கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய  இணைய  இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில்  இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gifபேஸ் புக்கில்  இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg

இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Sunday, July 19, 2009

♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ♥

இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்


அருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த உலகமும் காணட்டுமே என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடன் உங்கள் நினைவில் வருவது யு–ட்யூப் இணைய தளமே. அதில் உங்கள் வீடியோவை ஏற்றி வைத்துவிட்டால் உலகெங்கும் உள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்.

யு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.

அதிர்ஷ்டம் இருந்தால் பலர் உங்களைத் தொடர்பு கொண்டு இன்னும் சில வீடியோ படங்களைத் தங்களுக்கு எடுத்துத் தருமாறு கேட்கலாம். இதனால் பணம் சம்பாதிக்கவும் செய்திடலாம். ஆனால் ஏன் யு–ட்யூப் தளத்தை மட்டும் நாடுகிறீர்கள். என்றாவது இதைப் போல வேறு சில தளங்களும் உள்ளன என்று எண்ணியதுண்டா? வேறு இருக்கிறதா! என்று கண்கள் அகல விரிய நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இதோ அத்தகைய தளங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.

1.www.break.com -> இங்கே கிளிக் செய்யவும்

முதலில் பணம் மற்றும் பரிசு தரும் தளத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த தளத்தில் ஏற்றப்படும் உங்கள் வீடியோ இத்தள நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஹோம் பேஜில் அது இடம் பெற்றால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசு ரூ.80,000. தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் காலரியில் வீடியோவோடு வீடியோவாக இடம் பெற்றால் பரிசு ரூ.1,000. இதில் வீடியோக்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நமக்குப் பிடித்த வீடியோவினைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. மிக எளிமையான கண்ட்ரோல்கள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. காண்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என வீடியோக்களைக் கண்ட்ரோல் செய்து பார்க்கலாம். நம்முடைய வீடியோக்களை அப்லோட் செய்வதும் எளிதாக்கப் பட்டுள்ளது.

2.www.tubemogul.com -> இங்கே கிளிக் செய்யவும்

அடிப்படையில் இது ஆன்லைன் வீடியோ க்களை ஆய்வு செய்திடும் நிறுவனத்தின் இணைய தளம். இதன் மூலம் தங்களின் வீடியோக்களின் தரத்தினை மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் இதன் மூலம் மற்ற வீடியோ தளங்களுக்கும் வீடியோக்களை ஒரே ஷாட்டில் அப்லோட் செய்திட முடியும்.

அது மட்டுமின்றி உங்கள் வீடியோவை யார், எப்போது, எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். யு–ட்யூப், கூகுள் வீடியோ, ஏ.ஓ.எல். வீடியோ, மை ஸ்பேஸ் வீடியோ, மெடாகேப், ரெவ்வர் மற்றும் யாஹூ வீடியோ ஆகிய தளங்களை இந்த தளத்தின் மூலம் பெறலாம்.

3. www.dailymotion.com -> இங்கே கிளிக் செய்யவும்

மற்ற வீடியோ இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல பண்புகளைக் கொண்டது இந்த தளம். இதில் பல சேனல்கள் உள்ளன; அவை – மியூசிக், கேம்ஸ், விளையாட்டு, படங்கள், கல்லூரிகள் என பட்டியல் நீள்கிறது. இதன் பபர் ரேட் அதிகமானதாக இருப்பதால் வீடியோவினை எந்த பிரச்னையுமின்றி பார்க்க முடிகிறது. வீடியோ வால்ஸ் என்ற வசதியின் மூலம் உங்கள் தளத்தில் 81 வீடியோக்கள் வரை காட்டலாம். ஜூக் பாக்ஸ் வீடியோக்களை வகைப்படுத்திக் காண வழி செய்கிறது. இந்த தளத்தில் பதிக்கப்படும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மட்டும் காணும்படியும் செட் செய்திடலாம்.

