மொபைல் போனுக்கு வைரஸ் பாதுகாப்புடெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான வைரஸ் பாதுகாப்பு தொகுப்புகள் வந்த அளவிற்கு மொபைல் பாதுகாப்பிற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் வைரஸ்கள் மொபைல் போனைத் தாக்கத் தொடங்கிவிட்டன. ஸ்மார்ட் போன்களில் வைரஸ், வோர்ம், ட்ரோஜான் எனப் பலவகை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. ஓரிரு நிறுவனங்கள் இத்தகைய வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு புரோகிராம்களை அளித்து வருகின்றன.
இந்நிலையில் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எப்–செக்யூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மொபைல் போன் பாதுகாப்பு வசதிகளை இந்தியாவில் தர முன்வந்துள்ளது. எப்–செக்யூர் நிறுவனத்தின் பாதுகாப்பு தொகுப்புகளை இந்தியாவில் வழங்கும் முதல் நிறுவனம் டாட்டாவாகும். இந்த ஒப்பந்தத்தின் பேரில் வழங்கப்படும் தொகுப்பில் இணைந்த பயர்வால், மால்வேர் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் தொகுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் வைரஸ்களைத் தடுத்து நிறுத்தும் திறன் ஆகியவற்றை இந்த தொகுப்பு தருகிறது. ஸ்மார்ட் போன்களுக்கு இத்தகைய பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. இந்த தொகுப்பினைக் கீழ்க்காணும் இணைய தளங்களில் இருந்து ஜி.பி. ஆர்.எஸ். வசதி உள்ள ஸ்மார்ட் போன்களுக்கு நேரடியாகப் பெறலாம். இந்த தொகுப்பு விண்டோஸ் மொபைல், சிம்பியன், யு.ஐ.க்யூ ஆகிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் வேலை செய்கிறது. இந்த தொகுப்பில் உள்ள பயர்வால் வசதியை எளிதாக இன்ஸ்டால் செய்திடலாம். வை–பி வசதி உள்ள இடங்களில் பொது நெட்வொர்க்கில் இணைந்து இயங்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ் தொல்லைகள் நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இவற்றையும் , ஸ்பைவேர் மற்றும் ஒரு மொபைல் போனிலிருந்து செல்லும் கால்கள், எஸ்.எம்.எஸ் களைக் கண்காணிக்கும் புரோகிராம்களையும் இந்த தொகுப்பு கண்டறிந்து தடுக்கிறது. இதன் இன்னொரு சிறப்பு அம்சம் மொபைல் போனில் உள்ள மெமரி கார்டுகளைத் தானாக அடிக்கடி ஸ்கேனிங் செய்வதுதான். ஸ்கேனிங் போது பைல் ஏதேனும் தாக்கப்பட்டதாகத் தெரிந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் இது பதுக்கி வைக்கிறது. இதனால் மற்ற பைல் கள் பாதுகாக்கப்படுகின்றன.
அதே போல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தானாகவே தன்னை அப்டேட் செய்து கொள்கிறது. மொபைல் போன் பயன்படுத்துபவர் இதற்கென எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. எப்போதெல்லாம் ஜி.பி.ஆர்.எஸ்., யு.எம்.டி.எஸ்., வை–பி, டபிள்யூ லேன் ஆகிய நெட்வொர்க்குகளில் ஒரு ஸ்மார்ட் போன் இணைகிறதோ அப்போதெல்லாம் இந்த தொகுப்பு அந்த இணைப்பிற் கான சரியான பாதுகாப்பினை இயக்குகிறது. இல்லை எனில் தன்னை அப்டேட் செய்து கொள்கிறது. ஓராண்டுக்கு இந்த பாதுகாப்பு தொகுப்பினைப் பயன்படுத்த ரூ.999 கட்டணமாகப் பெறப்படுகிறது. அறிமுகச் சலுகையாக இந்த தொகுப்பினைப் பெறுபவர்களுக்கு இதற் கான விலையில் 30% தள்ளுபடியினை டாட்டா கம்யூனிகேஷன்ஸ் வழங்குகிறது.மேலும் 30 நாட்கள் இலவசமாகச் சோதித்துப் பார்க்கவும் அனுமதி கிடைக்கிறது.
http://www.dinamalar.com/weeklys/mmalarnewsdetail.asp?news_id=302&dt=08-10-09
மொபைல் போனுக்கு வைரஸ் பாதுகாப்பு
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com