ஏ-டிரைவ் (A-Drive) ஆன்லைன் டேட்டா ஸ்டோரேஜ்
இதில் நுழைந்தவுடன் இந்த தளம் தரும் இலவச மற்றும் கட்டண சேவை விரிவாகக் காட்டப்படுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முதலில் இதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால், அதனையே யூசர் பெயராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையும் பயன்படுத்த இருக்கும் பாஸ்வேர்டையும் கொடுத்தால், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. பின் அதனைக் கிளிக் செய்து உறுதி செய்த பின், மீண்டும் ஏ–டிரைவ் தளம் சென்று, அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று பைல்களை அப்லோட் செய்வதும் மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதே போல சேவ் செய்த பைலையும், மீள எடுத்துப் பயன்படுத்தி வைக்கலாம். பேசிக், சிக்னேச்சர் மற்றும் பிரிமியம் என மூன்று வகை பைல் சேவ் வசதிகளை இந்த தளம் தருகிறது.
இங்கு சேவ் செய்திடும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்லைனில் பைல்களை வைத்தபடியே அவற்றை எடிட் செய்திடலாம்.
சிக்னேச்சர் என்ற கட்டணம் செலுத்திப் பெறும் வசதியிலும் 50 ஜிபி ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாகப் பல தொழில் நுட்ப வசதிகள் தரப்படுகின்றன. எப்.டி.பி. பைல் ட்ரான்ஸ்பர், எஸ்.எஸ்.எல். என்கிரிப்ஷன்,பைல் ரெகவரி, மற்றும் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான டெஸ்க் டாப் வசதிகள் தரப்பட்டுள்ளன.
பிரிமியம் ஸ்டோரேஜ் வசதி பெரும்பாலும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.100, 250, 500 ஜிபி மற்றும் 1 டெரா பைட் என்ற அளவில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அளவிற்கேற்றபடி கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தளம் தரும் வசதிகளில் ஆன்லைன் எடிட்டிங் வசதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இலவச ஸ்டோரேஜ் வசதி பெறுபவர்கள் கூட, ஆன்லைனிலேயே தங்கள் பைல்களை எடிட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து பின் திருத்த வேண்டியதில்லை.
பாதுகாப்பு, ரகசியம் என்ற அடிப்படையிலான பைல்களை இந்த ஆன்லைன் தள ஸ்டோரேஜ் வசதியில் வைத்திட விரும்பினால் கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறுங்கள். ஏனென்றால் இலவச ஸ்டோரேஜ் வசதியில் என்கிரிப்ஷன் வசதி தரப்படவில்லை.
அடுத்ததாக இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கான யூசர் இன்டர்பேஸ் வசதி மிக எளிமையாக இருப்பதனையும் குறிப்பிட வேண்டும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க் இடம் போதவில்லை என அங்கலாய்ப் பவர்களுக்கு இது ஒரு நல்ல தளமாகும் .
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.
எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.
இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.
டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!
http://tamilalagan.com/tamilalagan/?p=865
இனி இணைய முகவரிகளை தமிழிலும் டைப்பலாம்
http://ethum-ariyan.blogspot.com/2009/11/blog-post_09.html
இது வரை தமிழில் வலைப்பக்கங்களை படித்து வந்த நாம், இனி அவ்வலைப்பக்கங்களின் முகவைரிகளையும்(URL) தமிழில் டைப் செய்யலாம்
உதாரணத்துக்கு கீழே உள்ள வரிகளை copy செய்து fire fox browser ன் address bar ல் paste செய்து enter பட்டனை தட்டி பாருங்கள். திறக்கும் வலைப்பக்கம் இப்பதிவு சம்பந்தமான மேலும் பல செய்திகளை கொண்டுள்ளது அதையும் படிக்கவும்.
http://உதாரணம்.பரிட்சை/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
குறிப்பு: Internet Explorer 8 ல் இந்த முகவரியை இடும்போது இது தொடர்பான வலைப்பக்கம் தெளிவாக திறக்கப்பட்டாலும், முகவரி மட்டும் ஏனோ ஆங்கிலத்தில் தான் தெரிகிறது
இது தொடர்பாக ஒரு தமிழ் நாளேட்டில் வந்த செய்தி உஙகளுக்காக கிழே படமாக. படத்தை மேலும் பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக்கவும்
http://www.idnnews.com/?tag=tamil-idn
உங்கள் பெயர் உங்களுக்கு சொந்தமா...?
