ப்ளாகில் நம் குரல்.
.நாம் பல பேர் பாத்ரூம் பாடகர்களாக இருப்போம். நம் குரல் ப்ளாகில் ஒலித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போருக்கு ஒரு இலவச வசதி இருக்கிறது. சுலபமாக நம் குரலை ஒலிபரப்பலாம். இதோ முதலில் என் குரலைக் கேட்டு விட்டு, தொடர்ந்து படியுங்கள்.
முதலில், உங்கள் பாட்டையோ பேச்சையோ, விண்டோஸ் சவுண்ட் ரெக்கார்டர் மூலமாக ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள். நான் பார்த்தவரை இதில் செய்தால் தான், அப்லோடுக்கு ஏற்றபடி குட்டி ஃபைலாகக் கிடைக்கிறது.
அடுத்து, http://www.archive.org/ சென்று ஒரு கணக்கு துவக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் தளம் ஆகும். அதில் லாகின் செய்தால், கீழே காணும் விண்டோ தோன்றும். open id url எனப்படும், உங்க ப்ளாக் ஐடி கொடுத்தும், உள்ளே நுழையலாம்.
இதில் Audio என்று இருப்பதைக் க்ளிக் செய்யுங்கள். இப்போ கீழே காணும் விண்டோ தோன்றும்.
மேலே கண்ட விண்டோ தோன்றியவுடன், அதில் கீழே இருக்கும், contribute your audio என்று இருப்பதை க்ளிக்குங்கள். இப்போ கீழே காணும் படி டைட்டில் கேட்கும். இப்போ, ஏதாவது ஒரு பெயர் கொடுங்கள். அது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருப்பதாக இருக்கக்கூடாது.
கவனம் இதில் உங்களுக்கென்று ஒரு பக்கம் எல்லாம் தர மாட்டார்கள். அதனால், ஒரு naming convention ஐ பின் பற்றுங்கள். அதாவது, sumazla என்றால், ஃபைல் பெயருக்கு sumazla 1, அல்லது sumazla A போல தந்தால், பின்னால் தேடி எடுக்க சுலபம்.
நெக்ஸ்ட் என்பதை க்ளிக்கினால், கீழ் கண்ட படி தோன்றும், இதில், title ல் அதே title, description என்ற இடத்தில், ஏதாவது ஓரிரு வார்த்தைகள், keywords என்னும் இடத்தில், உங்கள் ஒலிபரப்பு சம்பந்தமாக ஏதேனும் ஓரிரு வார்த்தைகள், அடுத்து author என்ற இடத்தில் உங்கள் பெயர் ஆகியவை கொடுத்து விடுங்கள். அடுத்து choose liscence என்று சிவப்பு நிறத்தில் இருப்பதை க்ளிக்குங்கள்.
அதாவது, உங்க work பொது என்றால், யார் வேண்டுமானாலும் மாற்றலாம். அதனால், திறக்கும் விண்டோவில், இரண்டு ஆப்ஷனுக்கும் no, no என்று கொடுத்து, உங்கள் நாட்டுப் பெயரைத் தேர்ந்தெடுத்து, select a liscence என்று இருப்பதை க்ளிக்குங்கள்.
இப்போ, அது மறைந்து, மீண்டும் பழைய விண்டோவில் நிற்போம். இப்போ browse செய்து, சேமித்து வைத்திருக்கும், ஃபைலை எடுத்துக் கொள்ளுங்கள். type என்பதில் ஆடியோ என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இது சோதனைக்காக செய்து பார்ப்பதென்றால், (remove after 30 days) என்று இருப்பதை டிக் செய்து கொள்ளுங்கள். ஒரு முறை அப்லோட் செய்து விட்டால், அது அழியாது. அதனால் இதைத் தேர்ந்தெடுத்தால், 30 நாட்கள் முடிந்தவுடன் தானே அழிந்து போகும்.
இனி அப்லோட் ஃபைல்ஸ் கொடுத்தால், உங்களுக்கான பக்கம் உருவாகிவிடும். கவனமாக அதை, ஓரிடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஃபைலை அது பல வடிவங்களில் மாற்ற, சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதனால், விண்டோவை இனி மூடிவிடலாம். இனி, ஒரு மணி நேரம் கழித்து, நாம் காப்பி எடுத்து வைத்திருக்கும் urlஐ பிரவுசரில் கொடுத்தால், கீழ்காணும்படி நமக்கான பக்கம் தோன்றும்.
அதில் தெரியும் ப்ளேயரை முதலில் பாட விட்டு, பின், கீழே தெரியும் embed this என்பதை க்ளிக்கினால், கோடிங்ஸ் தெரியும். அதைக் கீழ் காணும் படி, காப்பி செய்து, நம் பதிவின் இடையே பேஸ்ட் செய்தால், வேலை முடிந்தது.
இதற்கு இன்னொரு குறுக்கு வழியும் இருக்கிறது. அதாவது, நமக்கான பக்கம் உருவானவுடனே, அதை நோட் செய்து கொள்ளுங்கள். உதாரணமாக: http://www.archive.org/details/sumazla என்பதாக உள்ளது அல்லவா? இதில் details என்பதை download என்று மாற்றிக் கொள்ளுங்கள். நான் அப்லோட் செய்த ஃபைலை கம்ப்யூட்டரில் உருவாக்கும் போது சேமித்த பெயர் varuga எனபதாகும். இப்போ, அதனோடு, _vbr.mp3 என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போ, இது தான் உங்க நேரடி லின்க்.
http://www.archive.org/download/sumazla/varuga_vbr.mp3
இனி, கீழே காணும் code ஐ பத்திரப்படுத்திக் கொண்டு, அதில் சிவப்பு நிறத்தில் தெரிவதற்கு பதிலாக உங்க நேரடி லின்க் கொடுத்தால் வேலை முடிந்தது.
<embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" width="300" height="52" type="application/x-shockwave-flash" flashvars="valid_sample_rate=true&external_url= http://www.archive.org/download/sumazla/varuga_vbr.mp3" wmode="transparent" allowscriptaccess="always" quality="high"></embed>
மேலே காணும் கோடை உங்க பதிவின் இடையேவோ, அல்லது add a gadget - html/java script மூலமாகவோ புகுத்தி, வழிய விடுங்கள், உங்கள் பாடலை!
இதில் ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் என எல்லா விதமான ஃபைலையும் அப்லோட் செய்யலாம், இலவசமாக!
பாடலோ, கவிதையோ, பேச்சோ, உங்கள் குரலைப் பதிந்துவிட்டு, எனக்குச் சொல்லுங்களே பின்னூட்டத்தில் வழியாக, நானும் கேட்கிறேன்.
http://sumazla.blogspot.com/2009/07/embed-pluginspage.html
இவ்ளோ கஷ்டம் வேண்டாம் தலைவரே. உங்கள் குரலை எம்பீத்ரீ யாக ரெகார்ட் செய்து ஜெபீஜீ ஆகா ரீநேம் செய்து உங்கள் பதிவில் போடுங்கள். டவுன்லோட் செய்பவர்கள் எக்ச்டேஷன் மாற்றி விட்டு பிளே செய்யலாம். இது போல போட்ட என் ரீம்க்ஸ் ஐ கேட்டுப் பாருங்கள் (ரீமிக்ஸ் செய்வது எப்படி?)
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com