1.ஆட்-பிளாக் பிளஸ்(Ad Block Plus):
இணையதளங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க சிறந்த வழி இந்த ஆட்-பிளாக் பிளஸ் ஆட்ஆன்.இதனால் இணையதளங்கள் இன்னும் வேகமாக இயங்கும்.
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
2.கலர்புல் டேப்ஸ்(Colourful Tabs):
ஒரே நேரத்தில் பல டேப்களை(Tabs) திறந்து வேலை செய்யும் நபரா
நீங்கள் ?? அப்படியெனில் இது உங்களுக்கு கட்டாயம் தேவை.
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
3.ஐ.ஈ டேப்(IE Tab):
சில இணையதளங்கள் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தான் ஒழுங்காக வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும்.அத்தகைய இணைய தளங்களை பார்ப்பதற்காக உபயோகப்படும் ஆட்ஆன் இது.
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
4.பிளாக்பாக்ஸ் (Flagfox):
நீங்கள் பார்க்கும் தளம் எந்த நாட்டில் இருந்து இயங்குகின்றது என்பதை காண்பிக்கும் ஆட்ஆன் இது.
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
5.ஸ்கிப் ஸ்க்ரீன்(Skip Screen)
நீங்கள் ராபிட்ஷேர் , மெகாஅப்லோட் போன்ற தளங்களை பயன்படுத்துபவரா? அப்படியெனில் இந்த ஆட்ஆன் உங்கள் காத்திருக்கும் நேரத்தினை மிச்சப்படுத்தும்.நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
http://pudhiyayugam.blogspot.com/2009/09/blog-post.html
வருங்கால கணினிகள் ...!
இவைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?
நல்லா பாருங்க...
கேமரா பென்? , வெப் கேம் ?
என்னங்க தெரியலையா ?
இதுதான் அடுத்த தலைமுறை கணினி.நம்ப முடியலையா?
இந்த படத்தை பாருங்க ...
இந்த புரட்சிகரமான மற்றும் வித்தியசமான கணினியை
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
BlueTooth அடிப்படையாகக்கொண்டு இக்கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எல்லாம் ஒளிமயம்...(keyboard,monitor).நமது கணினிகளை வெகு விரைவில் , அடுத்த தலைமுறை கணினிகள் ஆட்கொள்ளும் என்றால் அது மிகையல்ல...
எனக்கு மின்னஞ்சலில் வந்த இதை உங்களுடன் பகிர்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்...நன்றி
http://gramathan.blogspot.com/2009/09/blog-post.html
நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆக இருந்தால் உங்க மனைவியிடம் இப்படி பேசுங்கள்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER
http://tamiljokes4u.blogspot.com/2009/09/blog-post_5398.html
ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ
இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.
இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.
புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.
http://puthumaitech.blogspot.com/2009/09/blog-post_07.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com