கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!

வணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..!
online

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

Join me on என் இனிய இணைய இளைய தமிழகமே!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ athisivam... 16 friends 10 photos 1 Event
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே!
அன்பை விதைத்து நண்பர்களே..! நட்புப் பூந்தோட்டம் போட..! இங்கே வாங்க...! இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே!
Members on என் இனிய இணைய இளைய தமிழகமே!:
d.s.kannan d.s.kannan SenthilKuma... SenthilKumarc- hinnachami selvaananthan selvaananthan- poovalingam poovalingam kumar.P kumar.P
About என் இனிய இணைய இளைய தமிழகமே!
இணையத்தில் நமக்கான உலகம்...!
என் இனிய  இணைய  இளைய தமிழகமே! 23 members 10 photos
To control which emails you receive on என் இனிய இணைய இளைய தமிழகமே!, click here


ஆர்குட்டில்  இணைய 

http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gif



பேஸ் புக்கில்  இணைய 

http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg





இமெயில் குழுவில் இணைய...
http://www.globalemailmarketing.com/images/logo-yahoomail.gif Yahoo! Groups
உங்கள் அன்புக்கு நன்றி!

Visit this group
இமெயில் குழுவில் இணைய...

http://rebelpixel.com/wp-content/gmail-logo.gif
Google Groups
Subscribe to beyouths
Email:
Visit this group

Hit Counter

Followers

என் வலைப் பூக்கள்....!

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

Sunday, October 11, 2009

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

புகைப்படங்களை மிக இலகுவாக வடிவமைக்கவென ஒரு இலவச மென்பொருள்

புகைப்படங்களை வண்ணமயமாக வடிவமைத்து பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான ஒரு இலவச மென்பொருள்.
Photoscape எனப்படும் இந்த மென்பொருளானது பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கவும்(Photo Combine) மற்றும் அசையும் உருவங்களை(GIF Animation) உருவாக்கவும் மற்றும் புகைப்படங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கவும்(Format Conversion) உதவுகின்றது. இன்னும் பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச மென்பொருள் பதிப்பாக உள்ளது.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Photoscape Download Link


http://vannitec.blogspot.com/2009/10/blog-post_08.html


பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகள்

http://www.honeytamilonline.co.cc/2009/10/blog-post_05.html

பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினைத் தரும் வகையில் இப்போதெல்லாம் பல ஆட்ஆன் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு புரோகிராம்களாக வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில வசதிகளை வஞ்சகமின்றி இவை தருகின்றன.

பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்ஆன் புரோகிராம்களை இங்கு தருகிறோம்.

1. Foxy Tunes

உங்களுடைய பிரவுசர் விண்டோவிலேயே ஒரு மீடியா பிளேயர் வேண்டுமானால், இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பதிந்து கொள்ளவும். அதாவது இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாடலுக்கான லிங்க் தரப்படுகிறது. அல்லது பாடல் அதிலேயே கிடைக்கிறது. இதற்கென இன்னொரு விண்டோவில் ஆடியோ பிளேயரை இயக்கிப் பார்க்க வேண்டியதில்லை. பிரவுசரிலேயே மீடியா பிளேயரை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

2. Image Zoom

இணைய தளத்தில் உள்ள இமேஜ்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், இந்த புரோகிராம் உங்களுக்கு மிக முக்கியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும், பின் வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்து சிறியதாக்கிப் பார்க்கவும் உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

3.Visual Bookmarks

நீங்கள் அமைத்திட்ட புக்மார்க்குகள், அளித்த பெயருடன் உங்களுக்குப் பட்டியல் இடப்படுகிறது. புக்மார்க்குகள் அதிகமாக, அதிகமாக இவை எதனைக் குறிக்கின்றன என்பதே மறந்து போகும். இதற்கு ஓரளவிற்கு உதவும் வகையில் இந்த ஆட் ஆன் செயல்படுகிறது. ஓரளவிற்கு என்ன, முழுமையான உதவியை அளிக்கிறது. வெப்சைட்டுகளில் நீங்கள் அடையாளம் கொள்ளக்கூடிய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், அந்த பகுதி புக் மார்க் பட்டியலாகக் காட்டப்படும். இந்தப் பட்டியல் தனியே இருக்கும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