4. www.metacafe.com -> இங்கே கிளிக் செய்யவும்

இந்த தளத்தைப் பற்றி சிலர் அறிந்திருக்கலாம். இதில் உள்ள பபர் மெமரி குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை ரீவைண்ட் செய்தும் பாஸ்ட் பார்வேர்ட் செய்தும் பார்க்கும் வசதி இந்த தளத்திலேயே தரப் பட்டுள்ளது. இதில் உள்ள பேமிலி சேப் மோட் உங்கள் குழந்தைகள் என்ன வகையான வீடியோ மட்டும் பார்க்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடும் வசதியினைத் தருகிறது. இதில் உள்ள டைரக்டர்ஸ் கட் வீடியோ தயாரிப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகிறது. இந்த சேனலில் உள்ள மெட்டகபே புரோ வீடியோ தயாரிப்பது குறித்த தகவல்களைத் தருகிறது.இதில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால் எந்தவித வெப் பிரவுசர் இன்றி நேரடியாக வீடியோக்களை அனுப்ப முடியும்.

5. www.jumpcut.com -> இங்கே கிளிக் செய்யவும்

வீடியோ தளங்களில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடுகையில் வீடியோக்களை எடிட் செய்வதற்கான டூல்ஸ்கள் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா! அப்படியானால் இந்த தளம் தான் உங்களுக்கு உகந்தது. இதில் உள்ள ரீமிக்ஸ் என்ற வசதியினைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மட்டுமல்ல, மற்றவர்களின் வீடியோக்களையும் கூட எடிட் செய்து பார்க்கலாம்.

பேக்ரவுண்ட் மியூசிக், திடீர் மாற்றங்கள், காட்சிஅமைப்பு, கிளிப் ஆடியோ மற்றும் காட்சி தோற்றங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இதில் டூல்ஸ் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உங்கள் யாஹூ ஐ.டி. மூலமும் லாக் இன் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் இதில் பதிவு செய்வது எளிதுதான்.

6. www.revver.com -> இங்கே கிளிக் செய்யவும்

வீடியோ ஷேரிங் வெப்சைட்டாக இயங்கிய முதல் வெப்சைட் இதுதான். இதில் வெபிஸோட், அனிமேஷன், காமெடி, கேம்ஸ் மற்றும் வீடியோஸ் எனப் பிரிவுகள் உள்ளன. உங்கள் வீடியோக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த மற்ற வீடியோக்களையும் இதில் நீங்கள் அப்லோட் செய்திடலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தரப்படும். வீடியோக்களை அடிக்கடி பார்த்தது, பலரால் பகிர்ந்து பார்த்தது மற்றும் வீடியோவினை இயக்கியவர் என பதம் பிரித்துப் பார்க்கலாம். அதே போல இதன் சேனல்களும் வித்தியாசமானவை; பிரபலமானவர்கள் செய்தி, உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பு, தொழில் நுட்ப உதவி, வெபிசோட்ஸ் எனப் பல பிரிவுகளில் வீடியோக்கள் உள்ளன.

7. www.vimeo.com -> இங்கே கிளிக் செய்யவும்

மொத்தம் 6,340 சேனல்களை உள்ளடக்கியதாக இந்த தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களின் அடிப்படையிலும் நம் ஆர்வத்தின் அடிப்படையிலும் பல வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாப் பிக்ஸ் என்ற பிரிவில் இந்த இணையதள அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தது எனத் தேர்ந்தெடுத்தவற்றைக் காணலாம்.

8. www.eyespot.com -> இங்கே கிளிக் செய்யவும்

இந்த தளத்தில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடும் முன் அவற்றை எடிட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் மியூசிக் இணைத்து மாற்றலாம். உங்களிடம் வீடியோ இல்லை என்றால் இதில் பதிந்துள்ள வீடியோக்களை எடுத்து எடிட் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் மாற்றலாம். இதற்கென மிக்ஸபிள்ஸ், ரீசன்ட் மிக்ஸஸ், ரீசன்ட் அப்லோட்ஸ், மோஸ்ட் ஸ்கில்புல் மற்றும் மொபைல் ஷேர் எனப் பல வகைகளில் வீடியோக்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. உங்கள் மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து நேரடியாக இந்த தளத்திற்கு வீடியோ படங்களை அனுப்பலாம். ஆனால் அனைத்து போன்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்வதில்லை. நோக்கியா போன்களில் இ மற்றும் என் சிரீஸ் போன்களின் வீடியோக்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.

