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தலாம். இதனால் நீங்கள் பணம் செலுத்த செலுத்த அந்த பணி உங்கள் கைகளில் கிடைக்கும். வேலை முடியும் ஸ்டேஜ் களுக்கேற்ப இன்வாய்ஸ் பெற்று தளத்தின் மூலம் பணம் வழங்கலாம். உங்கள் வேலைக்கான சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி உங்கள் சார்பாகப் பணியாற்றும் புராஜக்ட் மேனேஜர்கள், பிரதிநிதிகளையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் இயங்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறு பணியை முடித்துப் பெற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கான ஒரு நபரை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தலாம். அத்தகைய நபர்களையும் இந்த தளத்தில் அடையாளம் கண்டு பயன்படுத்தலாம். இந்த தளம் தகவல் தொழில் நுட்ப பணிகள் மட்டுமின்றி வறு எத்தகைய வேலை என்றாலும் இணைப்பை ஏற்படுத்துகிறது. கம்பெனிக்கான அறிக்கைகள் தயார் செய்தல், பட்ஜெட் உருவாக்குதல், மொழி பெயர்த்தல், சட்ட ரீதியான ஆவணங்களை தயாரித்தல், சில்லரை பொருட்கள் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தல், அக்கவுண்டிங் செய்தல் என ஒரு சிறிய நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளுக்கும் தகுதியான நபர்களை அடையாளம் கண்டு வேலைகளை முடிக்க இந்த தளம் உதவுகிறது. இன்டர்நெட் இணைந்த கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு இவை அனைத்தையும் ஆன்லைனிலேயே முடிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. திறமைசாலிகளுக்கு உலகச் சந்தையை இந்த தளம் விரித்து வாய்ப்புகளைத் தருகிறது. சிறிய நிறுவனங்களும், உலகத் தரத்திலான தகவல் கட்டமைப்பில் இயங்கி பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இது உதவுகிறது.


தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்காவில் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த தளம் குறித்து இதனை உருவாக்கி இதன் செயல் து�ணைத்தலைவராக இயங்கும் பிரபு கருணாகரன் அளித்த பேட்டி.


இந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

நான் அமெரிக்காவில், மேல் படிப்பிற்காகச் சென்ற போது, அங்குள்ள நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட அதிக மூலதனம் இல்லாமல் தவிப்பதனைப் பார்த்தேன். அதே நேரத்தில் நம் ஊர் இளைஞர்கள் பொறியியல் மட்டுமின்றி கம்பெனி நிர்வாகம் மற்றும் சார்ந்த பணிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு, சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதனையும் கண்டேன். இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தால், அனைவருக்கும் பலனாக இருப்பது மட்டுமின்றி, இவர்களின் நிறுவனங்களும் நாடுகளும் வளம் பெறும் என்ற அடிப்படையில் இந்த நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டோம். இவர்கள் சந்திக்கச் சரியான ஒரு பிளாட்பாரம் அமைப் பது மற்றும் அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிஸ்டங்களை அமைத்துக் கொடுப்பது என்ற இரு வழி உதவிகளை வழங்கும் வகையில் தளம் ஒன்றை அமைப்பதை எங்கள் இலக்காக வைத்துக் கொண்டுள்ளேம். என் நண்பர்கள் டாக்டர் சுரேஷ்,விக்டர், ஹரீஷ், பத்மநாபன் மற்றும் பிரவீண் ஆகியோருடனும் இது குறித்துப் பல நாட்கள் சிந்தித்ததன் விளைவாகவே இந்நிறுவனம் உதயமானது. பல ஆண்டுகள் இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்து பல சோதனைகளையும் நடத்தினோம். அனைத்தும் சரியாக அமைந்து வெற்றிகரமாக இயங்க முடியும் என்ற நிலையில் சென்ற மார்ச் 31 அன்று இதனைத் தொடங்கினோம்.


இந்த நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே?
இந்த உலகப் பரப்பின் விட்டம் 8000 மைல்களாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே, உலகமனைத்தையும் உங் கள் கைகளில் கொண்டு வருகிறோம் என் பதை உணர்த்த இந்த நிறுவனத்தின் பெயர் 8KMiles என அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நிறுவனம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது?
முதலீட்டுச் செலவின்றி தங்கள் தரத்தை உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்திட விரும்பும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; தங்களிடம் பணியாற்றும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் திறமையை, அனைத்து நாடுகளிலும் உள்ள நிறுவனத்தேவைக்குப் பயன்படுத்திடத் திட்டமிடும் நிறுவனங்கள்; விற்பனை மற்றும் வர்த்தக ரீதியில் அசாத்திய திறமை கொண்டு நல்ல நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபராக இயங்கும் திறமைசாலிகள்; வணிகத் திட்டங்களைச் சரியாக அமல்படுத்தி லாபம் ஈட்ட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் சுதந்திரமாகச் செயல்பட்டு தங்களின் திறமையைப் பணமாக்கி வாழ விரும்பும் வல்லுநர்கள் ஆகியோரே எங்களின் இலக்குகள்.