Quick Username Availability Checking
http://www.tamilnenjam.org/2009/05/how-to-check-your-username-is-available.htmlhttp://www.usernamez.com/
http://www.checkusernames.com/
http://www.usernamecheck.com/
http://www.namechk.com/
Check your user name availability in 100+ social networking sites.
தமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங்களை வாசிக்க
தமிழகத்தில் உள்ள சுதந்திர கல்வி திட்டம் தமிழில் எழுத்துகளை வாசிக்க சிரமப்படுகிற மக்களை உருவாக்கி உள்ளது. இவர்கள் யார் எனில் பள்ளி கல்வியில் முதல் மொழியாக ஹிந்தியையும், விருப்ப மொழியாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை தேர்ந்து எடுத்து பயின்றவர்கள்.அனைவரும் தமிழ் மொழியில் பேசுவதால் இவர்களும் தமிழ் மொழியில் சரளமாக பேசுவார்கள். தமிழ் திரைப்படங்களை பார்த்து பரவசம் அடைவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளை பார்ப்பார்கள். இவர்களும் தமிழர்கள்தான். ஆனால் என்ன இவர்களால் தமிழ் மொழி எழுத்துகளை வாசிக்க இயலாது.
உதாரணமாக இவர்களிடம் "நீ எனது உயிர் நண்பன்" என்று எழுதி காட்டினால் புரியாது. "nee enathu uyir nanban" என்று ஆங்கில எழுத்துகளில் எழுதி காட்டினால் புரிந்து கொள்வார்கள். இது போன்றோரிடம் தமிழ் வலைப்பக்கங்களை காண்பித்ததால் கண்ணை கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கு என்பார்கள்.
இனி இவர்கள் கவலைப்பட தேவை இல்லை. இவர்களுக்கு என்று கூகிள் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அது கூகுளின் மொழி எழுத்து மாற்றி.
http://scriptconv.googlelabs.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள். நீங்கள் எழுத்து மாற்றவேண்டிய தமிழ் வாசகங்களை காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்யுங்கள். 'Convert to : ' என்பதில் 'English' என்பதை தேர்ந்தெடுத்து 'Convert' என்பதனை அழுத்துங்கள்.
இப்போது நீங்கள் கொடுத்த தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளாக மாறி இருக்கும். நீங்கள் அதை வாசித்து தமிழ் அர்த்தம் புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஒரு இணைய பக்கத்தை முழுமையாக எழுத்து மற்ற விரும்பினால் அங்கு மற்ற வேண்டிய இணைய பக்கத்தில் url கொடுத்து Convert to : ' என்பதில் 'English' என்பதை தேர்ந்தெடுத்து 'Convert' என்பதனை அழுத்துங்கள்.
இப்போது நீங்கள் கொடுத்த தமிழ் இணைய பக்கம் முழுதும் ஆங்கில எழுத்துகளில் மாற்றி இருக்கும்.
இந்த வசதியை தமிழ் பேச தெரிந்த (புரிந்து கொள்ள தெரிந்த) தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், நேபாளி, மராட்டி , பெங்காலி , குஜராத்தில் எழுத தெரிந்த மக்களும் உபயோகிக்கலாம்.
http://tvs50.blogspot.com/2009/11/convert-tamil-letters-to-english.html
ட்விட்டர் கையேடு
ட்விட்டர் பற்றி நிறைய எழுதிப்பட்டுவிட்டது. ஆனாலும் சிலருக்கு அதை உபயோகிப்பது சற்று கடினமாக இருக்கிறது. அதனால் ஒரு குட்டி அறிமுகம்.