9. www.video.google.com -> இங்கே கிளிக் செய்யவும்

யு–ட்யூப் தளத்தின் இன்னொரு சகோதரி போல இது செயல்படுகிறது. யு–ட்யுப் தளத்தின் அத்தனை சங்கதிகளும் இதில் இருக்கின்றன. நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்களை நாள், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டு பார்க்கலாம்.


10. www.funnyordie.com -> இங்கே கிளிக் செய்யவும்

விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா? இந்த தளத்திற்குச் செல்லுங்கள் என்று இந்த தளம் அழைத்தாலும் பல சீரியஸ் வீடியோக்களும் இதில் உள்ளன. சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் படங்களாய்க் காட்டப்படுகின்றன. மேலே தரப்பட்ட தளங்களில் சில மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளன. அதிக அளவிலான (300 எம்பி) வீடியோ பைல்களை ஏற்றுக் கொள்வது ட்யூப் மொகல் தளம். விமியோ தளம் வாரத்திற்கு 500 எம்பி அனுமதிக்கிறது. ட்யூப் மொகல் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் ஷேரிங் வசதியைத் தருகிறது. மெடா கேப் மற்றும் ரெவ்வர் மட்டுமே டவுண்லோடிங் வசதியைத் தந்துள்ளன. பரிசு மற்றும் பணம் தருவது பிரேக் தளம் மட்டுமே. அனைத்திலும் பதிந்து கொள்வதும் வீடியோக்களை அப்லோட் செய்வதும் இலவசமே.

http://www.honeytamilonline.co.cc/2009/06/10.html


Share/Save/Bookmark

♥ இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர் ♥

இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர்


கம்ப்யூட்டர் டேட்டாக்களோடு போராடி தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு அவ்வப்போது மனதை இதப்படுத்துவது இசைப்பாடல்களே. கம்ப்யூட்டரை அவ்வள வாகப் பயன்படுத்தாவதர்களும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள கம்ப்யூட்டரில் தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்க விரும்புகின்றனர். இதனால் எங்கெல்லாம் பாடல் பைல்கள் கிடைக் கின்றனவோ அவற் றை எல்லாம் அப்படியே காப்பி செய்து பெர் சனல் கம்ப்யூட்டர்களின் டிரைவ்களில் திணிக் கின்றனர். விளைவு என்ன? ஒரு கட்டத்தில் பாடல் பைல்களே கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவினை ஆக்ரமிக்க வேறு பைல்களுக்கு இடம் இல்லாமல் போகிறது.

பாடல்களை சிடியிலோ அல்லது டிவிடியிலோ சேமித்து வைக்கலாம். ஆனால் எங்கு சென்றாலும் அவற்றை எடுத்து செல்ல வேண்டும். அவற்றில் இருக்கும் பைல்களின் வாழ்வும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதானே என்ற பயம் நம்மிடம் உள்ளது.

இந்த வேதனையைப் போக்க நமக்கு இணையத்தில் ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் உங்களைப் பதிந்து கொண்டால் இசைப் பைல்களை 25 ஜிபி வரை சேமித்து வைக்கலாம். அதுவும் எந்த கட்டணமும் செலுத்தாமலே. எனவே சிடிக்களைத் தூக்கிக் கொண்டு அலையாமல் எப்போது பாடல் வேண்டுமோ அப்போது இந்த தளம் சென்று பாடலை இறக்கி கேட்டு மகிழலாம். எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் உங்களுக்கான பாடல் கிடைக்கும் அல்லவா.

கீழே உள்ள தளம் சென்று உங்களுக்கென ஒரு அக் கவுண்ட்டை உருவாக்கி பின் நீங்கள் சேர்த்து வைத்த பாடல்கள் அனைத்தையும் அப்லோட் செய்யலாம். அதன் பின் எந்த இடத்திலிருந்தும் இந்த தளம் சென்று அங்கே உங்கள் யூசர் அக்கவுண்ட் மூலம் உங்கள் பாடல்களைப் பெறலாம். உங்கள் நண்பர்களிடன் இணைய வெளியில் இசை லாக்கர் ஒன்றை இலவசமாகக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். நண்பர்கள் நல்லவர்கள் என்றால் அவர்களுக்கும் உங்கள் யூசர் நேம் மற்றும் ஐ.டியைக் கொடுத்து பாடல்களைக் கேட்டு ரசிக்கச் சொல்லலாம். இந்த தளத்தின் பெயரில் எம்பி 3 என இருப்பதால் எம்பி 3 பாடல்களை மட்டும் தான் இது ஏற்றுக் கொள்ளும் என எண்ண வேண்டாம். அனைத்து வகை பார்மட்டுகளையும் இது ஏற்றுக் கொள்கிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்


