மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.
புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.
http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html
மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி
மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பது பற்றியும், ஒபேரா மொபைல் உலாவி பற்றியும் ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைல் போன்களில் உபயோகிக்க சிறந்த மற்றொரு இணைய உலாவியை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.
ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
http://tvs50.blogspot.com/2010/01/intro-to-skyfire-in-tamil.html
மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்
முன்பு மொபைல் போனில் தமிழ் இணைய பக்கங்களை பார்ப்பது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். மிகுந்த வரவேற்பை பெற்றது. நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.
உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது. இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள். அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.
2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.
3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.
4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.
5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.
இதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.
இதிலும் தமிழ் இணையபக்கங்கள் நன்றாக தெரிகின்றன. அந்த வசதியை எப்படி கொண்டு வருவது என அறிந்து கொள்ள இந்த இடுகையை பார்க்கவும். மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள்.
http://tvs50.blogspot.com/2009/11/opera-mini-beta-5-intro-in-tamil.html
--- @ WiseStamp Signature. Get it now
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com