கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய  இணைய  இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில்  இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gifபேஸ் புக்கில்  இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg

இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Sunday, September 6, 2009

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி

இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.


ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவையெல்லாம் எதைக் குறிக்கின்றன?

டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது Under Voltage ஆகும். அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர். வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, நேரத்துக்கு குறுகிய நேரத்துக்கு குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள்.

இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.


பவர் கண்டிஷனிங்:
மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.


பவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை?
பவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை – Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற்கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற் கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.


எந்த சாதனம் சிறந்தது?
மேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply சாதனமே . ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றைக் கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.


மின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்?
யு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.


பேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய?


மின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி கொங்சம் கொஞ்சமாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும். மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.


எவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடியும்?
அது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் பொறுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ்என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.


பேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா?
எவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5கேவிஎ யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.


என்ன பேட்டரியை பயன்படுத்துகிறார்கள்?
கார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்-ஆசிட் பேட்டரி, நிக்கல்-காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் மோசமானது கார் பேட்டரி. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF (Sealed Maintenance Free) பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.


யு.பி.எஸ். ஸில் பிரிவுகள் உண்டா?
Online, Offline or Line interactive என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்படும். Ferroresonat Transformer கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.


எது மலிவானது?
ஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை மிக அதிகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.


பிரின்டரை யுபிஎஸ்ஸில் இணைக்கலாமா?


யு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரிண்டரைப் பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக்கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்.

http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=809&dt=12-30-99கேள்வி: என் வெப் பிரவுசரை எப்போது திறந்தாலும் அதன் திரை சிறியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் திரையின் மேலாக வலது புறம் சென்று மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டியுள்ளது. செட்டிங்ஸ் மாற்றத்தின் மூலம் இதனை எப்படி மாற்றலாம்?

பதில்: ஒவ்வொரு முறை மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்திப் பின் இன்டர்நெட் பிரவுசிங் செய்வது என்பது மிகவும் எரிச்சல் ஊட்டும் விஷயம்தான். எனக்கும் இது போல் முன்பு நேர்ந்தது. சரி செய்த பின் அந்த பிரச்சினை இல்லை. அதற்கான வழியைச் சொல்கிறேன்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் அது சிறியதாகக் கூட இருக்கலாம். மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டாம். இனி மவுஸின் கர்சரை நான்கு முனைகளுக்கும் கொண்டு செல்லுங்கள். கர்சரை ஓரமாக வைத்து இழுங்கள். திரையளவு விரியும். உங்களுக்குத் தேவையான அளவு, திரை முழுவதும் திரை விரிந்த பின்னர் அப்படியே விட்டுவிடவும். இதனை இரு புறமும் செய்திடலாம். பின் விண்டோவை மூடவும். இனி மீண்டும் பிரவுசரைத் திறந்தால் அது திரை முழுவதுமான விண்டோவினைக் கொண்டிருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் நீங்கள் பிரவுஸ் செய்வதாக இருந்தால், பிரவுசிங் முடித்து மூடும் கடைசி விண்டோ நீங்கள் விரும்பும் அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் அதனை மூடுகையில் எந்த அளவில் விண்டோவினை வைத்திருந்தீர்களோ, அந்த அளவிலேயே அடுத்து திறக்கும்போது விண்டோவினைக் காட்டும்.
கேள்வி: போல்டர் ஒன்றை பாஸ்வேர்ட் கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க முடியுமா? எங்கள் அலுவலகத்தில் பலர் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். அதற்கான வழிகளைக் கூறவும்.


பதில்:
விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிலேயே போல்டர் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென சில இலவசமாக டவுண்லோட் செய்து பயன் படுத்தும் புரோகிராம்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில் உங்களுக்கென யூசர் அக்கவுண்ட்டுடன் பாஸ்வேர்ட் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் பைல் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) என்று எண்ணுகிறேன்.