http://www.honeytamilonline.co.cc/2009/06/blog-post_07.html


Share/Save/Bookmark

♥ அன்லாக்கர் ♥


unlock4.jpg image by agabot
பலமுறை நாம் ஏதேனும் பைல்களை அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–

இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.


பைலைப் பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம் அல்லது இன்னொரு யூசர் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க் முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.


சோர்ஸ் அல்லது டெஸ்டினேஷன் பைல் ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.


இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.


இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.


கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.

அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.


உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.


http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=722&dt=07-06-0
Share/Save/Bookmark

♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥


http://img2.pict.com/d8/ff/1f/9adfa09e4d0013f0d2027d5d92/rmGSH/firefox.jpg


பரயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பிரபலமான பிரவுசர் என்ற பெயரை பயர்பாக்ஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இயங்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரவுசிங் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் பெரிய அளவில் இதில் மாற்றங்களோ வேகமோ இல்லை என்றாலும் சில புதிய வசதிகள், பிரவுசர் சந்தை போட்டியில் பயர் பாக்ஸைத் தொடர்ந்து தூக்கி நிறுத்துகின்றன.

இதில் பல புதிய வசதிகள் இருந்தாலும் அவை ஒன்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இல்லை என்பதே பலரின் கணிப்பு. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ரசிகர்களுக்குப் பழக்கமான InPrivate மற்றும் குரோம் பிரவுசர் தரும் Incognito ஆகிய Private Browsing வசதியினை பயர்பாக்ஸ் 3.5 தாங்கி வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 2008 முதல் பீட்டா தொகுப்பினைப் பெற்று பயன்படுத்திய 8 லட்சம் பேர் இந்த வசதியினை அனுபவித்தனர். இப்போது பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பு 3.5ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் இந்த பிரவுசர் மூலமாகப் பார்த்த தளங்கள் குறித்த குறிப்புகள், அந்த தளங்களில் நாம் தந்த நம் பெர்சனல் தகவல்கள் ஆகியவை பதியப்பட மாட்டாது. இதனால் நாம் பார்த்த தளங்களின் பட்டியல் யாருக்கும் கிடைக்காது. எனவே பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் மற்றவர் அறியாமல் நம் பிரவுசிங் வேலையை மேற்கொள்ளலாம். இந்த வகை பிரவுசிங் போது புக்மார்க்குகளை அமைக்கலாம். பிரவுசரை மூடும்போது இவை புக் மார்க் பட்டியலில் ஏற்றப்படும்.

இந்த வகையில் குரோம் மற்றும் பிற பிரவுசர்களில் பிரைவேட் மற்றும் பப்ளிக் பிரவுசிங் ஆகிய இரண்டு வகை பிரவுசிங்குகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். பயர் பாக்ஸில் அந்த வசதி இல்லை. பயர்பாக்ஸ் 3.5 பதிப்பு தொழில் நுட்ப அடிப்படையில் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பான ஒரு அம்சத்தைக் கொண்டிருப்பதாக இணைய தள வடிவமைப்பாளர்கள் கூறி உள்ளனர். எச்.டி.எம்.எல்.5 லோக்கல் ஸ்டோரேஜ், சி.எஸ்.எஸ்.மீடியா டேக்ஸ், இறக்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் எழுத்துக்கள் வசதி என டெவலப்பர்களுக்குப் பயன் தரக்கூடிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிப்பில் ஜியோ லொகேட்டிங் என்னும் வசதியும் உள்ளது. இதனால் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து இயக்குகிறீர்கள் என்பதனை பிரவுசர் உணர்ந்து கொள்ளும். பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் அதனை இயக்கும் போது அப்போது இயங்கிக் கொண்டிருந்த அனைத்து டேப்களும் திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு அவை அனைத்தும் திறக்கப்படும். ஆனால் தற்போது அதிலும் எந்த டேப்கள் திறக்கப்பட விரும்புகிறோமோ அவற்றை மட்டும் திறக்கலாம். மேலும் கிராஷ் ஆகும்போது ஏதேனும் வெப் படிவத்தில் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருந்தாலும் அந்த டெக்ஸ்ட்டும் மீண்டும் தரப்படும்.