பதிந்து கொள்ள எவ்வளவு கட்டணம்? திறமையுள்ள நம் இளைஞர்களுக்கு அது தடையாக இருக்காதா?
கொஞ்சம் கூட கட்டணம் இல்லை. பதிந்து கொள்பவர்கள் மற்றும் நிறுவனங்களின் தரப் பரிசோதனை செய்தபின் இலவசமாக இமெயில் வசதி, தகவல் வெளியே கொண்டு வர சேட் போர்ட், வீடியோ கான்பரன்சிங், சட்டரீதியான பாதுகாப்பு, பணப் பரிமாற்றத்திற்கான நியாயமான வழிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இதனை ப் பயன்படுத்தலாம். இந்திய கிராமங்களில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக அளவில் இளைஞர்கள் பொறியியல் படித்துத் திறமை இருந்தும் அவற்றைக் காட்டச் சரியான வாய்ப்பின்றி உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவே நிறைய பணம் தேவைப்படுகிறது. இவர்கள் குழுவாக இணைந்தோ அல்லது தனி நபராகவோ இந்த தளம் மூலம் உலக அளவிலான வாய்ப்பினைப் பெறலாம். இதன் வழி வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது மட்டும் திட்டச் செலவில் 7.5% கட்டணமாகப் பெறுகிறோம். கம்ப்யூட்டர், சர்வர், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை இவர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினால் பயன்படுத்தும் நேரத்திற்கு மட்டும் மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கிறோம்.

என்ன மாதிரியான சாப்ட்வேர் கட்டமைப்பினை ஆன்லைனில் வழங்குகிறீர்கள்?

லினக்ஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர்களையும் ஆன்லைனில் அளிக்கிறோம். இவை தங்களுக்குப் போதாது என்று எண்ணுபவர்கள், எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கேட்டாலும் உடனே அமைத்துத் தருகிறோம்.

உங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்?
அறிவுத் திறனைக் கொண்டு என்னவெல்லாம் ஒரு நிறுவனத்திற்கு ஒரு திறமைசாலி செய்ய முடியுமோ அனைத்தையும் எங்கள் தளம் மூலம் மேற்கொள்ளலாம். ஒரு சிலவற்றை இங்கு கூறுகிறேன். நிறுவன நிர்வாகத்திற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை உருவாக்குதல், வெப் சைட் உருவாக்கி நிர்வகித்தல், கிராபிக் டிசைன்ஸ் மற்றும் மல்ட்டிமீடியா புரோகிராம்களைத் தயாரித்தல், நிறுவனங்களுக்குத் தேவையான டேட்டா பேஸ்களை உருவாக்கி தொடர்ந்து அப்டேட் செய்தல், ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங்கிற்குத் தேவையானதை அமைத்துக் கொடுத்தல், கட்டடக் கலை பொறியியலுக்குத் தேவையானவற்றைத் தயாரித்தல், டாகுமென்ட் தயாரித்து எடிட் செய்து தருவது, ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகளை எடிட் செய்தல், வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், அக்கவுண்டிங் சாப்ட்வேர்களை உருவாக்குதல், உடல்நலம் சார்ந்த அறிவுரை வழங்க அப்ளிகேஷன்களை தயாரித்தல், ஆன்லைனில் ஆபீஸ் அசிஸ்டண்ட்களை உருவாக்கி உதவுதல் என ஒரு நிறுவனத்தின் அனைத்து தேவைகளையும் இதன் மூலம் நிறைவேற்றலாம். இவற்றிற்கான சிஸ்டங்கள் எதிலும் இவர்கள் முதலீடு செய்திட வேண்டியது இல்லை. இவற்றை எங்கள் தளம் ஆன்லைனிலேயே தரும். அத்துடன் வேலை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு, பணம் பெற்றுத் தருதலை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.


இதே முறையில் உங்களின் எதிர்கால விரிவாக்கம் எப்படி இருக்கும்?

இந்த தளம் மூலம் அனைத்து துறைகளிலும் சிறந்த வல்லுநர் அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதே போல, தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பாகச் செயலாற்றக் கூடிய நிறுவனங்களும் இங்கு கூட்டாக எங்கள் நிறுவனத்திடம் இருக்கும். பன்னாட்டளவில் இவர்களை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு செலவும் இல்லாமல், வர்த்தக முன்னேற்றத்தையும் நிர்வாகத்தையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியும் என்பதனை உறுதி செய்வோம். பொதுமக்களாகிய தங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து வகை நிறுவனங்களும் எளிதாக எந்தச் செலவுமின்றி அணுக வழி செய்யும் நிறுவனப் பிரிவுகளையும் தளங்களையும் அமைக்க இருக்கிறோம். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் இமெயில் மூலமாக contactus@8kmiles.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். எங்களைப் பற்றி அமெரிக்க ஐரோப்பிய நாளிதழ்கள், சாப்ட் வேர் அமைப்புகள் எழுதிய குறிப்புகள் மற்றும் பேட்டியைக் கீழ்க்காணும் தளங்களில் காணலாம்.


http://www.prweb.com/releases/8KMiles/Web20/prweb2275634.htmhttp://www.youtube.com/watch?v= 2LKEjpWOKyQ


http://www.prweb.com/releases/2009/07/ prweb2613924.htm


http://telephonyonline.com/business_services/news/cloudcomputingsmallbusinessoutsourcing0707/index.html


http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=779&dt=08-20-09

Share/Save/Bookmark

அழிந்த பைல்களை மீட்டெடுக்க...!


டேட்டா ரெகவரி


http://www.datarecovery.com.au/assets/images/front_logo.gif


கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன. இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப் பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.


. இதனை http://raid 2raid.com/)http:// raid2raid.com/ get/raid2raid.exe


என்னும் முகவரி கொண்ட தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும். எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

http://doublesc.com/include/images/dataRecovery.jpg

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=778&dt=08-20-09
Share/Save/Bookmark

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics
HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video
Blog Widget by LinkWithin