4. FoxSaver

உங்களுடைய பயர்பாக்ஸ் பிரவுசரின் தோற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதா? அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா? அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா? கவலையே பட வேண்டாம். உங்கள் விருப்பத்தை இந்த பாக்ஸ் சேவர் ஆட் ஆன் புரோகிராம் நிறைவேற்றி வைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசரின் தோற்றம் மட்டுமல்ல, இணையத்தில் உங்களுக்கு விருப்பமான இமேஜஸ், ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ், ஏன் உங்களுடைய போட்டோ ஆகியவற்றை ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

5. Clipmarks

கிளிப் மார்க்ஸ் ஏறத்தாழ காப்பி செய்திடும் வேலையை மேற்கொள்கிறது. ஆனால் ஒரு கத்தரிக்கோல் கொண்டு இந்த வேலையைச் செய்கிறது. இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் நீங்கள் தனித்துப் பார்க்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பின் அதனை வேறு ஒரு இடத்தில் காப்பி செய்திடலாம். சேவ் செய்து வைக்கலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். உங்கள் பிளாக்குகளில் பதியலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

6.Videodownloader

இந்த பெயர் என்ன கூறுகிறதோ அதையே சிறப்பாக மேற்கொள்கிறது இதில் உள்ள ஆட் ஆன் தொகுப்பு. ஆம், நீங்கள் வீடியோ கிளிப்கள் உள்ள தளங்களுக்குச் செல்கையில் உங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தியே அது. யுட்யூப், கூகுள் வீடியோஸ், மெட்கேப் போன்ற தளங்களுக்குச் செல்கையில் இதில் இருந்தெல்லாம் வீடியோ டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தி கிடைக்கும். அதற்கான மெனுவினைக் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின் இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பார்க்கலாம் .

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

7. Gspace

இணைய வெளியில் உங்களுக்கென்று ஓர் இடத்தை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களுடைய பேஜ் பார்க்கையில் கீழாக இவ்வளவு இடம் உங்களுக்கு உள்ளது; அதில் இவ்வளவுதான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற செய்தி கிடைக்கும். இந்த இடமானது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் தளத்தைப் பயன்படுத்துகையில் உயர்ந்து கொண்டே போகும். அப்படியானால் கூகுள் உங்களுக்குக் கூடுதலான இடத்தையே கொடுக்கிறது.

அந்த கூடுதல் இடத்தை என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கான பயன்பாட்டினை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த ஜிஸ்பேஸில், இடத்தில், நீங்கள் உங்கள் பைல்களைச் சேவ் செய்து வைக்கலாம். அவ்வாறு சேவ் செய்து வைத்த இடத்தில் உள்ள பைல்களை இன்டர்நெட் இணைப்பு உள்ள எந்த இடத்தில் இருந்தும் பெற்று பயன்படுத்தலாம். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் அனுமதி கொடுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

8. Downthemall

ஏற்கனவே இந்த ஆட் ஆன் தொகுப்பு பற்றி இங்கே தகவல்கள் தரப்பட்டன. இந்த வேளையில் இதனை மீண்டும் நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் உள்ள படம், வீடியோ மட்டுமின்றி அனைத்தையும், டெக்ஸ்ட் மற்றும் லிங்க் உட்பட அனைத்தையும், மொத்தமாக டவுண்லோட் செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு உதவுகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

மின்னஞ்சல் என்பது கணிப்பொறித்துறையில் உள்ளவர்கள் என்றில்லாது அனைவரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற சாதனம்.

ஒரு சிலர் தனக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கும் அளவிற்கு அதில் மிக போதையானவர்கள். தற்போது பல நிறுவனங்களும் சேமிப்பு அளவை அதிகளவில் கொடுத்து இருப்பதால் தங்கள் முக்கிய தகவல்களை கூட அதில் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.

