புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்
பதிவுலகில் நுழைந்த போது, எனக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் டிப்ஸ் & டிரிக்ஸ் தெரிந்து கொண்டேன். இன்று பதிவுலகில் புதிதாக நுழைபவர்கள், வெற்றி நடை போட, எனக்கு தெரிந்த சில விஷயங்களை தருகிறேன்.
http://www.blogger.com/ க்குள் சைன் இன் ஆனவுடன் தெரிவது தான் Dashboard. இதில் பல கிளை சுட்டிகள் உள்ளன. நான் சொல்லும் வழியை பின்பற்றி, நீங்கள் எளிதாக செய்யலாம்.
1.முதலாவதாக, உங்கள் ப்ளாகில் மேலே பட்டையாக இருக்கும் navigation bar ஐ தூக்கி விடுங்கள். இதனால், ஒரு வெப்சைட் போன்ற லுக் கிடைக்கும். இதை செய்ய, Dashboard - Layout - Edit Html போய், Page Structure என்ற செக்ஷனின் கீழ் எதாவது ஒரு இடத்தில் இந்த கோடை பேஸ்ட் செய்து விடவும். இப்போ அந்த பார் மறைந்து விடும்.
/* CSS to hid navigation bar */
#navbar
{
height:0px;
visibility:hidden;
display:none
}
2.உங்கள் பதிவின் தலைப்பையும் முதல் சில வரிகளை கவனமாக தேர்ந்தெடுத்து போடவும். தமிழ்மணத்தில் இணைக்கும் போது முதல் சில வரிகள் தான் அது எடுத்துக் கொள்ளும்.
3.உங்கள் போஸ்டிங் எல்லாம் உங்களுக்கு ஈமெயில் வருமாறு செய்து கொள்ளவும். எதாவது காரணத்தால் ப்ளாக் அழிந்து போனாலும், சுலபமாக போஸ்டிங்கை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு Dashboard - Settings - Email & Mobile - Email Notifications - Blog send address போய் விரும்பும் ஈமெயிலைக் கொடுத்து சேவ் செய்து விடுங்கள்.
4.அதே போல, நமக்கு வரும் கமெண்ட்ஸை நம்முடைய ஈமெயிலிலேயே படித்துக் கொள்ளலாம். இதற்கு Dashboard - settings - Comments - Comment Notification Email போய் உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் பழைய பதிவுக்கு வரும் கமெண்ட்டுகள் உங்கள் கவனத்துக்கு வராமலே போய் விட கூடும்.
5.ரீடரின் மூலம் படிப்பவருக்கு மட்டும் தெரியும் படி ஸ்பெஷல் மெஸேஜ் கொடுக்கலாம். இது ரீடரில், பதிவின் இறுதியில் தெரியும். இதற்கு, Dashboard - Settings - Site Feed - Post Feed Footer ல் போய், அதில் விரும்பும் மெஸேஜ் டைப் செய்து சேவ் செய்து விடுங்கள். அவ்வளவு தான்.
6.முதல் பக்கத்தில், இரண்டு மூன்று பதிவுகளுக்கும் மேல் தெரியாதபடி செய்தால், பக்கம் வேகமாக லோட் ஆகும். இதை செய்ய, Dashboard - Layout - page elements - Blog posts - Edit கொடுத்து, Number of posts on main page என்பதில் விரும்பும் எண்ணை கொடுங்கள். இது default ஆக 7 என்று இருக்கும்.
7.கண்டிப்பாக ப்ளாக் ஆர்ச்சீவ் உங்க ப்ளாகில் போட்டு வையுங்கள். அப்போது தான் பழைய போஸ்ட்டிங்கை புது வாசகர்கள் படிக்க முடியும். அதே போல ஃபாலோவர்ஸ் லின்க்கையும் போட்டு வைத்தால் தான், ப்ளாக் பேர் மறந்து விட்டால் கூட, ஃபாலோ பண்ணுபவர்கள் எளிதாக படிக்க முடியும்.
