யாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி?
நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?
உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.
http://suryakannan.blogspot.com/2009/09/blog-post_29.html
உங்கள் வெப்சைட்க்கு வரும் விருந்தினர்கள் முகவரியை தெரிந்து கொள்வது எப்படி?.....how to find visitors address?
முதலில் histats.com website க்கு சென்று உங்கள் கணக்கை ஆரம்பிக்கவும்...பின் அவர்கள் கொடுக்கும் html யை உங்கள் layout setting ல் இனைது கொள்ளவும்......
பின் histats.com ல் போய் lost 20.00 ல் போய் பார்த்தால் உங்கள் இனையதளத்திற்கு வந்தவர்களின் ip address தெரிந்து கொள்ளலாம்....
அந்த முகவரியை http://www.ip-adress.com ல் போய் கொடுத்தால் அவர்கள் முகவரி....மற்றும் அனைத்து தகவல்களும் தயார்...அதில் கூகிலாண்டவர் தனது வரைபடத்திலும் முகவரியை தெளிவாக காண்பிக்கிறார்.......
ஆக இனையத்தில் எதுவும் ரகசியம் அல்ல ........கவனம்
பின் histats.com ல் போய் lost 20.00 ல் போய் பார்த்தால் உங்கள் இனையதளத்திற்கு வந்தவர்களின் ip address தெரிந்து கொள்ளலாம்....
அந்த முகவரியை http://www.ip-adress.com ல் போய் கொடுத்தால் அவர்கள் முகவரி....மற்றும் அனைத்து தகவல்களும் தயார்...அதில் கூகிலாண்டவர் தனது வரைபடத்திலும் முகவரியை தெளிவாக காண்பிக்கிறார்.......
ஆக இனையத்தில் எதுவும் ரகசியம் அல்ல ........கவனம்
http://naanpithan.blogspot.com/2009/09/how-to-find-visitors-address.html
மற்றவர்களின் USB Drive இல் உள்ள தரவுகளை அவர்களை அறியாமலே திருடுவதற்கான மென்பொருள்:
உங்கள் இல் USB இல் உள்ள கோப்புகளையோ (Folders) அவர்களின் ஆவணங்களையோ (Documents) அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் USB Drive க்களில் உள்ள கோப்புக்களை, ஆவணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் எவ்வாறு பிரதி (Copy) செய்து கொள்ள Copier என்னும் இந்த மென்பொருள் உதவுகின்றது.
(உங்களுக்கு விளங்கிற தமிழிலை சொன்னால் மற்ற ஆட்களின்ரை தரவுகளை திருடுறது.....எல்லாரும் ஒரு வகையிலை திருடர் தான்.)
அவர்கள் உங்கள் கணனியில் தங்கள் USB Drive களை பாவிப்பவர்களாயின் அவர்களின் சகல தரவுகள் யாவும் அவர்களை அறியாமலே பிரதி(Copy) செய்யப்பட்டுவிடும். அவர்களின் தரவுகள் பிரதி செய்யப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது.
இந்த மென்பொருளானது ஆகக் கூடுதலாக 8GB அளவிலான தரவுகளையே திருடும். மன்னிக்கவும் பிரதி செய்யும். (திருடுறதிற்கும் ஒரு அளவு இருக்கு)
இந்த மென்பொருள் மூலம் பிரதி செய்யப்படும் தரவுகள் முன்னிருப்பு அடைவான (Default directory) "C:\WINDOWS\sysbackup\" என்னும் அடைவினுள் (Director) இல் சேமிக்கப்படும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Download USB Hidden File Copier
http://vannitec.blogspot.com/2009/09/usb-drive_26.html
http://vannitec.blogspot.com/2009/09/usb-drive_26.html
USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்
USB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.அவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாக நீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.
மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.
http://vannitec.blogspot.com/2009/09/usb-devices.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com