இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர்

பாடல்களை சிடியிலோ அல்லது டிவிடியிலோ சேமித்து வைக்கலாம். ஆனால் எங்கு சென்றாலும் அவற்றை எடுத்து செல்ல வேண்டும். அவற்றில் இருக்கும் பைல்களின் வாழ்வும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதானே என்ற பயம் நம்மிடம் உள்ளது.

கீழே உள்ள தளம் சென்று உங்களுக்கென ஒரு அக் கவுண்ட்டை உருவாக்கி பின் நீங்கள் சேர்த்து வைத்த பாடல்கள் அனைத்தையும் அப்லோட் செய்யலாம். அதன் பின் எந்த இடத்திலிருந்தும் இந்த தளம் சென்று அங்கே உங்கள் யூசர் அக்கவுண்ட் மூலம் உங்கள் பாடல்களைப் பெறலாம். உங்கள் நண்பர்களிடன் இணைய வெளியில் இசை லாக்கர் ஒன்றை இலவசமாகக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். நண்பர்கள் நல்லவர்கள் என்றால் அவர்களுக்கும் உங்கள் யூசர் நேம் மற்றும் ஐ.டியைக் கொடுத்து பாடல்களைக் கேட்டு ரசிக்கச் சொல்லலாம். இந்த தளத்தின் பெயரில் எம்பி 3 என இருப்பதால் எம்பி 3 பாடல்களை மட்டும் தான் இது ஏற்றுக் கொள்ளும் என எண்ண வேண்டாம். அனைத்து வகை பார்மட்டுகளையும் இது ஏற்றுக் கொள்கிறது.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்
http://www.honeytamilonline.co.cc/2009/06/blog-post_07.html

No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com