2. இனி எந்த போல்டருக்குப் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டுமோ அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்திய வாறே டபுள் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ள பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும்.

4. பின் Apply என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். பாஸ்வேர்ட் ஒன்றை தரப்போகிறீர் களா? என்று கேட்கப்படும். உங்கள் போல்டரை நீங்கள் பிரைவேட் ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த பாஸ்வேர்டினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கம்ப்யூட்டரில் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைகையிலும் அதே பாஸ்வேர்டினைக் கொடுக்க வேண்டியதிருக்கும்.

5. பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்து பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும்.

6. பின் Properties டயலாக் பாக்ஸில் OK கிளிக் செய்திடவும்.

7. இனி உங்கள் பாஸ்வேர்ட் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த போல்டர் ஸிப் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக பாஸ்வேர்ட் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு ஸிப் செய்யப்பட்ட போல்டர் மீது இருமுறை கிளிக் செய்திடவும். மேலாக உள்ள மெனுவில் பைல் தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் கிளிக் செய்திடவும். பாஸ்வேர்ட் பாக்ஸில் பாஸ்வேர்ட் ஒன்றை டைப் செய்திடவும். மீண்டும் Confirm Password பாக்ஸிலும் இதனை டைப் செய்திடவும். இனி இந்த போல்டரை நீங்கள் மட்டுமே பாஸ்வேர்ட் பயன்படுத்திப் பார்க்க முடியும்.கேள்வி:
பைல் மற்றும் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது போல சிடி ஒன்றுக்கு முழுமையாக பாஸ்வேர்ட் கொடுக்க முடியுமா? அதாவது பாஸ்வேர்ட் இல்லாமல் அந்த சிடிக்குள் நுழைய முடியாதபடி அமைக்க முடியுமா?பதில்:
சிடியில் பதிவு செய்கிற பைல்களுக்குத்தான் பாஸ்வேர்ட் கொடுக்க முடியும். மொத்தமாக சிடி ஒன்றுக்குப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வசதியை விண்டோஸ் தரவில்லை. CryptCD என்று ஒரு சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையைச் செய்வதாகப் படித்திருக்கிறேன். இதனை www.cryptcd.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திப் பார்க்கவும். இது இலவசம்தான்.

http://padmahari.files.wordpress.com/2009/07/globe-tv1.jpg


தமிழ் விக்கிபீடியா வரலாறு

என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத், தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது. ஒவ்வொரு நாடும், இனமும் மக்களும் தங்கள் மொழியில் இதனைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தான் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது. இதே போல இணையத்தில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு எழ, எண்ணம் முதிர்ந்து வளர்ச்சி பெற்று விக்கிபீடியா என்ற ஒரு அருமையான தகவல் தளம் நம் சந்ததிக்குக் கிடைத்துள்ளது. இந்த தளம் அண்மையில் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த தளத்தின் கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகத்தின் அறிவுத் தேடல்களையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் ஓர் இடத்தில் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகப் பழமை வாய்ந்த அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் மூலம் ஏற்பட்டது. ஆனால் அச்சு வடிவில் இதனை ஒரு நூல் தொகுப்பில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் 18 ஆம் நூற்றாண்டில் தான் ஏற்பட்டது. அதன் முதிர்ச்சி தான் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.


இன்டர்நெட் வளரத் தொடங்கிய போது, பலர் இன்டர்நெட் என்சைக்ளோபீடியா திட்டங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். 1993ல் இன்டர்பீடியா (Interpedia) (http://en.wikipedia.org /wiki/Interpedia) என்று தொடங்கியதை இதன் முன்னோடி எனக் கூறலாம். இலவசமாக சாப்ட்வேர் வழங்கும் கோட்பாடினை முன்னுரைத்து அமல்படுத்திய ரிச்சார்ட் ஸ்டால்மேன் 1999ல் உலகளாவிய அளவில் கற்றுக் கொள்ள தொகுப்பாக என்சைக்ளோபீடியா ஒன்று இன்டர்நெட்டில் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.


