புகைப்படத்தை வரைந்த ஓவியமாக மாற்றுவது எப்படி?
போட்டோஷாப்பில் நம்மிடம் உள்ள புகைப்படத்தை வரைந்த ஓவியமாக தோற்றமளிக்கும்படி மாற்றலாம்.
முதலில் நீங்கள் மாற்ற இருக்கும் புகைப்படத்தை திறந்துகொள்ளவும். பின்னர் அதனை கருப்பு வெள்ளையாக மாற்றவும். இதற்க்கு தட்டச்சு பலகையில் shift+ctrl+U ஐ ஒருசேர அழுத்தவும் அல்லது image adjustments desaturate.
இனி, இந்த படத்தை அப்படியே டூப்ளிகேட் செய்துகொள்ளவும். தட்டச்சு பலகையில் ctrl+ Jஐ ஒருசேர அழுத்தவும். அல்லது லேயரில் ரைட் கிளிக் செய்து duplicate layer என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து இந்த புகைப்படத்தை நெகடிவ் ஆக மாற்றவேண்டும் இதற்க்கு தட்டச்சு பலகையில் ctrl+Iஐ ஒரு சேர அழுத்தவும் அல்லது image, adjustments,Invert.
என்ன நெகடிவ் ஆக மாறி விட்டதா?
இனி, மேலேயுள்ள லேயரின் மோடை " Color Dodge" க்கு மாற்றவும்
என்ன புகைப்படம் வெள்ளையாக மாறிவிட்டதா? கவலை வேண்டாம். இனி filter,blur,Gaussian Blurக்கு செல்லவும் Gaussian Blur இன் மதிப்பை கூட்ட கூட்ட படமானது ஓவியம் போல கண்ணுக்கு தெரியும்.
உங்களது புகைப்பட resolutionஐ பொறுத்து வேல்யூஸும் மாறுபடும். உங்களுக்கு திருப்திஅளிக்கும் வரையில் வேல்யூஸை கூட்டியோ குறைத்தோ உருவாக்கிகொள்ளலாம்.
பின்னர் levels,curves,brightness and contrast போன்றவைகளை உங்களின் விருப்பதிற்க்கு ஏற்றார்போல செட் செய்து கொள்ளவும். என்ன இப்போது உங்களின் புகைப்படம் பென்சிலால் வரைந்த ஓவியம் போல இருக்கிறதா?
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போடவும்.
http://www.pudhuvai.com/?p=191
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com