ட்விட்டர் ஒரு மைக்ரோ ப்ளாக், நாம் நினைப்பதை 140 எழுத்துகளுக்குள் சொல்ல ஒரு தளம். அந்த 140 எழுத்துக்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக அந்த 140 எழுத்துகள் “இப்போது நீ என்ன செய்கிறாய்?” என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டு ட்வீட்.
”இந்த மழைத்தொல்ல தாங்க முடியல யாராவது ஒரு தம் கடன் கொடுங்களேன்”
இது உங்களது அந்த நிமிடத்தின் நினைப்பு. மேலும் ட்விட்டரை விளம்பரம் (”என் பைக் அட்டகாசமா இருக்கும். ஆனா விற்கப்போறேன்”), சமூக கருத்துக்கள் (”மழையில் நனையாதீர்கள், எனக்கு ஜூரம் வந்துடுச்சு”), மொக்கைகள் (”ஆஆஆஅவ்வ்வ்வ்வ் (கொட்டாவி)”) மேலும் மற்ற உங்கள் ட்விட்டர் ஃபாலோயர்களுடன் சாட்டும்(Chat) செய்ய பயன்படுத்தலாம்.
ட்விட்டரில் புழங்கும் சில வார்த்தைகள்:
Tweet:
140 எழுத்துக்குள் உங்களால் தெரிவிக்கப்படும் (குறுந்)தகவல்
Timeline:
உங்கள் ட்விட்டர் முகப்பு(Home Page), இங்கு உங்களுடைய மற்றும் நீங்கள் Follow செய்பவர்களின் Tweet-கள் இடம்பெறும்.
பொதுவாக இதன் URL, http://twitter.com/ – ஆக இருக்கும்
Followers:
யாருக்காவது உங்கள் ட்வீட்டுகள் பிடித்துப்போய், உங்கள் ட்விட்டுகள் அவர்களுடைய Timeline-ல் தெரிய உங்களை follow செய்தால், அவர்கள் உங்களது followers
Following:
உங்களுக்கு யாருடைய ட்வீட்டாவது பிடித்துப்போய், அவை உங்கள் Timeline-ல் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களை நீங்கள் follow செய்தால் அவர்கள் உங்கள் following
DM:
யாருக்காவது நீங்கள் ரகசியமாக/தனிப்பட்ட முறையில் தகவல் சொல்ல அவர்களுக்கு அனுப்புவது DM எனப்படும் Direct Message. ஆனால் நீங்களும் அவரும் ஒருவருக்கொருவர் ஃபாலோயராக இருந்தால் மட்டுமே DM அனுப்ப முடியும். இது உங்கள் DM -ஐ Spamகளிடம் இருந்து காக்கிறது. இதை யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர்களால் மட்டுமே படிக்க முடியும்
இதை அனுப்பும் வழிமுறை:
d
d kishorek உன் ஏரியாவுக்கு ஆட்டோ அனுப்பனும், உன் அட்ரஸ் என்ன?
Reply:
உங்கள் Timeline-ல் இருந்து ஏதாவது ஒரு Tweet-க்கு பதில் அளிக்க விரும்பினால், அந்த ட்வீட்டில் இருக்கும் Reply -ஐ க்ளிக் செய்து அனுப்பும் tweet. இது எந்த ட்வீட்டிற்கு பதில் அளிக்கிறீர்களோ அந்த ட்வீட்டை கண்டறிய உதவும். அல்லது யாருக்கு பதில் அளிக்கவேண்டுமோ அவரது பெயரை @குறியீட்டுக்கு அடுத்து போட்டு அனுப்பலாம்.
எடுத்துக்காட்டு:
kishorek: என் எடை இந்த மாதம் 3 கிலோ கூடிவிட்டது.
இதற்கான reply:
@kishorek ♫ எந்த கடையில நீ அரிசி வாங்கற?
