இலவச சிடி ரிப்பர்
கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கும் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகிப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் நமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில் லை. ஏனென்றால் அவை எம்பி3 பார்மட்டில் இல்லை என்பதே காரணமாகும். சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்கு கின்றன. ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக் கின்றன. என்ன செய்யலாம்? எப்படி சிடியில் உள்ள பாடல் களை எம்பி3 பார்மட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்களில் பட்டது. அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும் புரோகிராம் ஆகும். இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மட் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம். முதலில் http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.
பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள். அதன்பின் முதலில் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். இதற்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இருக்கும் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது உருவாக்கி அதனை உங்கள் தேர்வாக செலக்ட் செய்திடுங்கள். இதனை ஒரு முறை செய்தால் போதும். அதுவும் சிடி ரிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும். இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினைச் செருகவும். சிடியினைச் செருகியவுடன், மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் சிடி ரிப்பர் விண்டோவின் கீழாக உள்ள “டி” என்பதில் கிளிக் செய்திடவும். இதனால் பாடல்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக அனைத்து தகவல்களும் பதியப்படும். அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அனைத்து பாடல்களும் எம்பி3 பார்மட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும். பின் இந்த எம்பி3 பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிட மெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.
http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=749&dt=07-27-09
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
இனிய தமிழனுக்கு வணக்கம்.ஆற்றிவரும் தமிழ் பணி
ReplyDeleteவளர,மிளிர வாழ்த்துக்கள்.அழகான தமிழ் எழுத்துருக்கள்
எந்த வளைத்தளத்தில் கிடைக்கும்,அதை NHM Writer
kondu yeppadi tamil type seivadhu vilkkavum. alrkkdi@gmail.com