முதலில் நுபீடியா (Nupedia) என்ற பெயரில் இன்டர்நெட்டில் ஓர் இலவச என்சைக்ளோபீடியா உருவாக்கப்பட்டது. இன்டர்நெட்டில் விளம்பரங்களைக் கையாண்டு வந்த பொமிஸ் (Bomis) என்ற நிறுவம் இதனைத் தொடங்கியது. இதன் உரிமையாளர்கள் ஜிம்மி வேல்ஸ், டிம் ஷெல் மற்றும் மைக்கேல் டேவிஸ் ஆகியோர் இதற்கான முயற்சிகளைப் பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்புடன் கொண்டு வந்தனர். கன்னிங்காம் மற்றும் ஸ்டால்மேன் (Ward Cunningham and Richard Stallman) என்ற இருவர் முதலில் இதனைத் தொடங்கினர்.


Nupedia தங்கள் பங்களிப்புடன் இதனை உருவாக்க எண்ணினார்கள். ஆனால் நுபெடியா துவண்டு போக விக்கிபீடியா உருவானது. 2001 ஆம் ஆண்டு வெப்சைட் உருவாக்குவதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் விக்கிபீடியா தொடங்க விக்கிமீடியா பவுண்டேசன் நிறுவப்பட்டது.


2001 ஆம் ஆண்டில் ஜனவரி 15ல் விக்கிபீடியா (Wikipedia) என்னும் ஆன்லைன் என்சைக்ளோபீடியா வெளியானது. விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு ஹவாய் (Hawaii) மொழியில் விரைவு என்னும் பொருள் உண்டு. விரைவாக மக்களுக்கு அறிவு சார் தகவல்களைத் தருவதால் இதற்கு விக்கிபீடியா எனப்பெயரிட்டனர். பலமுறை இதன் தன்மை, தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் வெளியான போதும் தொடர்ந்து இது இணைய வாசகர்களிடையே நம்பிக்கயைப் பெற்று வருகிறது. 2004 முதல் 2007 வரையிலான காலத்தில் இதில் ஏற்பட்ட முன்னேற்றம் புயல் வேகத்தில் இருந்தது. இன்று பல மொழிகளிலும் இது உருவாகி உள்ளது. உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆகஸ்ட் 17ல் விக்கிபீடியா மிகச் சிறந்த வெற்றி இலக்கை அடைந் துள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டது. இதன் பின்னணியில் ஆயிரக்கணக் கானவர்களின் அயரா உழைப்பு உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இது நிறைவேறி உள்ளது. மனித இனத்தின் அறிவுசார் முன்னேற்றம் அனைத்தையும் கொண்டு வருவதே இந்த விக்கிபீடியாவின் இலக்காக, நோக்கமாக அறிவிக்கப்பட்டு அதனை அடைவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறது விக்கிபீடியா.


விக்கிபீடியா தளத்தில் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களால் ஒரு கோடியே 70 லட்சம் பக்கங்களில் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைகள் 32 கோடியே 60 லட்சம் முறை எடிட் செய்யப்பட்டுள்ளன.


முதல் மாதத்தில் விக்கிபீடியாவில் 12 கட்டுரைகளே இடம் பெற்றன. அப்போது இதற்கான சாப்ட்வேர் மற்றும் சர்வர் உதவியினை பொமிஸ் நிறுவனத்தின் ஊழியர் களே தந்தனர். இவ்வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இதன் பெயருக்கேற்ப மிக விரைவாக அனைத்து பிரிவுகளிலும் வளரத் தொடங்கியது. 2001 பிப்ரவரியில் இதன் கட்டுரைகள் 1000 ஐத் தாண்டின. தொடர்ந்த செப்டம்பர் மாதத்தில் இது 10,000 ஆக உயர்ந்தது. இவ்வாறாக முதல் ஆண்டின் முடிவில் இதன் கட்டுரைகள் 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தன. இதுவே 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 40 ஆயிரமாக முன்னேறியது.