இந்த பதிப்பின் வேகம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். சன் ஸ்பைடர் ஜாவா ஸ்கிரிப்ட் பெஞ்ச் மார்க் என்னும் சோதனை மூலம் இதனைச் சோதித்த போது இது பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப் பிரவுசிங் பழக்கத்திற்கு வந்த நாள் முதல் பிரவுசர்கள் அனைத்தும் தங்கள் டேப் பாரில் ஏதாவது முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிப்பில் சபாரி பிரவுசரில் உள்ளது போல டேப்களை அதன் வரிசையை மாற்றி அமைக்கலாம். இழுத்து நீக்கலாம். ஒரு டேப்பை இழுத்து புதிய விண்டோ ஒன்றில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் பதிப்பு இப்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் சில மொழிகளிலும் இதனைத் தர வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=726&dt=07-19-09


Share/Save/Bookmark

♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள் ♥

பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள்


பிங் தேடுபொறியை மைச்ரோசபிட் அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆகியுள்ளன.இதை கணிசமான அளவில் தேடுதலில் பயன்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது.மற்ற மைச்ரோசபிட் பொருட்கள் போல் அல்லாமல் பல ஊடகங்களும் இதற்கு நல்ல மதிப்பீடு கொடுத்துள்ளன.நானும் ஒரு மாதமாக இந்தக் கருவியை உபயோகித்து வருகிறேன்.நான் கவனித்த அல்லது ரசித்த சில அம்சங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

1. இதனுடைய முகப்புப் பக்கத்தின் பின்புறத்தில் தினமும் கண்ணிற்கு குளிர்ச்சியாகக் காட்சி அளிக்கும் நேர்த்தியான படங்கள்.

2. சில பிரபலங்களைத் தேடும் போது அவர்களின் மிகவும் புகழ் பெற்றப் படங்கள் முதலில் வருகிறது. அதற்குப் பிறகு தான் அவர்களைப் பற்றிய வலைத் தளங்கள் வருகிறது. நான் ரஜினிகாந்த்,அமிதாப் மற்றும் டெண்டுல்கர் என்று தேடிப் பார்த்தேன். சுவையான படங்களுடன் விடைகள் கிடைத்தன.

3. பிங் தேடி கொண்டு வரும் வலைப்பக்கங்களுடன்,அதற்கு அருகில் அழகான அந்தப் பக்கத்தின் சுருக்கத்தைக் முன்காட்சியாகக் கொடுக்கிறது.இது மிக உதவிய உள்ளது.

4. நிகழ்படம் தேடுதலில் நிறைய விடைகளைத் தருவதுடன் அந்த நிகழ்படங்களின் சுட்டியைச் சொடுக்காமலே, அந்தப் படத்தின் முன்காட்சியைக் காணமுடிகிறது.இது பல படங்களை வேகமாகப் பார்க்க உதவியாக உள்ளது.

5. படிமங்கள் என்பதைச் சொடுக்கி தேடினால் பல படிமங்களை சிறிய படிமங்களாக (thumbnail) ஒரே பக்கத்தில் காட்டுகிறது.இது தான் மிகவும் அருமை.

6. தேடும் போதே இடது பக்கத்தில், தேடப்படும் பொருளுடனான சம்பந்தப் பட்ட விஷயங்கள் சுட்டிகளாகக் காணக் கிடைக்கிறது.

7. மிக முக்கியமாக நம் தேடுதலின் முந்தையச் சரித்திரத்தை சுட்டிகளாகக் கொடுக்கிறது.

ஆக மொத்தம் பிங் ஒரு நல்ல உபயோகமான தேடுபொறி என்பதில் சந்தேகமே இல்லை.ஆனால் இது எந்த விதத்திலும் கூகுளை விட சிறந்த இடத்தைப் பெற்று விடும் என்று இப்போது கூற முடியாது. கூகிள் கூகிள் தான். நீங்களும் இதைப் பயன்படுத்தித் தான் பாருங்களேன்.