8.சமீபத்திய பதிவுகள், மற்றும் சமீபத்திய கருத்துக்கள் விட்ஜெட்ஸை சைடு பாரில் போட்டு வையுங்கள். எளிதாக இதை செய்ய, Dashboard - Lay out - Add a Gadget - Feed போய், http://sumazla.blogspot.com/feeds/posts/default என்று கொடுத்தால், சமீபத்திய பதிவுகள் கிடைக்கும். அதே போல, http://sumazla.blogspot.com/feeds/comments/default என்று கொடுத்தால், சமீபத்திய கருத்துகள் கிடைக்கும். கவனம், இதில் sumazla என்று இருப்பதற்கு பதில், உங்க ப்ளாக் பேரை போட்டு விடுங்கள்.
9.நீங்கள் நிறைய ப்ளாக் வைத்திருந்தாலும், உங்க ப்ளாக் ப்ரொஃபைலில் முதன்மையான முக்கிய ப்ளாக் மட்டும் தெரியும்படி செய்தால், புது வாசகர்களுக்கு குழப்பம் இருக்காது. முக்கிய ப்ளாகில் மற்ற ப்ளாகுக்கு லின்க் கொடுத்து விடலாம். இதை செய்ய, Dashboard - edit profile - select blogs to display போய், விரும்பியதை மட்டும் டிக் செய்து சேவ் செய்து விடவும்.
10. கடைசியாக நிறைய கமெண்ட்ஸ் கிடைக்க, Dashboard - Settings - Comments போய், who can comment என்று இருப்பதில் Any one என்று தேர்வு செய்யுங்கள். comment form message என்பதில், 'பின்னூட்டமிட்டு செல்லுங்கள்' போல, ஏதேனும் ஒரு மெஸேஜ் டைப் செய்யுங்கள். இது உங்க கமெண்ட் ஃபார்மின் மேல் தோன்றும். அடுத்து, Show word verification for comments என்பதில் No கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் Captcha டைப் செய்ய சொல்லி எரிச்சலூட்டும்.
11. நான் வைத்திருப்பது போல கூகுள் எழுத்துரு மாற்றியை வைத்துக் கொண்டால், புதியவர்கள் தமிழில் கமெண்ட் செய்ய வசதியாக இருக்கும். இதை செய்ய, Dashboard - lay out - Add a gadget போய், html/javascript என்பதின் கீழ், இந்த கோடை பேஸ்ட் செய்து விடுங்கள். இதில், W என்று இருப்பது அகலம், h என்று இருப்பது உயரம். இதை உங்கள் ப்ளாகுக்கேற்றபடி மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.
<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/
103159279678197997651/googleindictransliteration.xml&
synd=open&w=370&h=170&title=Google+Indic+Transliterator&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>
12. நீங்கள் போஸ்டிங் போடும் போதும், போட்டோஸ் அப்லோட் செய்யும் போதும், Edit Html என்று போஸ்டிங் விண்டோவில் தெரிவதை க்ளிக் செய்து, html mode ல் போய் செய்தால், தலையை சுற்றவைக்கும் ஃபார்மட்டிங் பிழைகள் தோன்றாது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். வேறு விபரங்கள் தேவைப்பட்டாலும், கேளுங்கள். தெரிந்தவரை சொல்கிறேன்.
http://sumazla.blogspot.com/2009/08/blog-post_6698.html
நண்பரே நான் ப்ளாக் ஒன்று அமைத்து கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஉங்களது புது பதிவர்களுக்கு சில டிப்ஸ் புது பதிவர்களுக்கு சில டிப்ஸ் வாசித்தேன். அதில் //navigation bar ஐ தூக்கி விடுங்கள். இதனால், ஒரு வெப்சைட் போன்ற லுக் கிடைக்கும். இதை செய்ய, Dashboard - Layout - Edit Html போய், Page Structure என்ற செக்ஷனின் கீழ் எதாவது ஒரு இடத்தில் இந்த கோடை பேஸ்ட் செய்து விடவும். இப்போ அந்த பார் மறைந்து விடும்.
// என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால் Edit Html போனால் , Page Structure என்று இல்லை. மாறாக Backup / Restore Template , Edit Template , போன்றவையே உள்ளன.வேறாக Page Elements உள்ளது ஆனால் அங்கு கோடை பேஸ்ட் செய்ய இடம் இல்லை. தயவு செய்து கொஞ்சம் விளக்க முடியுமா? எனது மெயில் jeevendrandotyahoo.com