தாங்கள் எங்கே சென்றாலும் தங்கள் தகவலை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் ஒன்றுக்கு இரண்டாகவும் அதற்க்கு மேலும் உருவாக்கி வைத்துக்கொள்கிறார்கள், அந்த அளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது.

இந்த இடுகையில் ஜிமெயில் பற்றிய தகவல்களை கூறுகிறேன்

மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் அதன் முக்கியத்துவமும் அதிகரிக்கிறது. அதுவும் பதிவர்கள் பலர் தங்கள் தளத்திற்கும் இதே ஐ டியை பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் இன்னும் வலுப்பெறுகிறது.

தற்போது ஹேக்கிங் (Hack) என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது, கொஞ்சம் ஏமாந்தாலும் நாம் ஆசை ஆசையாய் வைத்து இருந்த, நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த முகவரி உட்பட பல தகவல்களை இழக்க நேரலாம். இதற்கு உதாரணமாக நமது பதிவர்கள் பலரை குறிப்பிடலாம்.


இதில் நமது மின்னஞ்சல் ஹேக்கிங் செய்யப்பட்டால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று கூறுகிறேன். ஹேக்கிங் செய்யப்பட்டால் 100% திரும்ப பெற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, ஆனால் முடியாதது இல்லை முயற்சி செய்யலாம் என்று தான் கூகிள் கூறுகிறது.

ஐயோ! போச்சே என்று தலையில் கைய வைத்து உட்காராமல் அதை சரி செய்ய முடியுமா என்று பொறுமையாக யோசிப்பதே புத்திசாலித்தனம்.

பிரச்சனை வராமல் உஷாராக இருப்பது ஒரு வகை, அப்படி வந்து விட்டால் என்ன செய்வது அதற்கு சில முன்னேற்பாடுகளை செய்து விடுதல் இன்னும் நலம், அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

முதல் பிரச்சனை கடவுச்சொல் (Password) மறந்து விட்டால் என்ன செய்வது?



உங்களுடைய கூகிள் கணக்கில் My Account or Google mail --> settings --> Accounts and Import --> Google Account Settings உள்ளே சென்று படத்தில் உள்ள Change password recovery options ஐ சொடுக்குங்கள், உடன் உங்களை திரும்ப ஒரு முறை உங்கள் கடவுச்சொல்லை பதிய கூறும், உங்கள் கடவுச்சொல்லை பதிந்த பிறகு கீழே உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்






Email பகுதியில் நீங்க secondary mail இடத்தில் உங்களின் மற்ற ஒரு முகவரியை கொடுங்கள் (முக்கியமாக இரண்டு முகவரிக்கும் ஒரே கடவுச்சொல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்)

SMS பகுதியில் உங்க கைத்தொலைபேசி எண்ணை கொடுக்கவும்

Security Question பகுதியில் உங்கள் விருப்ப கேள்வி பதிலை தேர்வு செய்யவும், மறந்து விட்டதாக நீங்கள் கருதினால் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இனி உங்கள் கடவுச்சொல் தொலைந்து (மறந்து) விட்டால் மேற்கண்ட முறைப்படி உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் பெற முடியும்.

உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் secondary மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சொல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் வரும், எனவே பதட்டத்தில் பலமுறை முயற்சி செய்ய வேண்டாம், இது நீங்கள் முயற்சிக்கும் போதே கூகிள் உங்களுக்கு அறிவுறுத்தும்.

இது வரை உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கண்டீர்கள், உங்கள் கடவுச்சொல் ஹேக்கிங் செய்யப்பட்டால்...

இது தான் பிரச்சனையானது

உங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்பவர் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பது தான், அதாவது உங்கள் secondary mail, SMS, Security Question ல் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி இருப்பார்கள், இதனால் குட்டி கரணம் அடித்தாலும் உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற முடியாது.

ஐயய்யோ! அப்புறம் என்னங்க பண்ணுறதுனு நீங்க பேதி ஆவது தெரியுது :-) இதற்க்கு கூகிள் உங்களுக்கு கொடுக்கும் கடைசி வஜ்ராயுதம் தான் இந்த லிங்க். இங்கே சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுங்கள்.



