உங்க கமெண்ட் தனித்து தெரிய
ஒரு சிலருடைய ப்ளாகில் நீங்கள் இதை கவனித்து இருக்கலாம். அதில் பதிவரின் கமெண்ட் மட்டும் தனித்து தனி கலரில் தெரியும்! அதை நீங்களும் உங்கள் ப்ளாகில் சுலபமாக வர செய்யலாம். மேலே படியுங்கள்.
இந்த வசதி, தனி விண்டோவில் கமெண்ட் தெரியும் போது தெரியாது. ஆனால், 'embeded below post' ஆப்ஷன் கொடுத்திருந்தால் தெரியும்.
இதை செய்ய, Dashboard – Lay Out – Edit html போய், Expand widgets என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பொதுவாக, நம் ப்ளாகின் html code ல் கை வைக்கும் முன்பாக அதை பேக் அப் எடுத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் என்றால், html code முழுவதுமாக Copy செய்து ஒரு நோட் பேடில் Paste பண்ணி, Save செய்து கொள்ள வேண்டும். நம்மை அறியாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், நம் டெம்ப்ளேட்டை சரி செய்ய, இந்த பேக் அப்பை உபயோகித்துக் கொள்ளலாம். இப்போ, பேக் அப் எடுத்து வைத்து கொண்டீர்களா? இனி, கீழ் காணும் கோடை தேடுங்கள்.
<b:if cond='data:comment.isDeleted'><data:comment.body/><b:else/>
<data:comment.body/>
</b:if>

இப்போ, இதற்கு பதிலாக, இதை அழித்து விட்டு, கீழ்காணும் கோடை பேஸ்ட் செய்யுங்கள்.

<b:if cond='data:comment.isDeleted'><data:comment.body/><b:else/><b:if cond='data:comment.author == data:post.author'>

<data:comment.body/>

<b:else/>
<data:comment.body/>
</b:if></b:if>

இதில், color என்று இருக்கும் இடத்திலும், background color என்னும் இடத்திலும் உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு கலருடைய ஹெக்ஸ் கோடும் போட்டுக் கொள்ளலாம்.
இப்போ, உங்கள் கருத்துரை மட்டும், மற்றவரிடமிருந்து தனித்து தெரியும்.
http://sumazla.blogspot.com/2009/09/blog-post_06.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com