முகப்புப் பக்கம் - Home page
பின்புறத்தில் - background
முன்காட்சியாக - preview
நிகழ்படம் - video
படிமங்கள் - images

http://tlbhaskar.blogspot.com/2009/07/blog-post_15.html

Share/Save/Bookmark

♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥

ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள்

Picture
முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள்  Floppy தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி Network க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் Jump Drive கள் அல்லது Pen Drive கள் எனப்படும் USB Drive கள் வழியே பரவுகின்றன. இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:

1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு Pen Drive வை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link

2.Tweak UI எனும் Microsoft இன் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
Tweak UI Download Link

3.ClamWin எனப்படும் இலவச Portable Antivirus மென்பொருளை உங்கள் Pen Drive வில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு Scan செய்துகொள்ள உதவும்.
ClamWin Download Link


4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.
USB Drive Disabler Download Link

5.சில பிரபல Flash Drive Virus,Warm களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.
Flash Disinfector Download Link

http://puthumai.weebly.com/-pen-drive.htmlShare/Save/Bookmark

♥ உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி? ♥

உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி?

ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.படிநிலை - 1

உங்களுக்கான படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில்
twitter கணக்கு வைத்திருந்தால் அந்த படத்தை கூட எளிமையாக தேர்வு செய்யலாம். பின்னர் இந்த தளத்தில் சென்று உங்கள் படத்தை ஐகானாக மற்ற வேண்டும், ஏனெனில் முகவரிப்பட்டியில் இடம் பெறவேண்டிய குறும்படம் ஐகானாக அல்லது .gif Animated கோப்பாக தான் இருக்க வேண்டும்.

http://www.html-kit.com/favicon/


இங்கே சென்றால் உங்களுடைய படத்தை ஐகானாக அல்லது .gif கோப்பாக மாற்றி தருவார்கள். இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். இங்கேயே
படத்திற்கு பின்புற வண்ணம் சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கருப்பு வெள்ளை ஐகானாக மாற்றுதல் போன்றவற்றை Customize என்பதை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். பின்பு Download Icon Package என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கிகொள்ளவும்.

படிநிலை - 2

உங்களுக்கான குறும்படம் தயாரானபின் அதை நீங்கள் ஆன்லைனில் சேமித்தால் தான் அதை பயன்படுத்த முடியும். அதனால் இந்த குறும்படத்தை எதாவது ஒரு இணைய சேமிப்பகம் ( Online Storage Website ) வசதி உள்ள தளங்களில் சேமிக்கவேண்டும். Photobucket போன்ற பல இணையதளங்களில் ஐகான் ( .ico ) கோப்புகளை சேமிக்கும் வசதி இல்லை. நான் இறுதியாக Fileden என்ற தளத்தில் உறுப்பினராகி என்னுடைய ஐகானை சேமித்தேன்.
இணையதள முகவரி: http://www.fileden.com/

உங்களுக்கு தெரிந்த ImageHosting தளங்கள் இருந்தால் கருத்துரை இடவும். இந்த தளத்தில் ஏற்றிய பின்னர் அதற்க்கான இணைப்பை ( Link ) பெற்றுக்கொள்ளவும்.

Link இதைப்போல இருக்கும்.

http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico

படிநிலை - 3

உங்கள் blogger கணக்கில் நுழைந்து Layouts பகுதிக்கு சென்று Edit Html என்பதை
தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தின் HTML கோடிங் பகுதியில்
சென்று Head Tag முடிவதற்கு முன்பாக கீழே உள்ள கோடிங்கை சேர்க்கவும்.
Head Tag என்பது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் F3 அழுத்தி தேடிக்கொள்ளுங்கள். மேலும் படத்தைப்பார்க்க விபரங்களுக்கு.


link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"

இந்த வரிக்கு முன்பும் பின்பும் < > குறியீடுகள் சேர்த்துக்கொள்ளவும்.மேல் உள்ள கோடிங்கில் முக்கியமான விஷயம் உங்கள் குறும்படத்திற்க்கான
Fileden இல் கிடைத்த இணைப்பை ( Link ) மாற்றி அடித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்து விட்டு உங்கள் வலைப்பக்கத்தை பாருங்கள்.
ஜொலிக்கிறதா என்ன ?

