இணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…!
மின்னஞ்சல்களும் , உடனடி தகவல் தொடர்பு சேவைகளும் மலிந்து விட்டதொரு சூழலிலும் கூட தொலைநகல் ( FAX ) சேவை குறைந்து போய் விட்டாலும் இன்னமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
காரணம் , மின்னஞ்சல்கள் எளிதில் கிடைப்பதாலும் , உங்களுடைய உண்மைத் தன்மையை பிரதிபலிக்காததாலும் இன்னும் பல வணிக நிறுவனங்கள் தொலைநகலே நம்புகின்றன.
தொலைநகல்களில் ஸ்பேம் செய்ய வாய்ப்பிருந்தாலும் மின்னஞ்சல்களை விட மிகக் குறைந்த அளவே வாய்ப்பிருக்கிறது. அது தவிர்த்து தொடர்ச்சியான மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களால் சலித்துப் போன கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதெல்லாம் தமது ஸ்பேம் கட்டுப்பாட்டை இன்னமும் நெருக்கியிருக்கின்றன.
அதனால் நமது நியாயமான வணிக வேண்டுகோள்களைக் கூட அந்நிறுவனங்களின் ஸ்பேம் தடுப்பு மென்பொருட்கள் தூக்கி குப்பையில் போட்டு விடுகின்றன. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் அவ்வாறு தூக்கி வீசப்பட்ட மின்னஞ்சல்கள் கவனிப்பாரின்றி காணாமல் போகின்றன…..
அதனால் முக்கிய வியாபார அணுகுமுறைகளுக்கு தொலைநகல் எனப்படும் ஃபேக்ஸ் வசதியே மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால் இத்தகைய ஃபேக்ஸ் வசதிகளுக்கு நமக்கென ஒரு தொலைபேசி இணைப்பும் , தொலைநகல் கருவியும் வேண்டும்….அத்துடன் , அதனைப் பராமரிக்க ஒரு அலுவலக உதவியாளரும் சர்வ நிச்சயமாகத் தேவை….
நீங்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்களிலோ , ப்ளாக்பெர்ரி போன்ற முன்னேறிய தலைமுறை போன்களிலே கூட பேக்ஸ் வசதி இல்லை……..மின்னஞ்சல்களே உள்ளன….!
அனேக ஃபேக்ஸ் தாள்கள் மாதக்கணக்கில் நீங்கள் பைல் செய்து வைக்கும் போது எழுத்துக்கள் ஏதுமின்றி அழிந்து போவதும் சகஜம். முக்கியமான கோப்பொன்றை நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம். அந்தக் காகிதம் பத்திரமாகத்தான் இருக்கும்…ஆனால் அதில் உள்ள தகவல்கள்?????
இத்தனை தொல்லைக்கும் ஒரு எளிய தீர்வாகத்தான் மின்னஞ்சல் மூலம் தொலைநகல் அனுப்பும் சேவைகள் மலிந்து கிடைக்கின்றன…..அவற்றில் சில சேவைகளை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்…
நீங்கள் உங்கள் மின்னஞ்சல்கள் மூலமே தொலைநகல்களை அனுப்புவதற்கும் , மின்னஞ்சல்கள் மூலமே தொலைநகல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த மின்னஞ்சல் மூலமான தொலைநகல் சேவை வெகுவாக உதவுகிறது..... அதன் மூலம் மின்னஞ்சல்களை / இணையத்தைப் உபயோக்கிக்கும் வசதி பெற்ற எந்தவொரு கணினி , தொலைபேசியிலிருந்தும் நீங்கள் இந்த தொலைநகல் வசதியை உபயோகித்துக்கொள்ள முடியும்!!!
மை பேக்ஸ் (www.myfax.com)
வெகுவாக அறியப்பட்ட ஒரு மின்ன்ஞ்சல் தொலைநகல் நிறுவனம். நிறைய நாடுகளில் உள்ளூர் பேக்ஸ் நம்பர்களைக் கூட தருகிறார்கள்….. பத்து ($10) அமெரிக்க டாலர்களைக் மாதக்கட்டணமாகச் செலுத்தினால் 100 பக்கம் வெளிச்செல்லும் தொலைநகல்களையும் , 200 பக்கம் உட்புகும் தொலைநகல்களையும் தருகிறார்கள்……
டிரஸ்ட் பேக்ஸ் (www.trustfax.com)
இந்த நிறுவனம் மாதக்கட்டணம் 9.95 அமெரிக்க டாலர்களுக்கு 125 பக்கம் வெளிச்செல்லும் தொலைநகல்களையும் , 400 பக்கம் உட்புகும் தொலைநகல்களையும் தருகிறார்கள்….
மெட்ரோ ஹை ஸ்பீடு ( metro hi speed)
இந்த நிறுவனம் மாதக்கட்டணம் 12.95 அமெரிக்க டாலர்களுக்கு ஒருங்கிணைந்த ( வெளிசெல் மற்றும் உட்புகு) 1000 பக்கங்களைத் தருகிறார்கள்.
அதுமட்டுமின்றி , மைபேக்ஸ் தளம் இலவசமாக தொலைநகல் அனுப்பும் வசதியையும் தருகிறது.....அதற்கு இங்கே க்ளிக்குங்கள்...
இன்னும் க்ரீன்பேக்ஸ் , பேக்ஸ் இட் நைஸ் போன்ற நிறுவனங்கள் நீங்கள் அனுப்பும் , பெறும் ஒவ்வொரு பக்கங்களுக்குமான பணத்தை சார்ஜ் செய்கின்றன.
இன்னும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இணையத்தில் மிக மலிந்து காணக்கிடைக்கின்றன......!!!!!!!
அவற்றில் மிகப்பெரும்பான்மையான நிறுவனங்கள் இலவசமாக சேவைகளை ஒரு மாத காலத்திற்கு பரிசோதித்துப் பார்க்கும் வண்ணம் தருகின்றன........
இந்த வசதிகளை நீங்கள் பெறுவதற்கு இரண்டே இரண்டு தகுதிகள் தான் தேவை.
ஒன்று உங்களிடம் மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்...
இன்னொன்று உங்களிடம் ஒரு கிரடிட் கார்டு / கடன் அட்டை இருக்க வேண்டும்....
அவ்வளவே தான்!!!!!
ஆக குறைந்த கட்டணத்தில் உங்கள் வணிகத்தைப் பெருக்கிக்கொள்ளுங்கள்...
இந்தத் தகவல்களுக்காக ஒருவார காலமாக இணையத்தில் அலைந்து திரிந்து நான் பட்ட கஷ்டத்தை நமது வலையுலக நண்பர்கள் யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் இதை நமது வலைப்பூவில் வெளியிடுகிறேன்.....!!!
http://www.mathibala.com/2009/07/blog-post_14.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com