நீங்கள் தினமும் பயன்படுத்தும் கணிப்பொறி இடத்தில் இருந்தே கொடுங்கள் ஏன் என்றால் இதை நீங்கள் submit செய்யும் போது உங்கள் IP கூகிள் நிறுவனத்தாரால் ட்ராக் செய்யப்படும், எனவே ஒரே IP யாக இருப்பது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

நீங்கள் கூகிள் கணக்கு துவங்கியபோது உங்களுக்கு ஒரு Welcome மின்னஞ்சல் வந்து இருக்கும் அதையும் இந்த லின்க்கில் சென்று கூகிள் என்னென்ன தகவல்கள் கேட்கிறது என்பதையும் அறிந்து அதை தொகுத்து பாதுகாப்பான இடத்துல சேமித்து வைத்துக்குங்க. எப்படியும் இரண்டு மின்னஞ்சல் வைத்து இருப்பீங்க, கண்டிப்பா இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் பிறகு அதில் உள்ள secondary மின்னஞ்சலும் ஹேக் செய்ய வசதியாக போய் விடும் (ஒரே கடவுச்சொல்லாக இருந்தால்).


உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா! என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கீழ் பகுதியில் Last account activity: * hours ago on this computer. Details என்ற ஒரு வரி இருக்கும் இதில் நீங்கள் Details தொடுப்பை சொடுக்கினால் அதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் IP இருக்கும், மாறி இருந்து சந்தேகம் வந்தால் உங்கள் கடவுச்சொல் சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.

எல்லாவற்றையும் செய்தும் ஒண்ணுமே வேலைக்கு ஆகலை என்னங்க பண்ணுறது! அப்படின்னு தலைய சொறியறீங்களா! ஹி ஹி வேற ஒண்ணுமே பண்ண முடியாது மனச தேத்திக்கிட்டு வேற ஒரு ஐ டி யை உருவாக்கி அதையாவது பத்திரமா வைத்துக்குங்க. சரக்கடிக்கிற ஆளா இருந்தா சரக்கு போட்டு மட்டை ஆகிடுங்க, சரக்கடிக்காத ஆளா இருந்தா ஜில்லுனு மோர் குடிச்சுட்டு தூங்கிடுங்க :-))

http://www.giriblog.com/2009/10/how-to-recover-hacked-gmail-account.html


அவசியமான இலவச மென்பொருள்கள் பட்டியல்

இணைய உலாவி

http://www.mytamilish.co.cc/2009/10/blog-post_03.html

மோசில்லா பயர்பாக்ஸ்
தரவிறக்க

வீடியோ பிளேயர்

மீரோ

தரவிறக்க

விஎல்சி பிளேயர்

தரவிறக்க

MPlayer


தரவிறக்க

Media Player Classic

தரவிறக்க

இன்ஸ்டண்ட் மேசேஞ்சிங்

பிட்ஜின்

தரவிறக்க


மின்னஞ்சல்



மோசில்லா தண்டர்பெர்ட்

தரவிறக்க

செய்தி ஓடை

RSSOWL

தரவிறக்க

கோப்பு பகிவான்

Cabos

தரவிறக்க

Gnucleus

தரவிறக்க


வேர்டு பிராசசர்

ஒபன் ஆபிஸ்

தரவிறக்க

அபி வேர்டு

தரவிறக்க


போட்டோ எடிட்டி ங்

GIMP

தரவிறக்க


Paint.NET

தரவிறக்க


Inkscape

தரவிறக்க


Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"இ-தமிழன்!"


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ மனிதன்@சென்னை ♥

www.e-tamizhan.blogspot.com

Pages

எளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு

http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
(space bar -அய் தட்டவும்...!)

குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )

சற்று முன்....!

Search This Blog

Clicky Web Analytics
HTML Marquee Codes from Code-Generator.net வருக இ-தமிழன்...!

YouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...

Download youtube Video

Blog Widget by LinkWithin