http://ponmalars.blogspot.com/2009/07/favicon.html


Share/Save/Bookmark

♥ புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவுக்கும் கிழே எப்படி சேர்ப்பது-ப்ளாகர் ♥

புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவுக்கும் கிழே எப்படி சேர்ப்பது-ப்ளாகர்


சோசியல் புக்மார்க் விஜெட்டை(social bookmark widget) ஒவ்வொரு பதிவுக்கும் கீழே சேர்த்துக்கொள்வதன் மூலம்,உங்கள் பதிவைப் படிப்பவர்களுக்கு அதனை எளிதாக மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்ளவும் மற்றும் புக்மார்க் செய்துக்கொள்ளவும் மிகவும் உதவும்.இந்த சோசியல் புக்மார்க் விட்ஜெட்டை நீங்கள் எளிதாக பல தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.அந்த தளங்களை நான் கிழே பட்டியலிட்டு இருக்கிறேன்.முதலில்

share this:
ஷேர் திஸ்.காம் தரும் சோசியல் புக்மார்க் பட்டன் மிக கவர்ச்சியாகவும்,எளிமையாகவும் இருக்கும்.இதில் உங்கள் பதிவின் லின்குகளை ஈமைல்(email), பிளாக்கர்(blogger),வோர்டுப்ராஸ் (wordpress),டைப்பேட்(typepad),பேஸ்புக்(facebook),மைபேஸ்(myspace) ஆகியவைகளில் எளிதாக பரிமாறிக்கொள்ளாம்.இது மொத்தம் 39 வெப் ஷாரிங்(web sharing) தளங்களை ஆதரிக்கும்.இதற்கு நீங்கள் வெறும் add to blogger என்று அழுத்தினால் போதும் அதுவே தானாக உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் கிழே வந்துவிடும்.அந்த ஷேர் திஸ் பட்டனை நீங்கள் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

Add this:

இதுவும் ஷேர் திஸ்.காம் போல தான்.ஆனால் இது சிறிது வேகமாக இன்ஸ்டால் ஆகிவிடும்.இதனை நீங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் கீழே வைக்க சில வேலைகளை செய்யவேண்டிய இருக்கும்.இது ஷேர் திஸ்.காம் போல இன்ஸ்டால் செய்தவுடன் ஒவ்வொரு பதிவிற்கும் கீழே வராது.இதற்கான நேரடி மாதிரி கிழே -->

நேரடி மாதிரி:

Bookmark and Share

இந்த பட்டனைப் பெற:- http://www.addthis.com/web-button-select

Add to any:

இந்த பட்டனை அடைய சைன் அப்(sign up) செய்ய அவசியம் இல்லை.ஆனால் ஷேர் திஸ் மற்றும் ஆட்திஸ்ஸில் கிடைக்கும் வசதிகள் இதில் இல்லை.

நேரடி மாதிரி:Share/Save/Bookmark

பட்டனைப் பெற: http://www.addtoany.com/buttons/

Tell a friend:
இதில் எல்லா வசதிகளும் உள்ளது.இது பார்க்க சுமாராக இருக்கு.மேலும் இதற்கு சைன்அப் செய்ய வேண்டும்!

நேரடி மாதிரி:SocialTwist Tell-a-Friend

பட்டனைப் பெற: http://tellafriend.socialtwist.com/index.jsp

இதோடு இது முடிந்துவிட்டது.

இப்பொழுது இந்த பட்டன் விட்ஜெட்டே எனக்கு வேண்டாம்!எனக்கு ஒரு அழகான,கவர்ச்சியான சோசியல் புக்மார்க் விட்ஜெட் வேண்டும் என்று கூறுபவர்கள் சிறிது கீழே பார்க்கவும்..

1)
இது போன்று எனக்கு வேண்டும் என்பவர்களுக்கு இங்கே செல்லவும் http://www.cahayabiru.com/2009/04/add-sexy-social-bookmark-to-your.html

2)
இதற்கு இங்கே செல்லவும் http://www.tipsblogger.com/2008/12/how-to-add-social-bookmark-links.html


Share/Save/Bookmark

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics

Blog Archive

HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video
Blog Widget by LinkWithin