Mentions:
இதுவும் கிட்டத்தட்ட Reply மாதிரிதான். ஆனால் Reply போல் உங்கள் பெயர் முதலில் போடாமல் ட்வீட்டில் எங்காவது ஒரு இடத்தில் போடப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த ட்வீட்டில் சொல்லப்பட்டிருக்கும் அனைவருக்கும் அந்த ட்வீட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
எடுத்துக்காட்டு:
நேத்து என் கனவுல @trisha @shreya ரெண்டு பேரும் செம சண்ட போட்டுக்கிட்டாங்க
Spam:
திடீரென்று உங்கள் Follower list-ல் ஒரு 10 பேர் கூடிவிட்டால் சந்தோஷப்படாதீர்கள். அவர்கள் Spam-களாக இருக்கலாம். இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளத்தேவை இல்லை. ஆனால் அவர்களை திரும்ப Follow செய்து தொலைக்காதீர்கள். தமிழில் Spam அனுப்பும் அளவு யாரும் வரவில்லை.
RT: Retweet. ஏதாவது ஒரு ட்வீட் உங்களுக்கு பிடித்துப்போய் அதை நீங்கள் உங்களுடைய Follower-களுக்கு பரப்ப நினைத்தால் அது Retweet.
எடுத்துக்காட்டு:
RT: @kishorek எனக்கு மீன்குழம்பு சாப்பிட வேண்டும்
Hash tag:
உங்கள் Tweet-ஐ வகைப்படுத்த # குறியீட்டை தொடர்ந்து உங்கள் Tweet-ஐ வகைப்படுத்தலாம். இதன் மூலம் அதே தலைப்பில் உள்ள மற்ற தகவல்களை தெரிந்துகொள்ள அந்த வார்த்தையில் ஒரு கிளிக் செய்தால் போதுமானதாக இருக்கும்.
எ-டு:
எனக்கும் தேதி நெருங்க நெருங்க பயமாத்தான் இருக்கு #வேட்டைக்காரன்
Trending topics:
ட்விட்டரில் பலர் ஒரே விஷயத்தை பற்றி பேசும்போது அது அந்த நேரத்தைய புகழ்பெற்ற ஒரு விவாத தலைப்பாகிறது. எடுத்துக்காட்டாக மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது, MJ, RIP MJ, Thriller போன்ற வார்த்தைகள் பலரால் Tweet செய்யப்பட்டு Trending topic-ல் இடம் பிடித்தன. இதன் மூலம் ஒரு பொது அலையைக்கூட உருவாக்கமுடியும்.
Fail Whale:
’முடியல’ என்று ட்விட்டர் சொல்லும்போது ஒரு திமிங்கிலத்தை பல பறவைகள் தூக்கிச்செல்லும் படம் வெளியாகும். இதுவே Fail Whale எனப்படுகிறது. ட்விட்டர் அதன் திறனை மிஞ்சி பலு சுமக்கும்போதும், ட்விட்டரில் தொழில்நுட்பக்கோளாறுகள் ஏற்படும்போதும், இது நடக்கும்.
List:
இது ஒரு குழப்பமான ஒரு விஷயம். மற்ற விஷயங்கள் உங்களுக்கு எளிதாகும்போது இது புரியும்
ட்விட்டரில் தற்சமயம் பல தமிழ் எழுத்தாளர்கள், ரைட்டர்கள், டாக்டர்கள், சச்சின் ரசிகர்கள், சச்சின் எதிரிகள், இளையராஜா ரசிகர்கள், ரஹ்மான் ரசிகர்கள் என பலதரப்பட்ட வகையினர் இருப்பதால் நன்றாய் பொழுது போகிறது.
http://blog.kishoresays.com/?p=179
Photo editing made fun
ஆன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு..
http://www.tamilnenjam.org/2009/05/jaycut-online-video-editor.html
Edit your movies on JayCut
http://www.Jaycut.com
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com