உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்!
உங்கள் கணினியில் வைரஸ்களின் தொல்லை வந்தால் நீங்கள் கண்டிப்பாய்
ஒரு ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை நாடுவீர்கள். ஆனால் உங்களின் ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் எல்லாவிதமான வைரஸ்களையும் அழித்துவிடும் என்று சொல்ல முடியாது.வேறு ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் பழையதை நீக்கி புதியதை நிறுவ வேண்டும். இப்படி இருக்கும் போது ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவாமலே இயக்கலாம் என்றால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆமாம் McAfee, Sophos, Kaspersky மற்றும் Trend engine ஆகிய இந்த நான்கு ஆன்ட்டிவைரஸ் மென்பொருள்களையும் நீங்கள் ஒரே நேரத்தில் கணினியை சோதிக்க பயன்படுத்தலாம். நீங்கள் இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதை இயக்கும் போது இவை தானாக புதிய அப்டேட் பைல்களை இறக்கிக்கொள்ளும். இதற்கு மட்டும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
இதைப்பெற : Multi-AV Scanner
1.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்.
2. "Multi_AV.Exe " என்ற கோப்பை கிளிக் செய்தால் அது C:\AV-CLS என்ற முகவரியில் சேமிக்கப்படும்.
3. அந்த போல்டரில் உள்ள Startmenu.bat அல்லது Start menu.exe என்ற கோப்பை கிளிக் செய்தால் மென்பொருளின் முதற்பக்கம் திறக்கப்படும்.
இந்த மென்பொருளில் இரண்டு விதமான முறைகள் உள்ளன.
1. ஒன்று சோதிக்க மட்டும் ( Scan only ) - இதற்கு D அழுத்தவும்
2. சோதிக்க மற்றும் அழிக்க ( Scan and Remove ) - இதற்கு R அழுத்தவும்.
பின்னர் நீங்கள் விரும்பும் ஆண்டிவைரஸ் மென்பொருளின் எண்ணைஅழுத்தினாலே போதும். உடனடியாக வைரஸ் அப்டேட் பைலை இறக்கிவிட்டு ஸ்கேன் பண்ண ஆரம்பித்துவிடும். இதில் Trend Micro மென்பொருள் மட்டும் தனி இடைமுகம் கொண்டுள்ளது. ( User Interface ).
உதாரணமாக நீங்கள் Sophos AV ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இயக்க வேண்டுமெனில் 1 என்ற எண்ணை அழுத்தினாலே போதும். பின்னர் அது ஸ்கேன் செய்யவா என்று கேட்கும். அதற்கு Ok கொடுக்கவும். பின்னர் உங்களுக்கு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்கிறிர்களா என்று கேட்கும். உங்கள் விருப்பத்தை கொடுத்தால் ஸ்கேன் பண்ண ஆரம்பித்து விடும்.
பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com