இலவச இமெயில் தரும் இன்டர்நெட் வெப்சைட்களில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் எந்த யூசர் பெயரும் உடனே நமக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொன்றாகப் போட்டு பார்க்க வேண்டியதுள்ளது. இறுதியில் அது தரும் பெயரில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழியே இல்லையா?
ஏனென்றால் அது கொடுக்கும் யூசர் நேமைப் பயன்படுத்தினால் நமக்கு அது மறந்து போகிறது.
வேறு வழியில்லை. சில பெயர்களில் பல மாணவர்கள் ஒரு பள்ளியில் இருக்கலாம். ஆனால் இணைய தளம் தரும் அக்கவுண்ட்டில் ஒரு பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். இல்லை என்றால் கடிதங்கள் முகவரி மாறிப் போய்விடுமே. எனவே வித்தியாசமான முறையில் உங்கள் யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த தளம் கொடுக்கும் பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்வியைப் படித்தவுடன் இணைய தளம் ஒன்று நினைவிற்கு வருகிறது. இது எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தெரியாது. வித்தியாசமான முறையில் இயங்குவதால் அது குறித்து உங்களுக்குத் தகவல் தருகிறேன். அந்த தளத்தின் பெயர்
http://namechk.comஎன்பதாகும். இந்த தளம் சென்று உங்களுக்குப் பிடித்தமான யூசர் நேம் சில தளங்களில் கிடைக்குமா என்பதனை அறிந்து கொள்ளலாம். பெயரை டைப் செய்து செக் என்ற இடத்தில் கிளிக் செய்தால் அது 122 வெப்சைட்டுகளுக்குச் சென்று அங்கு உங்கள் பெயரை யூசர் நேமாகப் பயன் படுத்த முடியுமா என்று பார்த்து பதில் அளிக்கிறது. முதலில் பிரபலமான வெப்சைட்டுகளில் மட்டும் உங்கள் பெயருக்கு இடம் இருக்குமா என்று காட்டுகிறது. நீங்கள் அனைத்தும் அறிய ஆவலாய் இருந்தால் அதற்கான பட்டனில் கிளிக் செய்தால் 122 தளங்கள் பெயரும் எதில் உங்கள் பெயருக்கு இடம் உள்ளது என்றும் காட்டும்.
இன்டர்நெட்டைக் கண்ட்ரோல் செய்வது யார்? ஐ.நா. சபை போல ஏதாவது குழு உள்ளதா? எந்த நாட்டிற்கு இதில் அதிக அதிகாரம் உண்டு?
இன்டர்நெட் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இன்டர்நெட் தனி ஒருவருக்குச் சொந்தமில்லை. என்ன இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் என்று நினைக்கிறீர்களா? ஆம், எந்த ஒரு தனி நாட்டிற்கும் இது சொந்தமில்லை. இன்டர்நெட்டை The World Wide Web Consortium என்ற அமைப்பு தான் கண்ட்ரோல் செய்கிறது. இதனை ஙி3இ என்றும் அழைப்பார்கள். இது பன்னாட்டளவிலான ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இன்டர்நெட்டின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் கவனம் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன.
இவை ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் நாடு ஒன்றில் கூடி இன்டர்நெட் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பார்கள். அங்கு பல முடிவுகள் எடுக்கப்படும். மேலும் அவ்வப்போது சில முடிவுகளும் எடுக்கப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்படும். HTTP, FTP, HTML, PHP மற்றும் அகுக என்றெல்லாம் இன்டர்நெட் வெப்சைட் குறித்து பேசுகிறோம் அல்லவா? இவற்றை வரையறை செய்வது இதுதான். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சுருக்கமான பெயர் தரப்படுகிறது அல்லவா! அவற்றை முடிவு செய்வதும் இந்த அமைப்புதான். இணையப் பெயர்கள் எப்படி இருக்க வேண்டும் (இந்தியாவிற்கு in ) என்று வரையறை செய்வதில் இருந்து இன்டர்நெட் டிராபிக் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் இந்த அமைப்பு முடிவெடுத்துச் செயல்படுத்துகிறது. இதற்கு இன்டர்நெட் தொடர்பான பல நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த அமைப்பு ஜனநாயக ரீதியாக, எந்த ஒரு நாட்டையும் சாராமல், முடிவெடுப்பதனால்தான் உலகின் அனைத்து குடிமக்களும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடிகிறது.
http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=776&dt=08-10-09
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com