தொடங்கிய ஆண்டிலேயே இந்த விக்கிபீடியா திட்டம் உலக மக்களைக் கவர்ந்தது. முதல் ஆண்டிலேயே வேறு மொழி களிலும் விக்கிபீடியா தொடங்கப் பட்டன. மார்ச் 16, 2001ல் deutsche.wikipedia.com தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி மொழிகளில் விக்கிபீடியாக்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலத்தை அடுத்து இரண்டாவதாக இடம் பெறுவது ஜெர்மன் மொழியில் உள்ள விக்கிபீடியா. இந்த கலைக் களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை விரைவில் தாண்ட உள்ளது. இதில் அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழி விக்கிபீடியா உள்ளது. இதில் 8 லட்சம் கட்டுரைகள் உள்ளன. அடுத்ததாக ஜப்பானியம், போலிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளங்கள் 6 லட்சத்திற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.


மொத்த விக்கிபீடியா தளங் களையும் எடுத்துக் கொண் டால், ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் தான் 75% கட்டுரைகள் உள்ளன.


யார் வேண்டுமானாலும், எந்த மொழியிலும், தங்களுக்குத் தெரிந்த பொருள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இதில் வெளியிடலாம். அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் வரிகளை எடிட் செய்திடலாம். புதிய விவரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பின் அவற்றை இணைக்கலாம்.

விக்கிபீடியா தமிழ் மொழியிலும் உள்ளது. 2003 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கியவர் தன் பெயரை வெளியிடவில்லை. "மனித மேம்பாடு' என்ற கட்டுரையை இவர் வெளியிட்டார். ஆனால் அதன் பின் தமிழ் சமுதாயம் குறித்த ஒரு சில ஆங்கிலக் கட்டுரைகளே வந்தன. பின் நவம்பர் 2003ல் மயூரநாதன் என்பவர் இதன் முகப்பு பக்கம் முழுவதையும் தமிழில் கொண்டு வந்தார். இவரே பின்னர் தொடர்ந்து கட்டுரைகளை அளித்து வரத் தொடங்கினார். இன்றைய அளவில் மிக அதிகமாகக் கட்டுரைகளை எழுதியவர் இவரே. தமிழில் 2,760 கட்டுரைகளைத் தந்துள்ளார். இவர் இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரைப் போலவே வெளிநாடுகளில் வாழும் பலர் தமிழ் விக்கிபீடியாவிற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். கனடாவிலிருந்து நிரோஜன், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வாழும் பேராசிரியர் வி.கே. (188 கட்டுரைகள் – பெரும்பாலும் கணிதம், வானவியல் மற்றும் தத்துவம்) மற்றும் ஜெர்மனியிலிருந்து எழுதும் இலங்கைத் தமிழ்ப் பெண் சந்திரவதனா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தமிழ் விக்கிபீடியாவினை வளர்ப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

தமிழ் தளத்தைக் காண ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அங்கு சென்று புதிய அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கவும். கட்டுரைகளை எப்படி எழுதலாம் என்று அறிந்து உங்கள் பங்களிப்பினையும் வழங்கவும். இதுவரை இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக் கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொட உள்ளது. ஆனால் பங்களிப்பவர்கள் என்ன வோ மிகவும் குறைவு தான். தமிழ் விக்கிபீடியா வளர வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் பலர், ஆங்காங்கே அறிவிப்பு கொடுத்து இதற்கான பயிலரங் கங்களை இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்தப் பயிலரங்கங்களில் எப்படி விக்கிபீடி யாவில் கட்டுரை எழுதுவது, உள்ளீடு செய்து பதிவது எப்படி, படங்கள், அட்டவணைகளை உருவாக்கிப் பதிவது எப்படி என்ற விபரங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு பயன்பெற்று இந்த உலக அறிவுத் தேடலில் நீங்களும் உங்கள் தடத்தைப் பதிக்கலாம்.


விக்கிபீடியா வரலாறு


2000: நுபெடியா (Nupedia) திட்டம் லாரி சாஞ்சர் துணையுடன் தொடங்கப்பட்டது.


2001: Wikipedia.com, Wikipedia.org ஆகிய டொமைன் பெயர்கள் ஜனவரி 12, 13ல் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15ல் விக்கிபீடியா உதயமானது
2001 மார்ச் மற்றும் மே : பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் உட்பட பிற மொழிகளில் விக்கிபீடியாக்கள் தொடங்கப்பட்டன. ஆகஸ்ட் 2001ல் இந்த தளங்கள் குறித்து செய்திகள் உலகெங்கும் வெளியாகத் தொடங் கியதால் மக்கள் இவற்றின் மேல் ஆர்வம் அடைந்தனர்.
2002: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிதி சிக்கல் ஏற்பட்ட போதும் பல தொழில் நுட்ப மேம்பாடுகள் புகுத்தப்பட்டன.
2003: தொடக்கத்திலேயே விக்கிபீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. நிர்வாகத்திற்கென விக்கிமீடியா பவுண்டேஷன் தொடங்கப்பட்டது.
2004: உலகளாவிய தன்மையுடன் ஓராண்டில் விக்கிபீடியாவின் கட்டுரைகள் இரு மடங்கு வளர்ச்சியை மேற்கொண்டு, கட்டுரைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 100 மொழிகளில் உருவானது.
2005: பன்னாட்டு மொழிகளில் விக்கிபீடியா உருவானதால் அதற்கான போர்ட்டல்கள் உருவாக்கப் பட்டன. சிஸ்டங்களை மேம் படுத்த நிதி திரட்டியதில் ஒரு லட்சம் டாலர் கிடைத்தது. அக்டோபர் மாதத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது. சிலர் இதன் கட்டுரைகளின் தகவல்களை வேண்டுமென்றே சிதைத்ததனால் பாதுகாப்பு முறைகள் வடிவமைக்கப்பட்டன.
2006: கட்டுரைகள் 15 லட்சம் எண்ணிக்கையத் தாண்டின. விக்கிமீடியா பவுண்டேசனின் பதிவு பெற்ற வர்த்தக அடையாளமாக விக்கிபீடியா உரிமை பதிவு பெற்றது. இந்த ஆண்டில் நடந்த விக்கிமேனியா 2006 என்ற கருத்தரங்கில் ஜிம்மி வேல்ஸ், விக்கிபீடியா கட்டுரைகள் தரத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார்.
2007: அனைத்து மொழிகளிலும் உள்ள விக்கிபீடியா தளங்களில் 174 கோடி சொற்கள் இருந்தன. ஏறத்தாழ 250 மொழிகளில் 75 லட்சம் கட்டுரைகள் உருவாகி பதியப் பட்டிருந்தன. ஆங்கில மொழியில் அமைக்கப் பட்ட விக்கிபீடியாவிற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,700 கட்டுரைகள் வரத் தொடங்கின.
2008: பல்வேறு விக்கிபீடியா திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதம் இதன் ஒரு கோடியாவது கட்டுரை வெளியானது. இது ஹங்கேரியன் விக்கி பீடியாவில் பதியப்பட்டது. இதற்குப் பின் சில மாதங்கள் கழித்து ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியது.
2009: மார்ச் 20 ஆம் நாள் ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரை எண்ணிக்கை 28 லட்சத்தை எட்டியது. ஜூன் 4ல் இது 29 லட்சம் ஆனது. ஆகஸ்ட் 17 காலை 4 மணிக்கு கட்டுரைகளின் சரியான எண்ணிக்கை 30,03,379ஐத் தொட்டது.

http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=803&dt=12-30-99

Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"இ-தமிழன்!"


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ மனிதன்@சென்னை ♥

www.e-tamizhan.blogspot.com

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics
HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video
Blog Widget by LinkWithin